Lankamuslim.org

புத்தளத்துக்கு இரண்டு புதிய உள்ளூராட்சி மன்றங்கள்

leave a comment »

எமது புத்தளம் செய்தியாளர்: வடமேல் மாகாணத்தில் மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்களை புதிதாக ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக வடமேல் மாகாண தலமைச்சர் அத்துல விஜேசிங்க தெவித்துள்ளார். புதிதாக ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் புத்தளம் மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி மன்றங்களும் குருணாகல் மாவட்டத்தில் ஒன்றுமாக உருவாக்கப்படவுள்ள என்று அறிய முடிகின்றது.

புத்தளம் மாவட்டத்தில் மஹவெல மற்றும் பள்ளம பிரதேச சபைகளும், குருணாகல் மாவட்டத்தில் பனு கொட்டுவ பிரதேச சபையும் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள உள்ளூராட்சி மன்றங்களாகும் தற்போது வடமேல் மாகாணத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபைகள் மற்றும் 30 பிரதேச சபைகள் செயற்படுவதோடு இவற்றில் அதிகமானவை குருணாகல் மாவட்டத்திலேயே உள்ளமை குறிப் பிடத்தக்கது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா ஆப்தீன் புத்தளம் தொகுதியில் நிருவாக அலகுளில் பெரியதோர் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்று சில மாதங்களுக்கு முன்னர் எமக்கு தெரிவித்திருந்த கருத்துகளை இங்கு தருகின்றோம் :

அவர்கள் தெரிவித்த முக்கிய விடையங்கள் இங்கு தருகின்றோம் புத்தளம் தொகுதியில் வாழ்கின்ற எமது மக்களினுடைய நிருவாக அலகுளில் பெரியதோர் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு மக்களின் தொகுதி புத்தளமாக இருக்கின்ற போது அவர்களுடைய பிரதேச செயலகம் ஆனமடுவைத் தொகுதியிலும், அவர்களினுடைய பிரதேச சபை ஆராச்சிகட்டுவ சிலாபத் தொகுதியிலும் காணப்படுகின்றது. இவ்வாறு புத்தளம் மாவட்டத்திலுள்ள ஒரு பிரதேசம் மூன்று தொகுதிகளிலும் பிரிக்கப்பட்டிருப்பது ஒர் அநியாயம.

அதேபோன்று புத்தளத்து தொகுதியிலிருக்கின்ற அக்கரைப்பற்று கடையாமோட்டை பிரதேசம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அவர்களுடைய பிரதேச செயலகம் முந்தலில் அதுவும் ஆனமடுவை தொகுதியில் அமைந்துள்ளது. முந்தல் பிரதேச செயலகம் என்பது 31 கிராம சேவர் பிரிவுகளைக் கொண்டது.

இதில் 24 கிராம சேவகர் பிரிவு புத்தளம் தேர்தல் தொகுதிக்கும் 7 கிராம சேவகர் பிரிவு ஆனமடுவை தொகுதிக்குள்ளும் காணப்படுகின்றன. ஆனால் 24 கிராம சேவகர் பிரிவில் வாழுகின்ற மக்கள் ஆனமடுவை தொகுதிக்குச் செல்வதென்பது அநியாயமாகும்.

அதே போன்று இந்த விடயத்தில் 2006ஆம் அண்டு நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் புதிய பிரதேச செயலகம் கடையாமோட்டையில் வழங்குவதற்கான அங்கீகாரமும், அனுமதியும் வழங்கப்பட் நிலையில் அது இன்று வரையில் வர்த்தமானி அறிவித்தல் விடப்படாது முடங்கிக்கிடப்பது பெரியதோர் அநியாயமாக இருக்கிறது.

அதே போன்று இந்த பிரதேசத்திலே இருக்கின்ற கற்பிட்டி பிரதேசசபை என்பது இலங்கை வரலாற்றில் நீண்டதோர் பிரதேசசபை 70 – 76 கிலோ மீற்றர்களைக் கொண்டது. ஒரு முனையில் கற்பிட்டியும், அடுத்த முணையில் ஆண்டிமுணை செல்வபுரம் கிராமமும் அமைந்திருக்கிறது.

ஆனால் ஆண்டிமுணை கிராமத்திலே வாழுகின்ற மக்கள் கற்பிட்டி பிரதேசத்திற்குச் செல்வதாக இருந்தால் 3½ – 4 மணித்தியாலங்கள் செலவிடவேண்டிய சூழ்நிலையில உள்ளனர். ஆனால் அந்த மக்கள் கொழும்பு மாநகர சபைக்கு செல்வதாக இருந்தால் 2 மணித்தியாலங்களில் செல்லக்கூடிய சூழ்நிலை இருப்பதை உங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இவ்வாறு பல சிரமங்களை எதிர் கொள்ளும் மக்களை கொழும்பு மாநகர சபையுடன் இணைப்பது பொருத்தமென கருதுகின்ற ஒரு வேதனையான சூழ்நிலை இருக்கின்றது. என்பதையும் இந்த இடத்திலேயே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேபோன்று இங்கு இருக்கின்ற பிரதேச செயலகங்களில் செயலாளர்கள் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர்களாக இருந்தாலும் அந்த பிரதேச செயலாளர்கள் தமிழ் மொழியில் பேசாமல் சிங்கள மொழியில் பேசுவதனை நாங்கள் அவதானிக்க முடிகின்றது.

ஆனால் 5 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு அதிமேதகு ஜனாதிபதி சுற்று நிருபம் மூலமாக, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேசங்கள் தமிழ் மொழியை அரச கரும மொழியாக பிரகடனப்படுத்தக் கூறியும் இன்றுவரை அது நடைமுறைப்படுத்தாமல் சிங்கள மொழியிலேயே இவற்றை கொண்டு செல்வதையிட்டு மக்கள் வேதனை அடைகின்றனர்.

இந்த நிலையில் தான் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள், பாதிப்புகள் இருப்பதன் காரணமாக உருவாக்கப்பட்டதுதான் 13ஆவது சட்ட தீர்த்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் அது இன்று வரை அந்த மாகாண சபையினூடாக எந்த நியாயங்கள் நடைபெறாமல் இருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் எமக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 இல் 2:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: