Lankamuslim.org

சிறுபான்மையினர் ஒருவர் பிரதமராக முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்

leave a comment »

நூற்றுக்கு ஒரு வீதமாக இருக்கின்ற சீக்கியர் ஒருவர் இந்தியாவில் பிரதமராக பதவி வகிக்க முடிந்தபோதும் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இலங்கையின் பிரதமராக முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி திஸநாயக்கா தெரிவித்தார்.கண்டி, மட்டவளை வை.எம்.எம்.ஏ இயக்கத்தினர் மட்டவளை மதீனா தேசியப்பாடசாலையில் ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாயற்றுகையில் நாங்கள் எமது நாட்டை இன,மத பேதமற்ற நாடாக மாற்றவேண்டும் ஆசியாவில் டிமிகவும் கூடிய கல்வித்தரத்தைக் கொண்ட நாடாக்க முடிந்த எமக்கு இது கடினமான விடயம் அல்ல. இந்தியாவில் 274 மதங்கள் இருக்கின்றன. பிரதான மதங்கள் 72 இருக்கின்றன. இன்றும் இந்தியாவில் ஆட்சிபுரியும் கட்சியின் தலைவியாக இருப்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவின் பிரதமர் நாட்டின் ஒருசதவிகிதம் மட்டும் இருக்கின்ற சீக்கிய இனத்தவர். ஆனால் இது எதுவும் இந்திய மக்களுக்கு பிரச்சினை இல்லை.

ஆனால் இலங்கையில் சிங்களவரல்லாத ஒருவர் தலைமைத்துவத்திற்கு வரமுடியும் என்று கேட்டால் அது இயலாது என்றுதான் பதில் கூறவேண்டும். இது கவலைக்குரிய விடயமாகும். நாங்கள் பல்கலைக்கழகங்களை ஒருபோதும் இன, மத அடிப்படையில் பிரிக்கமாட்டோம். ஆனாலும் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் 90 சதவீதமான மாணவர்கள் முஸ்லீம்களாவார். மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் மூன்றில் ஒருபங்கு முஸ்லீம் மாணவர்கள். நாட்டின் மற்றைய பல்கலைக் கழகங்களில் இனவிகிதாசாரத்திற்கும் சமமாக அதிகமான முஸ்லீம் மாணவர்கள் இருக்கிறார்கள்.

இன்று கூடுதலான அபிவிருத்தி பணிகள் நடப்பது வடக்கு. கிழக்கு மாகாணங்களுக்கே. நாட்டின் அபிவிருத்தி வேகம் 8 சதவீதம். வடக்கு கிழக்கில் அபிவிருத்தி வேகம் 24 சதவீதம். நாங்கள் வரலாற்றில் தவறு இழைத்துவிட்டோம். அந்த தவறை மீணடும் செய்யக் கூடாதுஎன்றும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 இல் 12:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: