Lankamuslim.org

சகல இன மக்களினதும் இன மற்றும் பிரதேச சமத்துவம் பேணப்பட்டே நிதி ஒதுக்கீடுகள் வேண்டும்

leave a comment »

சகல இன மக்களினதும் இன மற்றும் பிரதேச சமத்துவம் பேணப்பட்டே எதிர்காலத்தில் அபிவிருத்திப் பணிக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும், பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கூறினார். ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்காலத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் போது இன சமத்துவம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். அந்தந்தப் பிரதேசங்களில் தமிழ் மக்களின் பிரதேசங்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் மக்களின் பிரதேசங்களாக இருந்தாலும் சரி , சிங்கள மக்களின் பிரதேசங்களாக இருந்தாலும் சரி இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சமத்துவமான அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோன்று, நகர்ப்புறம், கிராமப்புறம் என்கின்ற பார்வையும் இருக்கக்கூடாது, சகல பிரதேசங்களும் சமமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷீல் ராஜபக்ஷவின் புதிய தீர்மானத்திற்கமைய அபிவிருத்தித் திட்டங்களின் பிரேரணைகளை தயாரிப்பதற்கு பிரதேச செயலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் பஷீல் ராஜபக்ஷவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அடிப்படையில், ஏறாவூர் பிரதேசத்திற்கு ஒதுக்கப்படுகின்ற எந்தப் பணம் திரும்பிச் செல்லக் கூடாது, எதிர்காலத்தில் உள் தலையீடுகள் எதுவும் இன்றி வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்வதை பிரதேச செயலாளர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்த வருடத்திற்கான திட்ட அறிக்கைகள் ஜனவரி மாதம் தயாரிக்கப்பட வேண்டும்.என்னைப் பொறுத்தவரை ஏறாவூர் பிரதேசத்தில் 63 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஏறாவூல் வீதி சமிக்ஞைகளை இட உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் . ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ். எல்.எம். ஹனிபா, உதவி பிரதேச செயலாளர் செல்வி ஜி. நவரூபரஞ்சனி, நகர சபை பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லிம், செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் உட்பட உறுப்பினர்கள், ஏனைய திணைக்கள பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 இல் 2:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: