Lankamuslim.org

ஒலுவில் ஆலிம் சேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் நடவடிக்கை

leave a comment »

ஒலுவில் ஆலிம் சேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைத்திருப்பது தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்காக  சில தினங்களுக்கு முன்னர் ஆலீம் சேனை பிரதேசத்திற்கு கல்னை மாநகரசபையின் பிரதிமேயரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.இவ்விஜயத்தின் போது பிரபல சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் சென்றுள்ளார்.

சட்டத்தரணிகளான நிசாம்காரியப்பரும், பாயிஸ் முஸ்தபாவும் காணி உரிமையாளர்கள் என தெவிப்பவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர்.

இவ்வேளை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஒலுவில் ஆலிம் சேனை பிரதேசத்தில் இரண்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.இம்முகாம்கள் முஸ்லிம்களின் காணிகளில் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றன.இதேவேளை இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகள் வன பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமானதென்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளர்கள் எனத் தெரிவிக்கின்றவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறிப்பிட்டகாணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் .

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 இல் 2:54 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: