Lankamuslim.org

அலவி மௌலானாவின் கூற்றை கண்டித்து காத்தான்குடி சம்மேளனம் அறிக்கை

with one comment

எமது காத்தான்குடி செய்தியாளர்: ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சம்பந்தமாக அவர்களுடைய இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்கள் அவ்வப்போது முஸ்லீம்களின் மனதைப் புன்படுத்தும் விதத்தில் பல்வேறு அறிக்கைகளை விடுவதை நாம் அண்மைக் காலமாக அவதானித்து வருகின்றோம். குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லீம்களை மையப்படுத்தியதாக பல்வேறு பொய்யான, அபாண்டமான, ஆதாரமற்ற கருத்துக்களைத் வெளியிட்டு  முஸ்லீம்களின் இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

அரசியலை வயிற்றுப் பிழைப்புக்காக பயன்படுத்தும் சில அரசியல் வாதிகள் தங்களது எஜமானர்களைத் திருப்திப் படுத்தும் வகையில் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதால் பாரிய சிக்கல்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்றது. அரபு நாடுகளில் இருக்கின்ற போராட்டக் குழுக்களோடு கிழக்கு வாழ்  முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தி அவர்கள் அடிப்டைவாதிகள் என்றும் வஹாபிகள் என்றும் கூறி அவர்களது தூய இஸ்லாமிய வாழ்வை கொச்சைப் படுத்துகின்ற நடவடிக்கைகளை எமது சம்மேளனம் வண்மையாகக் கண்டிக்கின்றது.

எமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வகாபிச இயக்கம் உள்ளதாகவும், அவ்வியக்கத்திற்கு அறபு நாடுகள் உதவி வழங்குவதாகவும் ஆயுதப்பயிற்சி வழங்குவதாகவும் மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா அவர்கள் அறிக்கை விட்டுள்ளார். வகாபிச இயக்கம் என்ற ஓர் இயக்கம் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல உலகில் எங்குமே இல்லை.

அறபு நாடுகளோடு எமது நாடு சிநேகபூர்வமான உறவினைப் பேணிவரும் இக்கால கட்டத்தில் அலவி மௌலா இவ்வறிக்கையை விட்டிருப்பதானது இலங்கையின் அறபு நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

1991-10-27ஆம் திகதி கொழும்பு கோட்டைப் பள்ளியில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய குழு கூட்டத்தில் ‘இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுவரும் தஃவா இயக்கங்களான (மார்க்கப் பிரச்சார அமைப்புகள்) தப்லீக் ஜமா-அத், தௌஹீத்  ஜமா-அத், ஜமா-அதே இஸ்லாமி ஆகிய மூன்று இயக்கங்களின் இறுதி இலட்சியம் ஒன்றாக இருப்பினும் அவை கையாளும் பிரச்சார முறைகளைப் பொறுத்தே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

எனவே, இந்த ஜமா-அத்துகளில் எதுவும் வழிகெட்டது என்றோ சுன்னத் வல் ஜமா-அத் அகீதாவுக்கு மாற்றமானவை என்றோ கூறமுடியாது. மூன்று ஜமா-அத்துகளும் நேர்வழியில் உள்ளவைதான் என்பது ஜம்இய்யாவின் நிலைப்பாடாகும்’ என தெளிவாக பத்வா வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இம்மூன்று தஃவா இயக்கங்களினதும் செல்வாக்குகள் கூடிக்குறைந்த அளவுகளில் மக்களால் பின்பற்றப்படுகின்றன. சில பிரதேசங்களில் தப்லீக் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும் சில பிரதேசங்களில் தௌஹீத் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும், இன்னும் சில பிரதேசங்களில் ஜமா-அத்தே இஸ்லாமியின் செல்வாக்கு கூடுதலாகவும் காணப்படுகின்றது. இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.

இந்த இயக்கங்களின் வருகையின் பின்னால் இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள், மௌட்டீக கலாசாரம் என்பன குறைந்து கொண்டே வருகின்றன. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலரே இவ்வாறான உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை விட்டு, பொய்க் கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.

எனவே, தயவு செய்து இவ்வாறான விசமப் பிரச்சாரங்களையும் பொய்யான கதைகளைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் முஸ்லீம்களின் இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், விடயங்களைத் தெளிவாக ஆராய்ந்ததன் பின்னர் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறும், இது போன்ற மடத்தனமாக கருத்துக்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இந்த சம்மேளனத்தின்  தலைவர் எம்.ஐ. சுபையிர், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். அன்சார் பௌமி  ஆகியோர் கையெழுத்திட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. .

இது தொடர்பான எமது முந்திய செய்தி:

மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 27, 2011 இல் 1:04 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. All Muslim politicians please stop betraying your own community in the name of religion. Remember!! we all should face Almighty Allah for our deeds and specially people on responsible positions in the community will be questioned for their accountability.

    Ghouse

    திசெம்பர் 27, 2011 at 8:51 பிப

  2. alawe mowlanawai wittuko anupra waliya parkawm, …summa wai olaru…

    Mod Munawar

    திசெம்பர் 28, 2011 at 2:54 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: