Lankamuslim.org

தெற்காசியாவின் மிகப் பெரிய சர்வதேச படகு கண்காட்சி

leave a comment »

தெற்காசியாவின் மிகப் பெரிய சர்வதேச படகு கண்காட்சியான Boat show sri Lanka-2012 எதிர்வரும் மே மாதம் 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பண்டாரநயாக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இடம் பெறவுள்ளது. படகுத் துறையை சேர்ந்த சகல தரப்பினரையும் கவரும் இந்த நிகழ்ச்சி மூன்றாவது தடவையாக நடத்தப்படவுள்ளது.இத்துறையுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புடைய வெளிநாட்டு பிரதிநிதிகளும்,கலந்து கொள்ள இருப்பதால் இத்துறை சர்வதேச முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.

படகுத் துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள்,மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் பரிமாறிக் கொள்ளவும்,வெவ்வேறு பிரிவினருக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பினை இக்கண்காட்சி வழங்கும்.படகு கட்டுதல்,மோட்டோர் பொறியியல்,பழுது பார்த்தல்,உள்ளக வடிவமைப்பு,படகு பயண ஏற்பாடுகள்,சுற்றுலா,பொழுது போக்கு,நீர் விளையாட்டு,படகு பயண பாதுகாப்பு உபகரணங்கள்,இலத்திரனியல் சாதனங்கள்,படகு துறையின் முதலீடு,படகு ஏற்றுமதி,மாலுமிகளின் பயிற்சி,போன்ற துறைகளை உள்ளடக்கியதாக இக்கண்காட்சி அமையவுள்ளது.

நிரியல் விளையாட்டு தொடர்பான நவீன் வழிமுறைகள்,இக்கண்காட்சியின் முக்கிய இடத்தை வகிக்கவுள்ளன.சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு இது பயனுள்ளதாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.பிராந்தியநாடுகளானஇந்தியா,பாகிஸ்தான்,மொரீஷியஸ்,மடகாஸ்கர்,மாலைதீவு

என்பன,இக்கண்காட்சியில் பங்குபற்ற இருப்பதாக கண்காட்சி வேலைத்திட்ட முகாமையாளர் மிஸாக்கா வீரகோன் தெரிவித்துள்ளார்.இந்த நாடுகள் அனைத்தும் படகுத் துறையிலும்,கடற் போக்குவரத்திலும்,விரிவான அனுபவத்தையும்,வழங்களையும் கொண்டுள்ள நாடுகளாகும்.இந்தியாவில் Marine Araches திறக்கப்பட்டதிலிருந்து,இப்பிராந்தியத்தில் படகுப் பயணங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன.

இந்த மூன்று நாள் கண்காட்சியில் ஒரு அங்கமாக,மாநாடு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.படகு போக்குவரத்து துறையின் எதிர்காலம் தொடர்பான பல்வேறு விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.இதற்கு கைத்தொழில்,வணிக அமைச்சு,இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை உட்பட பல நிறுவனங்கள் அனுசரை வழங்குகின்றன.

இது குறித்த உத்தியாக பூர்வ ஆரம்ப அறிமுக நிகழ்வு இன்டர் கொண்டினல் ஹோட்டலில் இடம் பெற்றது.கைத்தொழில்,வணிகத துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,இதற்கான .இணையத்தளத்தை ஆரமப்பித்து வைப்பதையும்,ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் ஜனக ரத்னாயக்க உட்பட கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 13, 2011 இல் 8:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: