Lankamuslim.org

One World One Ummah

சதாம் ஹூஸைன் கிராமம் ஈராக் கிராமம் என பெயர்மாற்றம்

with one comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் ‘சதாம் ஹூஸைன்” கிராமம் என அழைக்கப்படும் பிரதேசம் ஈராக் கிராமம் என பெயர்மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஏறாவூர்ப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனை நினைவுபடுத்தும் இக் கிராமத்தின் இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டது.

அக்காலத்தில் மட்டக்களப்பு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த மர்ஹூம் அகமட் பரீட் மீரா லெப்பை ஈராக்குக்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பிரகாரம் ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாதிரிக் கிராமமொன்றை அமைத்துக் கொடுக்க அன்றைய ஈராக் அரசாங்கம் முன்வந்தது.

பள்ளிவாயல், மத்தரஸா மற்றும் விளையாட்டு மைதானம் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக இக்கிராமம் அமைக்கப்படடடு ‘சதாம் ஹூஸைன்” கிராமம் என்ற பெயரில் 1982ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக எடுத்துள்ள இந்தத் தீர்மானம் கிராமத்திலுள்ள சகலரின் ஒட்டுமொத்த தீர்மானமென அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயல் தலைவரான முகம்மட் லெப்பை அப்துல் வத்தீப் கூறுகின்றார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்.

1982ஆம் ஆண்டு இக்கிராமம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட பின்பு கிரமத்தில் உள்ள பள்ளிவாயல் மற்றும் மத்தரஸா ஆகியவற்றின் பராமரிப்புக்காக மாதாந்தம் ஈராக் அரசாங்கம் இலங்கையிலுள்ள ஈராக் தூதுவராலயம் ஊடாக உதவிகளை வழங்கி வந்தது. இதன்மூலம் பள்ளிவாயலில் கடமையாற்றும் மௌலவி முகதினார் மற்றும் மத்தரஸாவில் ஓதிக்கொடுக்கின்ற ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் இதன் மூலமே வழங்கப்பட்டு வந்தது.

1990ஆம் ஆண்டு இலங்கையிலும் ஈராக்கிலும் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக அந்த உதவிகள் நிறுத்தப்பட்டது மட்டுமன்றி ஈராக்குடனான சகல தொடர்புகளும் அன்று தொடக்கம் துண்டிக்கப்பட்டது. 1990ஆம் அண்டு இந்தக் கிராமம் வீடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மக்கள் சில காலங்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். இந்த மக்களுக்கு உதவுவது குறித்து அந்நாட்களில் இலங்கையிலுள்ள ஈராக் தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்ட போது தமது நாட்டிலும் இப்போ பிரச்சினை என்பதைச் சுட்டிக்காட்டி அவர்களால் உதவமுடியாத நிலை பற்றி பதிலளிக்கப்பட்டது.

தற்போது ஈராக் அரசியலில் புதிய தலைமைத்துவம் வந்துள்ள நிலையில் அந்த ஆட்சியாளர்களின் தொடர்பு எமக்கு கிடைத்துள்ளது. இதன் பிரசாரம் அண்மையில் ஈராக் குழுவொன்று எமது கிராமத்திற்கு வருகை தந்து பார்வையிட்டது.

இந்தக் கிராமம் ‘சதாம் ஹூஸைன் கிராமம்” என்று இருக்குமானால் தற்போதைய அந்நாட்டு அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வராது. இந்தக் கிராமம் உருவாக ஈராக் மக்களே உதவினார்கள் என்பதால் தற்போதைய பெயரை மாற்றி ‘ஈராக் கிராமம்” என பெயர் மாற்றம் செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். இதன் பிரகாரம் இந்தப் பெயரைமாற்றத் தீர்மானித்தோர் அவர்களின் உதவி எமது கிராமத்திற்கும் மக்களுக்கும் கிடைக்கக்கூடிய நிலை இந்த பெயர் மாற்றம் காரணமாக எமக்கு ஏற்பட்டுள்ளது.

இருந்தும் இந்தப் பெயர் மாற்றம் என்பது எங்களால் சகிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும் இந்தக் கிரமத்தின் நலன் கருதி பெயர் மாற்றத்திற்கு இணங்கியுள்ளளோம்.

இந்தப் பெயர்மாற்றம் தொடர்பாக எவ்வித வற்புறுத்தல்களும் அழுத்தங்களும் இல்லை. உதவி செய்தவர்களையும் நினைக்கவேண்டும் உதவ முன்வருபவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார். -தகவல் வீரகேசரி

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 26, 2011 இல் 9:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ………..சில்லறை உதவிக்கு ஒரு ஊரையே உருவாக்க முன்வந்த ஒரு தலைவரை மறப்பது நல்ல காரியம் இல்லை.இது அமெரிக்க ஆக்கிரமிப்பையும் அவனது பொம்மை ஆட்சியையும் அங்கீகரித்த மாதிரியாகிவிடும். அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது நாம் வீதியிறங்கி போராடியது எல்லாம் மறந்த விட்ட சம்பவங்கள் ஆகிவிடும்.தயவு செய்து சம்பந்தபட்டவர்கள் இதனை வாபஸ் வாங்குங்கள்.

    எம் எஸ் பஸ்லி

    நவம்பர் 27, 2011 at 3:12 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: