Lankamuslim.org

இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தை விமர்சிக்கும் பரீட்சைகள் ஆணையாளர்

with 6 comments

எமது தற்போதைய பாடத்திட்டம், பரீட்சை முறை என்பனவற்றை மாற்றவேண்டுமெனத் தெரிவிக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க இக்கல்விமுறையால் மாணவ சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நிலைக்கு நாம் மாற்றிவருகிறோம் என்று தெரிவித்துள்ளார் .கண்டி மகளிர் கல்லூரியின் 13 ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் நான் பரீட்சை ஆணையாளராக இருக்கிறேன். எனவே பரீட்சை முறை பற்றி நான் விமர்சிப்பதை யாரும் எதிர்க்க முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.வாழ்க்கை வாழ்வதற்கே எமது பரீட்சை முடிவுகளும் சான்றிதழ்களும் எமது வாழ்வைத் தீர்மானிக்கும் காரணிகள் அல்ல. சாதாரண தரம், உயர்தரம் இவற்றில் சித்தியடையத் தவறினால் வாழ்க்கையே தவறிவிட்டதாகப் பெற்றோர்கள் நினைக்கின்றனர். அது தவறு எமது பெற்றோர்களின் காலத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம். எமது காலத்தில் அப்படியல்ல.

ஏனென்றால் சுமார் மூன்று இலட்சம் பேர் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அவர்களில் தாய் மொழி, கணிதம் சித்தியடையாதவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். எனவே அவர்களைப் பாதை ஓரத்திற்கும், போதைக்கு அடிமையாவதற்கும் நாம் தயார் பண்ணி வெளியே அனுப்புகிறோம். எது என்ன நியாயம்.? அதேபோல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 22,000 பேரை மட்டும் பல்கலைகழகம் அனுப்பிவிட்டு மிகுதிப் பேர்களை துஷ்டர்களாகவும் கயவர்களாகவும் மாற்றும் ஒரு வழிமுறைக்கு அனுப்புகிறோம்.

இந்த வகையில் நான் ஒரு பெரிய கிரிமினல் குற்றவாளியா என்று கூட நான் சிந்திப்பதுண்டு. 1972 முதல் 1978 வரை ஓரளவு எமது கல்வி முறை இருந்தாலும் 1978 இன் பின் அது மீண்டும் பிழையான பாதைக்குச் சென்றுவிட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியை வழங்கி அதை இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களாக எல்லைப்படுத்தி வெள்ளைத்தாளையும் எழுது கோலையும் யுத்தம் செய்ய வைத்து ஒரு மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கொடிய முறைதான் எமது பரீட்சை முறை. ஆசிரியர் குறிப்பிட்ட ஒரு புள்ளியை மாணவனுக்கு வழங்கி சித்தியடையச் செய்யும் முறை ஒன்று வரவேண்டும். இன்று சுமார் 750 பேர் பரிசு பெற்றனர். எனது வாழ்நாளில் நான் ஒருநாளும் பரிசு பெற்றது கிடையாது.

பரீட்சைத் திணைக்களத்திற்கு வயது 60. எனது ஆயுளில் 30 வருடம் பரீட்சைத் திணைக்களத்தில் சேவை செய்துள்ளேன். பல இலட்சக்கணக்கானவர்களுக்கு நான் பரிசு வழங்கியுள்ளேன். அதாவது வாழ்க்கை வளம் பெறச் செய்ய முடியாத சான்றிதழ்களை பல இலட்சம் பேருக்கு வழங்கியுள்ளேன்.

க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரங்களில் மொத்தம் 64 பாடத்திட்டங்கள் உள்ளன. கடவுள் (சக்ரயா) உலகிற்கு வந்தாலும் தேசிய கல்வி நிறுவனம் அமைந்துள்ள பாடத்திட்டத்தைப் பூரணமாக்க முடியாது.ஆசிரியர்கள் மாணவர்கள் பின்னாலும் மாணவர்கள் ஆசிரியர் பின்னாலும் அலைகிறார்கள். காரணம் சிலபஸ் (பாடத்திட்டம்) முடிக்க வேண்டுமே அதற்காக இதை விட இன்னுமொரு கொடுமையும் உண்டு.

கண், காது மூக்கு, தொண்டை (ஈ.என்.டி.) வைத்தியர், இருதய நோய் வைத்தியர், பிரசவ வைத்தியர் பெண் நோய் மருத்துவர் தோல் வியாதி மருத்துவர் எனப் பல பிரிசு விசேட நிபுணர்கள் இருப்பது போல் பரீட்சைத் திணைக்களத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உள்ளவர்கள் ஒவ்வொரு வினாக்களை தெரிவு செய்வர்.ஒருவர் தயாரிக்கும் வினா பற்றி மற்றவருக்குத் தெரியாது. இப்படியான பல நிபுணர்களது வினாக்களுக்கு ஒரு மாணவன் ஒரே நேரத்தில் விடை எழுதவேண்டும். இது இன்னொரு கொடுமை. இருப்பினும் ஒரு பூரணமான ஆசிரியரால் இப்படியான ஒரு பரீட்சை வினாவிற்கு விடை எழுத முடியும்.

அந்தவகையில் ஆசிரியர்கள் சிரேஷ்ட மாணவர்கள், ஆசிரியர்களால் இவ் உலகையே மாற்ற முடியும்.மாணவர்களின் வாழ்க்கையுடன் பரீட்சை என்ற கருவியால் நாம் பிழையான ஒரு விளையாட்டையே விளையாடுகிறோம். எனவே பிழையான பரீட்சை முறைக்குப் பதிலாக ஆசிரியர் மதிப்பீடு/கணிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 2, 2011 இல் 1:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

6 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. ஒரு உருப்படியான கருத்தினைக் கூறியமைக்காக பரீட்சைகள் ஆணையாளரைப் பாராட்ட வேண்டும், அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது, உலகளாவிய ரீதியில் எமது சான்றிதழ்கள் எந்தவித மதிப்பையும் அற்று இருக்கின்றன என்கின்ற கசப்பான உண்மையினை எமது நாடும் அரசும் உணர வேண்டும், பிரயோக ரீதியான, செயற்திறன் மிக்க தலை முறையொன்றினை உருவாக்கும் கல்வித்திட்டத்தினை வகுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். வளர்ந்த நாடுகளிடம் நாம் இது சம்பந்தமான பலவிதமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களது கல்விமுறை பட்டதாரிகளை விட செயற்பாட்டு ரீதியில் இயங்குகின்ற ஆக்க பூர்வமான பேர்களையே ஊக்குவிப்பதனை நாங்கள் கண்கூடாகக் காண்கின்றோம். அடுத்த தலை முறையாவது கீழ்ப்படிவான கலகம் செய்யாத கட்டளைக்கு அடிபணியக்கூடிய வகையில் வளர்த்தெடுப்பது எனும் நோக்கத்தைக் கொண்ட இராணுவப் பயிற்சிகளை விடுத்து, நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய தலைமுறையொன்றாக உருவாகட்டும்.

  Dr.Najimudeen

  நவம்பர் 3, 2011 at 7:24 முப

  • விமர்சிப்பதெல்லாம் சரி.. பதிலீட்டுக்கு ஒரு foolproof முறையைப் பரிந்துரைக்கலாமே.. இதெல்லாம் சரி வராதெண்டுதான் சந்திரிக்காவும் தாராவும் சேர்ந்து ஏதோ ஒரு continuous assessment முறையைக் கொண்டு வந்து கிழித்து வைத்திருக்கிறார்கள்.. படிக்காமல் போன பாடத்தின் பல்தேர்வு வினாப் பத்திரத்துக்கு விடையளிப்பது போல் தமது புள்ளிவிபரவியல் திறமைகளைப் பிரயோகித்து பிடிபடாதவாறு புள்ளிகளை பங்கிட்டு வைக்கின்ற ஒரு சில (தற்போது இதுதான் பெரும்பான்மையாகி வருகிறது) கேவலமான ஆசிரியர்களுக்குத்தான் அது வசதியாகிவிட்டது. இத்தாலியில் ஆசிரியர் பக்கத்தில் வந்திருந்து ஒவ்வொருவராகப் பாடம் கேட்டுப் புள்ளி போடுகிறார். ஒருவரின் பரீட்சையை வேண்டிய எவரும் வந்திருந்து பார்த்திருந்துவிட்டுச் செல்லலாம். இருப்பினும் இங்கே முன்னமேயே தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தெல்லாம் கிடையாது, நடாத்திய பரீட்சையின் வினாக்கள் மற்றும் மாணவரின் பதில்கள் பற்றிய ஏதும் ஆவணப்படுத்தலும் கிடையாது..

   //அடுத்த தலை முறையாவது கீழ்ப்படிவான கலகம் செய்யாத கட்டளைக்கு அடிபணியக்கூடிய வகையில் வளர்த்தெடுப்பது எனும் நோக்கத்தைக் கொண்ட இராணுவப் பயிற்சிகளை விடுத்து,// சரிதான், பல்கலைக்கழக உணவகங்களில் வரிசை ஒழுங்கைப் பின்பற்றுவது, தேசிய கீதம் வாசிக்கும் போது மரியாதையாக இருந்து அதைப் பெரிதென மதிக்கும் மனிதரின் உணர்வுகளைப் பாதிக்காமல் நடந்து இன ஒற்றுமையைப் பேணுவது போன்ற எளிய ஒழுக்க நடைமுறைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க இருக்கின்ற பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் போதும்தானே..

   //உலகளாவிய ரீதியில் எமது சான்றிதழ்கள் எந்தவித மதிப்பையும் அற்று இருக்கின்றன// காசு கொடுத்து வாங்கும் சான்றிதழ்கள் வேண்டுமானால் அவ்வாறிருக்கலாம்.. அரச பல்கலைக்கழக சான்றிதழ்களும் க.பொ.த. சா/த, உ/த சான்றிதழ்களும் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. அந்த நிலை ஏற்படுவதென்னவோ வெகு தொலைவிலுமில்லை. http://www.fulbrightsrilanka.com/?page_id=609 <—- இது அமெரிக்க ஃபுள்ப்ரைட் நிறுவனம் இலங்கையின் கல்வி முறை குறித்து இன்னமும் வைத்திருக்கின்ற அபிப்பிராயம்.

   கல்வியை இலகுவாக்கல் என்பது கல்வியை வர்த்தகமயப்படுத்தல் எனும் குறிக்கோளுடன் இயங்கும் ஒரு சில மூன்றாம் தர நிறுவனங்களின் மூன்றாம் மண்டல நாடுகளை மையமாக வைத்த சந்தைப்படுத்தலுக்கான ஒரு சுலோகமேயாகும். இன்னமும் ஐக்கிய இராச்சியம் தவிர்ந்த ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான் போன்ற இடங்களில் கல்வி என்றால் கஷ்டமாகத்தான் வைத்திருக்கிறார்கள். கேம்ப்ரிட்ஜ் மற்றும் இம்பீரியலிலும் அப்படித்தான். ப்ரின்ஸ்டன் மற்றும் MIT போன்ற பல்கலைக்கழகங்களிலும் வினாத்தாள் கடினமே. அமெரிக்கரும் ஐக்கிய இராச்சியத்தவரும் ஒரு மாற்றீடு வைத்திருக்கிறார்கள்: இலகுவான வினாத்தாள் வேண்டுமானால் அதற்கும் பல்கலைக்கழகம் உண்டு, ஆனால் இந்தக் குழந்தைகளை அவர்கள் முதல் தரப் பிள்ளைகளாகப் பின்னர் கவனிப்பதில்லை.

   Abdullah

   நவம்பர் 3, 2011 at 10:47 முப

  • //பிரயோக ரீதியான, செயற்திறன் மிக்க தலை முறையொன்றினை உருவாக்கும் கல்வித்திட்டத்தினை வகுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். வளர்ந்த நாடுகளிடம் நாம் இது சம்பந்தமான பலவிதமான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களது கல்விமுறை பட்டதாரிகளை விட செயற்பாட்டு ரீதியில் இயங்குகின்ற ஆக்க பூர்வமான பேர்களையே ஊக்குவிப்பதனை நாங்கள் கண்கூடாகக் காண்கின்றோம். //

   இது எமது பரீட்சை முறையிலுள்ள குறைபாடல்ல.. பெற்றோர், உறவினர் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களில் ஏற்படுத்தப்படும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளினதும் கல்வித் துறைகள் குறித்து தவறான கருத்துக்களினதும் விளைவாகும். பரீட்சை முறையை மாற்றுவதைவிட மாணவர்களுக்கும் மூத்தவர்களுக்கும் பல்வேறு தொழிற் துறைகளினதும் மகிமை மற்றும் அதிலுள்ள சிறப்புத் தன்மை மற்றும் அவற்றின் சுவாரஸ்யமான அம்சங்கள் பற்றிய அறிவினை வழங்குவது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரைவாக வழிவகுக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

   இந்த நாட்டில் ஒரு பல் வைத்திய நிபுணராகுவதற்கெனப் படிப்பினைத் துவங்கும் ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவனும் தான் ஒரு படுதோல்வியே என்ற எண்ணத்துடனேயே துவங்குகின்றான்.. வைத்தியசாலைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருக்கையில் எல்லாரும் வைத்தியராக வெளிக்கிட்டால் வைத்தியத்துறைக்கான தெரிவு கடினமாவது இயல்பே.. அதே நேரம் எந்தப் பிள்ளைதான் (தனது திறமை அல்லது ஆர்வத்தையும் இறந்தகாலக் கற்கைப் போக்கினையும் தெரிந்த பின்பும்) ஒரு தாதியாவதை தன் இலட்சியமாகக் கொள்வதை சிந்தித்தேனும் பார்க்கிறது? பிள்ளையின் ஆசிரியையேனும் ஆசிரியத் தொழிலும் ஒரு குழந்தையின் இலட்சியங்களுள் ஒன்றாய் இருக்கலாம் எனக் ௯றுவதை விரும்புகிறாரா? இதுதான் நாம் வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து உண்மையில் பெறக்௯டிய படிப்பினையாக இருக்கிறது. அங்கே முன்பள்ளிக்௯ட ஆசிரியராகவும் சிகையலங்கார நிபுணராகவும் வர வேண்டும் எனவும் ௯ட குழந்தைகள் பள்ளிக்௯டத்துக்கு வெளிக்கிடுகிறார்கள்.

   தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தமட்டில் எந்தவொரு நாடும் கல்வித்திட்டம் மற்றும் கல்வி நிறுவனங்களைத் திட்டமிடுகையில் ஒவ்வொரு தொழிற் துறைக்கும் தேவையான நிபுணத்துவ விகிதாசாரங்களைக் கணக்கெடுத்தே திட்டமிடுகிறது. e.g. engineer to technician ratio maintained by the govt. institutions offering technical education in Sri Lanka – govt doesn’t want everyone to do the scientist’s or the engineer’s job, you obviously need பிரயோக ரீதியான, செயற்திறன் மிக்க people on the ground. The problem with our parents, our elders, our teachers and hence our children is that while serving in a position that is meant for delivering one’s skills and practical expertise is regarded as an equally enjoyable career in a வளர்ந்த நாடு, in SL everybody wants to be either the boss or the engineer – it’s in the attitude and perspective.

   Just like an engineer (whether he is graduated from Cambridge or Peradeniya) himself cannot build a machine as perfectly as a technician would do, a computer scientist cannot be expected to write a computer program in every language the industry comes up with – he is meant to do different things. A graduate in theoretical physics is not to be expected to demonstrate you how your calculator is made in the factory. What we fail to see is that, as to the capability of a graduate, it is the same situation everywhere in the world, only difference being that in the so called developed rich world there are enough people in every position doing their job with enthusiasm considering their own career as their achievement – not a failure. That means they have kids who always *wanted* to write computer programs instead of becoming a computer scientist or mathematics graduate just because that was *the most preferred choice by everyone*. They never found anything being the most preferred one or the most glorified one. People meant to do one thing should not be expected to do another man’s job and rather we should have another man who *wants to*, instead of having to, do the other job. Simply put, we are discriminating among career choices that our kids are presented with only put the younger generation into much competition and pressure. There is room for excellence in every field. And no one profession is really superior over the other when everyone pursues his profession with genuine enthusiasm. Sorry about switching languages.

   இந்த அடிப்படையிலேயே எமது நாடும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கு அதற்குரிய நிறுவனங்களையும் செயற்பாட்டு ரீதியில் இயங்குகின்ற ஆக்க பூர்வமான பேர்களை உருவாக்குவதற்கு அதற்கான நிறுவனங்களையும் போதிய அளவில் நிறுவியும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுமே உள்ளது. அதனை விரும்பி ஏற்றுக்கொண்டு பயன்படுத்தாதது மட்டுமே எமக்கும் பிற வளர்ந்த நாடுகளுக்குமான வித்தியாசமாகும்.

   Abdullah

   நவம்பர் 3, 2011 at 12:02 பிப

 2. ஆண்டாண்டு காலமாக பரிச்சை பெறுபேறுகளின் மூலம் நீருபிக்கப்பட்ட உண்மைகளை கூறியுள்ளார்

  Sahki Ibrahim

  நவம்பர் 3, 2011 at 10:57 முப

 3. மஹிந்த சிந்தனை இது தொடர்பாக ஒன்றும் கூறவிலையோ, அல்லது மஹிந்த சிந்தனை கூறியுள்ளதால் இவர்களும் விமர்சிகின்றார்களோ தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள

  Fowser _UK

  நவம்பர் 3, 2011 at 11:03 முப

 4. next education minister அநுர எதிரிசிங்க…

  Nusky

  நவம்பர் 3, 2011 at 9:54 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: