Lankamuslim.org

One World One Ummah

அரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா

with 2 comments

முஹம்மத் ஜான்ஸின்
ஹஜ்ஜுப் பெருநாள் வருகின்றது. லங்கா முஸ்லிம் இணையத்தள வாசகர்கள் அத்தனை பேருக்கும் எனது ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும். மேலும் இனிய பெருநாளை சிறப்பாக கொண்டாட இறைவன் அருள் புரிவானாக! ஆமீன்.

இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா விடயத்தில் சில குழப்பங்கள் நிகழலாம். ஆடு மாடுகளை கொண்டு செல்வதிலும் அவற்றை அறுப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படலாம். எனவே அது சம்பந்தமான சில அறிவுரைகளை கூறுவது நல்லது என நினைக்கிறேன். அவை சில காரணங்களால் இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளது. அவற்றை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாகவும் பிரச்சினைகளை தவிர்க்கவும் இன்ஷா அல்லாஹ் உதவும். இனி அரபா நாள் நோன்பு ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் உழ்கிய்யா சம்பந்தமான சில விடயங்களைப் பார்ப்போம்.

இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும்- இப்னு அப்பாஸ், இப்னு ஸுபைர் மற்றும் முஜாஹித் (ரலி) ஆகி யோரும் இதையே கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : துல் ஹஜ் மாதத்தின் பத்துநாட்களும் அவற்றில் செய்யும் அமல்களும்தான் அல்லாஹ் விடத்தில் மிகவும் மகத்துவம் உடையதாகவும் பிரியமானதாகவும் உள்ளது! இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹு அக்பர் – அல் ஹம்து லில்லாஹ் என்று அதிகம் அதிகம் சொல்லுங்கள்! அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்னத் அஹ்மத்- ஃபத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் சாத்தியப்பட மாட்டாது! எனவே நாம்இந்நாட்களில் பின் வரும் அமல் களில் கவனம் செலுத்து வது விரும்பத்தக்கதாகும் :தொழுகை! – கடமையான தொழுகைகளை விரைந்து நிறைவேற்றவேண்டும். நஃபிலான தொழுகைகளை அதிகம் அதிகம் தொழவேண்டும்!

நோன்பு! – இந்நாட்களில் ஸுன்னத்தான நோன்புகளை நோற்கவேண்டும்., நோன் பும் நல்லமல்களில் உள்ளதாகும் என்பதால்! தக்பீர் சொல்லல்! – இதற்கு மேலே சொன்ன நபிமொழி ஆதாரமாய் உள்ளது. அதை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள் இந்நாட்களில் – தொழுகைக்குப் பின்பும் தக்பீர் அதிகம் சொல்பவர்களாய் இருந்துள்ளார்கள். வீதிகளிலும் கூடாரத்தில் வைத்தும் மக்களின் அவைகளிலும் அதிகம் தக்பீர் சொல்பவர்களாய் இருந்துள்ளனர்.

அரஃபா நாளின் நோன்பு! – ஹாஜிகள் அல்லாதாருக்கு இந்நோன்பு ஸுன்னத்!; இந்த நோன்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:. இந்நோன்பு- சென்ற ஆண்டுக்கும் நடப்பாண்டுக்கும்; குற்றப் பரிகாரமாகஅமையும் என நான் ஆதரவு வைக்கிறேன்,. ஆனாலும் அரஃபாவில் தங்கியுள்ள ஹாஜிகள் இந்நோன்பை நோற்க மாட்டார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்காமல்தான் அரஃபாவில் தங்கியிருந்தார்கள்!

இந்நாட்களை நாம் வரவேற்பது எப்படி? நன்மைகளைத் தேடிக்கொள்வதற்கான் இதுபோன்ற காலகட்டங்களில் பாவமீட்சி தேடி இறைவன்பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்! அது தூய்மையான பாவமீட்சியாகவும் வாய்மையானதாகவும் இருக்கவேண்டும்! பாவங்ளை விட்டு விலகுவதுடன் இனி எப்போதும் அவற்றைச் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும்! நிச்சயமாக பாவங்கள்தாம் இறையருளைப் பெறவிடாமல் மனிதனைத் தடுத்து அவனை இறைவனை விட்டும் தூரமாக்குகின்றன! நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கிவழிபட்டு அவனது உவப்பைப் பெறமுயல்வோமாக!

அறபா நோன்பு மற்றும் உழ்கிய்யா சம்பந்தமான சில குறிப்புகளை ஏ.சி. நஜுமுதீன் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள். அவற்றையும் வாசகர்களுடன் பகிரிந்து கொள்வதில் மகிழ்ச்சி. துல் ஹிஜ்ஜா மாதம் ஒன்பதாம் (9) நாள் அரபா தினமாகும். இலங்கையில் இவ்வருடம் அரபா தினம் 06-11-2011 ஞாயிற்றுக்கிழமை என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் அரபா நாளில் நோன்பு பிடிப்பதின் (நன்மையைப் பற்றி) கேட்கப்பட்டது. அது கழிந்த ஒரு வருடத்தினதும், இனி வரக்கூடிய ஒரு வருடத்தினதும் சிறிய பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாகும் என பதிலளித்தார்கள். அறிவிப்பவா; : அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு , ஆதாரம் : முஸ்லிம்

07-11-2011 திங்கள்- பெருநாள் தினம் செய்யவேண்டியவை

* குளித்தல்
* அழகான நல்ல ஆடை அணிதல்
* நறுமணம் பூசுதல்
* பெருநாள் தொழுகை நிறைவேற்றல்
* தொழுகைக்காக ஒரு பாதையால் நடந்து சென்று வேறு பாதையால் திரும்பி வருதல்
* பெருநாள் தொழுகை தொழுத பின்பே காலை உணவு உட்கொள்ளல்
* உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து சலாம் கூறி உறவாடுதல்

உழ்ஹிய்யா

* உழ்ஹிய்யா சுன்னத் முஅக்கதாவாகும்.
* ஊழ்ஹிய்யா கொடுப்பவர் துல்ஹஜ் பிறை 1 முதல் அதனைக் கொடுக்கும் வரை முடி, நகம் போன்றவற்றை அகற்றாமலிருப்பது சுன்னத்.

* ஊழ்ஹிய்யா கொடுக்கும் நாட்கள்: பெருநாள் காலை முதல் அய்யாமுத்தஷ்குடைய   மூன்றாம் நாள் அஸர் தொழுகை வரை.

* பெருநாள் தொழுகையின் பின்னரே ஊழ்ஹிய்யா கொடுக்க வேண்டும். (எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினமன்று, சூரிய உதய காலம் காலை 5.59 க்கும் 6.19 க்கும் இடையே நிகழ்வதாலும், பெருநாள் தொழுகைக்கும் குத்பாவுக்கும் குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்கும் என்பதாலும் காலை 7.00 மணிக்குப் பின்னர் ஊழ்ஹிய்யா கொடுக்கத் திட்டமிடுதல் பொருத்தமாகும்).

* பெருநாள் தொழுகையின் முன்னர் ஊழ்ஹிய்யா கொடுத்தால் அது உள்ஹிய்யா             குர்பானியாக      அமையாது.

* ஊழ்ஹிய்யா கொடுக்கும் ஆடு அல்லது மாடு இரண்டு வருடம் பூத்தியடைந்ததாக இருத்தல் வேண்டும். ஒரு ஆணுக்காக அல்லது ஒரு பெண்ணுக்காக ஒரு ஆட்டை குர்பான் கொடுக்கலாம். 7 பேர் (ஆண்களோ அல்லது பெண்களோ அல்லது இருபாலாருமோ) சோர்ந்து ஒரு மாட்டை குர்பான் கொடுக்கலாம்.

* நோயுள்ள, பார்வையிழந்த, நொண்டியான, காது துண்டிக்கப்பட்ட மிருகங்களை     ஊழ்ஹிய்யா கொடுக்கக்கூடாது.

*  ஊழ்ஹிய்யா கொடுத்த பிராணியின் எந்தப் பகுதியையும் விற்கக்கூடாது.
* மூன்றில் ஒரு பகுதியை தாம் சாப்பிடுவதும், மற்றொரு பகுதியை இனபந்துக்களுக்கும்    நண்பர்களுக்கும் கொடுப்பதும், மற்றதை ஏழைகளுக்கு ஸதகா செய்வதும் சுன்னத்தாகும்.

குறிப்பு: உழ்ஹிய்யா கொடுக்கும்போது அரச விதிமுறைகளை மீறாது நடந்துகொள்ளவேண்டும் தக்பீர்அரபா தினம் சுபஹ் தொழுகை முதல் அய்யாமுத்தஷ்ரிக் கடைசிநாள் அஸர் வரை (பிறை 9 முதல் பிறை 13 வரை) தொழுகைகளின் பின்னர் தக்பீர் சொல்லவேண்டும்.

உழ்கிய்யா சம்பந்தமான சில நல்லொழுக்கஙகள்

உழ்கிய்யா காலத்திலோ அதற்கு முற்பட்ட நாற்களிலோ ஆடு மாடு போன்றவற்றை வீதிகளில் கட்டி வைத்து ஆப்பரிப்ர் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும். பள்ளிவாசல்களில் வைத்து ஊர் ஒற்றுமை என்ற அடிப்படையில் குர்பானி கொடுக்க முயலும் போது அங்கு மாடுகளை அதிகமாக கட்டி வைக்க வேண்டியேற்படும். இது மாற்று மத சகோதரர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம்.எனவே முடியுமான வரை உழ்கிய்யாவை குடும்ப மட்டத்தில் செய்து கொள்ள முடியும் மேலும் அந்நியவர்கள் பார்க்க முடியாத மறைவான இடத்தில் வைத்து ஆடு மாடுகளை அறுப்பது நல்லது. பெருநாளைக்கு முற்பட்ட நாற்களிலேயே பிராணிகளை வாங்கி வீட்டின் பின்புறத்தில் கட்டிவைத்தல் நல்லது. பெருநாள் தவிர்ந்த அய்யாமுத் தஸ்ரீக்குடைய நாட்களில் நிலமையை அவதானித்து சூரியன் உதயமாக முன்னரும் அது மறைந்த பின்னரும் இறைச்சிகளை விநியோகிப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். ஆடு மாடுகளை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டால் விற்பவரின் இடத்திலேயே வைத்து அறுத்து இறைச்சியை பேக்குகளில் இட்டு கொண்டு செல்லலாம். ஆடு மாடுகளை கொண்டுவருதல் கட்டிவைத்தல் அறுத்தல் பங்கிடல் துப்பரவு செய்தல் விநியோகித்தல் போன்ற எல்லாக் கட்டங்களையும் அந்நியவர்கள் பார்வையிலிருந்து முடியுமானவரை மறைத்து செய்ய வேண்டும்.

ஆடு மாடு போன்றவற்றை அறுப்பதனால் வெளியேறக்கூடிய இரத்தங்களை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். அத்துடன் அவற்றின் கழிவுகளை நிலத்தில் பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும். அல்லது நன்றாக பேக்குகளில் வைத்து கட்டி பொதிசெய்து குப்பை அல்லுவோரிடம் கையளிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் வீசக்கூடாது. மேலும் குப்பைக்குள் வீசுவோர் நாற்றம் எடுக்காத வகையில் பொதி செய்து அவற்றை வீச வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் தடையேற்படாதிருக்க இவ்வருடத்தின் செயற்பாடுகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும்.உலமாக்கள் வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானிலும் பெருநாள் குத்பாவிலும் இவற்றைப்பற்றி எடுத்துரைப்பது சிறந்தது.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 2, 2011 இல் 1:50 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. உழ்கிய்யா குறித்து இங்கு தரப்பட்டுள்ள, மார்க்க நடைமுறைகளும், கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகளும், அவசியமான கருத்துக்கள்தான். ஆனால், உழ்கிய்யாவிற்கான இறச்சியை தயார் படுத்துவதிலும், அதை விநியோகிப்பதிலும்,கடைப்பிடிக்குமாறு கேட்கப்பட்டுள்ள விடயங்கள்தாம் மனதிற்கு நெருடலை ஏற்படுத்துகின்றன. ‘ஊர்மட்டத்தில் செய்வதை தவிர்த்து குடும்பமட்டத்தில் செய்யுங்கள்’. அந்நியவர்கள் பார்க்க முடியாத மறைவான இடத்தில் வைத்து அறுப்பது நல்லது’. ‘இரவு நேரத்தில் அல்லது அதிகாலையில் இருட்டில் விநியோகிக்க வேண்டும்’. என்பன போன்ற கருத்துக்கள் கவலையை ஏற்படுத்துகின்றன. ஒரு மார்க்க கடமையை, சுன்னத்தான வழிமுறையை நிறைவேற்றுவதில் திருடர்களைப்போல் செயற்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. ஒரு சில அமைச்சர்களின் அடாவடித்தன அரசியலுக்குப் பயந்து நாம் ஒடி ஒளிப்பதா? இலங்கையில் இறச்சிக்காக ஆடு, மாடு, கோழி, போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளை அறுக்க சட்ட அனுமதி உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் நாம் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ‘ஹஜ்ஜு’ போன்ற விசேட காலங்களில் சற்று அதிகமாக இறச்சியறுக்க எமக்கு உள்ள உரிமையை பாராளுமன்றம் மூலம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாது போனால், எதிர்காலத்தில், இன்னும் பற்பல மார்க்க விடயங்க்களை நிறைவேற்றுவதில் நாம் ஒளிந்திருந்து செயற்பட வேண்டிவரும்.
  கஸ்ஸாலி.

  ghazali

  நவம்பர் 2, 2011 at 6:49 பிப

 2. கட்டுரையில் நல்ல கருத்துகள் உண்டு , அதேபோன்று உடன்பட முடியாத கருத்துகளும் உண்டு Mr.Ghazali கூறுவது சரியான கருத்து நாட்டில் நாம் எமது உரிமைகளை நிலைநாட்டில் வாழ வேண்டும் ஒளித்து பிடித்து வாழமுடியாது.

  Imran Hussain

  நவம்பர் 2, 2011 at 7:23 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: