Lankamuslim.org

One World One Ummah

ஒக்டோபர் 31 இல் பிறந்த குழந்தையும் 700 கோடியாவது ஆள்

leave a comment »

உலகில் இன்று, அக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது ஆளாக கருதப்படும் என்று ஐநா அறிவித்துள்ளது. 1999ல் உலகின் சனத்தொகை 600 கோடியை எட்டியபோது போஸ்னியாவில் ஹெர்செகோவினா என்ற இடத்தில் பிறந்த அத்னன் நெவிக் என்ற குழந்தையை அறுநூறு கோடியாவது ஆளாக ஐ.நா. தேர்ந்தெடுத்தது.

ஆனால் இன்று உலகின் சனத்தொகை எழுநூறு கோடியைத் தொடுகிறது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் குழந்தை தான் எழுநூறு கோடியாவது ஆள் என்று குறிப்பிட்டு ஐ.நா. தேர்ந்தெடுக்கவில்லை.

உலகின் சனத்தொகை எழுநூறு கோடியைத் தொடும் நாளாக இன்றைய தினத்தை ஐ.நா.மன்றம் தேர்ந்தெடுத்துள்ளதும் குறியீட்டு அளவில்தான்.

உலகின் சனத்தொகை எண்ணிக்கை மதிப்பீட்டின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றது.

தங்களின் இந்த கணிப்பில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரையிலான தவறு இருக்கலாம் என்பதை ஐ.நா.வே ஒப்புக்கொண்டுள்ளது.
வேகமாக அதிகரிக்கும் உலக சனத்தொகை

யதார்த்தத்தில் ஒக்டோபர் 31ஆம் தேதிக்கு 6 மாதங்கள் முன்போ பின்போ ஏதாவது ஒரு நாளில் எழுநூறு கோடியாவது பிள்ளை பிறந்திருக்க வாய்ப்புள்ளது என ஐ.நா.வின் சனத்தொகை மதிப்பீட்டுத் துறை கூறுகிறது.

உலகின் சனத்தொகை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த 50 வருடங்களில் உலகின் சனத்தொகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது.

2025ஆம் ஆண்டில் உலகின் சனத்தொகை 800 கோடியை எட்டிவிடும், 2050ல் 900 கோடியை எட்டிவிடும் என்று ஐ.நா. கணிக்கிறது.

உலக சனத்தொகை அதிகரிப்பால் வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் பெரும் பிரச்சினைகளும் தகராறுகளும் தோன்றும் என்றும் ஐ.நா. எச்சரிக்கிறது.
இந்தியா

இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் மால் என்ற கிராமத்தில் இன்று பிறந்துள்ள நர்கிஸ் என்ற பெண் குழந்தையை ப்ளான் இண்டர்நேஷனல் என்ற குழந்தைகள் உரிமைக்குழு உலகின் 700 கோடியாவது குழந்தையாக குறியீட்டளவில் தேர்வுசெய்துள்ளது.

பெண் குழந்தைகள் கருவில் அல்லது பிறந்தவுடன் கொல்லப்படுகின்ற பிரச்சினை இந்தியாவில் இருந்துவருவதை உலகின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த குழந்தை தேர்ந்தெடுக்கப்படுவதாக பிளான் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது. –BBC

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2011 இல் 10:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: