Lankamuslim.org

One World One Ummah

கருப்பு ஒக்டோபர் தொடர்பாக பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரனை

with 15 comments

பாராளுமன்றத்தில் கருப்பு ஒக்டோபர் தொடர்பாக கவனயீர்ப்பு பிரேரனை ஒன்றை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் மேற்கொண்டு வருகின்றார். இதற்கான வேண்டுகோளை   கடந்த 14 ஆம் திகதி lankamuslim.org எமது இணையத்தள குழுமம் சார்பாக அமைச்சரிடம் முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எமது வேண்டுகோளை கவனத்தில்கொண்ட பிரதியமைச்சர் அந்த கவனயீர்ப்பு பிரேரனை இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத ஆரம்ப வாரத்தில் கொண்டுவரப்படும் என்று நேற்று எமக்கு தெரிவித்தார். இந்த கவனயீர்ப்பு பிரேரனை மீது அவர் உரையாற்றவுள்ளார் அது தொடர்பான விபரங்கள் பின்னர் நாம் பதிவு செய்யவுள்ளதுடன் நாம் வெளியிட எண்ணியுள்ள ”சிகப்பு ஆகஸ்து”, ”கருப்பு ஒக்டோபர்” என்ற நூலிலும் அது தொடர்பான விபரங்கள் பதிவு செய்யப்படும்.

விடுதலை புலிகளின் பலவந்தமாக வெளியேற்றம் என்பதில் மறைந்து கிடக்கும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிக பாரிய கொள்ளை சம்பவம் அதற்குரிய சரியான கவனத்தை பெற்றுக்கொள்ளவில்லை. விடுதலை புலிகள் மேற்கொண்ட பலவந்த வெளியேற்றம் இலங்கை வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக பாரிய கொள்ளை சம்பவத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதையும் அதற்கு எந்தவிதமான நஷ்டஈடுகளும் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் , தற்போது மீள் குடியேறும் விருப்பத்துடன் மீள்குடியேறச் சென்றுள்ள மக்களுக்கு எந்தவிதமான அடிப்படையான உதவிகளும் அரசினாலோ அல்லது வேறு அரச சார்பற்ற நிறுவங்களின் மூலமோ வழங்கப் படவில்லை என்பதையும் இதன் காரணமாக அவர்கள் கடந்த 21 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பிரதேசங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் பாராளுமன்றத்தில் ஒரு கருப்பு ஒக்டோபர் கவனயீர்ப்பு பிரேரனை மூலம் உணர்தப்படவுள்ளது.

கருப்பு ஒக்டோபர் இலங்கை வரலாற்றில் இருண்ட கருப்பு பக்கங்களை கொண்டுள்ள மாதமாகும். ஒக்டோபர் 1990 ஆம் ஆண்டில்தான் வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டார்கள். இந்த பலவந்த வெளியேற்றம் வரலாற்றில் பதிவுகளை பெற்றுள்ளபோதும். பெரும்பாலும் அது ஒரு பலவந்த வெளியேற்றமாக மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த பலவந்த வெளியேற்றத்தின் போது முஸ்லிம்களின் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் கொள்ளையிடப்பட்டது. அந்த கொள்ளைச் சம்பவம் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிக பாரிய கொள்ளைச் சம்பவமாக நிகழ்ந்த போதும் அது வரலாற்றில் போதுமான அளவு உள்வாங்கப் படவில்லை. அல்லது அதற்குரிய சரியான இடம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இந்த பலவந்த வெளியேற்றம் வடக்கு முஸ்லிம்களுக்கு ஒக்டோபரின் நிகழ்தாலும் அதற்கு முன்னரும் பின்னரும் கிழக்கு முஸ்லிம்கள் இதற்கு தொடர்ந்தும் முகம்கொடுத்தே வந்தார்கள் . கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூர் முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை இதற்கு ஒரு சான்றாகும். அதேபோன்று கிழக்கின் பல பிரதேசங்களிலும் இருந்த முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்டார்கள். மட்டகளப்பு மாவட்டத்தில் சில கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் 25 ஆண்டுகளின் பின்னர் கடந்த ஆண்டு மீள்குடியேற முயற்சிகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த விடயங்களை மையமாக வைத்து பாராளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் கவனயீர்ப்பு பிரேரனை மூலம் வரலாற்றின் பக்கங்களில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பயங்கரத்தை வலுவாக பதித்து கொள்வதே இதன் பிரதான நோக்கமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 17, 2011 இல் 8:49 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

15 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Yes good move.. Important to register well in the history

    Hisam_ Nawas

    ஒக்ரோபர் 17, 2011 at 9:21 பிப

  2. This is very important , even after we suffered a lot we are not at at talk desk .Even today some Tamil website say Muslims did not forcibly expelled from the Northern province, they are evacuated from war zone by LTTE under humanitarian ground. They may tell tomorrow Muslims tell lies they did not suffer at all. that is what happening around us, so this is good step up.

    S.Hasbullah

    ஒக்ரோபர் 17, 2011 at 10:17 பிப

    • Black October and Red August Must plant on minds as much as enough, those tragedies do not get enough attention as required. But Black July is addressed well and planted on each and every lankan’s mind s, Every one hate that, No one ready to repeat such tragedy again. Lankamuslim, doing well but not enough , hope to do more ..

      Anees

      ஒக்ரோபர் 18, 2011 at 8:36 முப

    • Mr. S.Hasbullah I agree with u. and Black July is well known around the world It has become a day of remembrance for the Sri Lankan Tamil Diaspora too , But Muslim Diaspora around the world doing northing , as a Londoner , I fee vacant here , Black October should remember as month of cast out. I visited many villages and towns in North and East , all tell the same heartbreaking story specially in Mannar villages and Jaffna town . Other communities make their losses as a great investment for the better future but we ….

      R.M.Riyas

      ஒக்ரோபர் 18, 2011 at 9:08 முப

  3. எனது தாள்மையான கருத்து முதலில் தட்போது தாராளமாக உள்ள சகல முஸ்லிம் கல்விமான்களும் புத்தி ஜீவிகளும் ஓர் அணியாக ஒன்று சேர்ந்து ஏட்கனவே அமைபாக உள்ள முஸ்லிம் கவுன்சிலை பலப்படுத்தி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் உள்வாங்கி ஒரு பலமிக்க குழுமமாக உறுவாகி கடந்த நூறு வருடங்களாக இலங்கை முஸ்லிம்களுக்கு இளைக்கபடும் அநீதிகள்,பாராபட்சங்கள்,இன சுத்தி கரிப்புகள்,புலிகளாலும் தமிழ் ஆய்த குழுக்கலாகும் செய்ய பட்ட அநியாயங்கள் அடூழியங்கள் என சகல பாதிப்புகளும் முழு உலகிலும் உள்ள ஒவ்வொறு நாட்டு தூதரகங்கள்,இராஜாங்க துறைகள்,வெளிவிவகார அமைச்சுகளுக்கு மிக தெளிவான புள்ளி விபரங்களுடன் சந்திப்புகள் நடத்தி விளங்க வைக்கபட நடவடிக்கை எடுக்க படவேண்டும், மேலும் உலகில் உள்ள சகல மனித உரிமை அமைபுகள் ,நீதிக்கும் சமத்துவத்திட்கும் பாடுபடும் இயக்கங்கள் நிறுவனங்களுக்கும் எமது பிரச்சினைகள் சென்றடைய வழி செய்ய படவேண்டும் எங்களுடைய ஆக பெரிய பலயீனமாக இருப்பது எங்கள் பிரச்சினை இதுவரைக்கும் சர்வதேசபடுத்த நடவடிக்கை எடுக்கபடாமையும் எமது இழப்புகள் குறித்து எமக்குறிய இனபிரச்சினை தீர்வின் போதான வகிபாகம் , பங்களிப்பு குறித்து யாரிடமும் நாம் பேசாமல் இருப்பதாகும். எனவே காலம் கடந்துவிடவில்லை எல்லா புத்திஜிவிகளும் மணம் வைத்தால் எளிதாக இதனை நிறைவேற்றலாம் அத்தோடு அரசியல் வாதிகளுக்கும் கடிவாளம் போடும் ஒரு நிலமையையும் உருவாகளாம் தட்போது ஒன்றுமே செய்யாது தாமதிக்கும் நமது ஒவ்வொறு நிமிடமும் எதிர்கால எமது இருப்பை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கிறது!!! அதிகாரம் நிர்வாகம் ,கிடைக முதலே எத்தனையோ பாராபட்சங்கள்,மறைபுகள்,தவரான தகவல்கள் என முஸ்லிம்களின் உரிமைகளுக்கு வடக்கிலும் கிழக்கிலும் அரச நிர்வாகத்தை செய்யும் சக்திகளால் ஆப்பும் ,சதிகளும் நடந்து கொண்டிருக்கின்றன, அதில் ஒரு வடிவம்தான் யாழ் முஸ்லிகள் அகதிகளாக இருப்பது பற்றிய அகதிகள் தொகையை மிக மிக குறைவாக காட்டி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திட்கு சர்வதேச உதவியை தடை செய்யும் கைங்கரியம் வடமாகாண நிர்வாக தமிழர்களால் நடந்து கொண்டிருக்கிறது, அதேபோல் கிழக்கில் குப்பை கொட்ட கூட இடம் கொடுக்காது காத்தான்குடி பிரதேசதை அரச நிர்வாக இயந்திரம் பல தடைகளை போட்டு முழுகாத்தான்குடி மக்களும் தாங்களாகவே அகதிகளாக வெளியேறும் கைங்கரியத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த இலட்சனத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கபட்டு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடங்களும் தமிழ் பிரதேசத்துடன் இணைகபட்டு பொலிஸ் காணி அதிகாரங்களும் வழங்கபட்டு வடகிழக்கின் ஆட்சியும் , நிர்வாகமும் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கபட்டால் அடுத்த நூற்றாண்டிட்கு முன் வடகிழக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்ததாக வரலாறு நூல் மூலம் தான் அறிய முடியுமாக இருக்கும் மின்னாமல் முழங்காமல் யாழைபோல் முழு வடகீழ் முஸ்லிம்களும் அகதிகளாவார்கள் அல்லது சட்டங்கள் தவரக பாவிக்கபட்டு முஸ்லிம்களின் காணிகள் பறிகபட்டு, கலவரங்களில் சட்ட ஒழுங்கை நிலை நாடுகிறோம் என கண்டபடி முஸ்லிம்கள் தொகை தொகையாக கொன்றொழிக்கபட்டு வடகீழ் இலங்கையில் சுத்தமாக துடைத்தெறியபடுவார்கள் என்பது நிச்சயம். எனவே கருப்பு ஒக்டோபரை இன்னொறு கருப்பு ஒக்டோபர் முஸ்லிம்களுக்கு உருவாக இடம் கொடுப்பதை தடுக்க பாடுபட எல்லோரும் ஒன்றிணைந்து செயட்படுவோமாக

    Mohammed Hiraz

    ஒக்ரோபர் 17, 2011 at 11:37 பிப

    • பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை மட்டுமல்ல மிகவும் அவசியமானது.கருத்து வீரர்களாகவே காலத்தை கழிக்காமல் இவ்வாறாக லங்கா முஸ்லிம் செயல்படுவது தேவையானது. எமது சமூகத்திற்கு ஒரு அளவுக்கு மேல் சிந்தித்து செயலாற்ற பயம் அல்லது தனது சொந்த வாழ்க்கைக்கு ஏதும் பாதகம் வந்துவிடும் என்று அச்சம். அல்லது செயல்படத் தெரியாது ஓர் சாரார் செய்தால் அதை அளவுகளை கடந்து விமர்சிக்க தெரிந்தவர்களுக்கு செயல்பாட்டில் சாதிக்க தெரிவிதைல்லை. இந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் தவிசாளரின் முயற்சியை வரவேற்கிறேன்

      Amhar Ismaar

      ஒக்ரோபர் 18, 2011 at 9:22 முப

  4. Must to be done ..

    Kiyas

    ஒக்ரோபர் 18, 2011 at 12:31 முப

  5. Very good move Black October and Red August should be remembered healthily. This is a certificate to proof that LTTE ‘s atrocities, and Muslims sufferings

    Ibrahim munas

    ஒக்ரோபர் 18, 2011 at 11:12 முப

  6. இந்த முயற்சி பயனுள்ளதாக அமையயம் என்று நினைக்கிறன் . அந்த நூலில் தமிழ் , முஸ்லிம் உறவின் முக்கியத்துவமும் உணர்த்தப்படவேண்டும் என்பது என்னது அபிப்பராயம் – sorry for the Tamil typing mistakes .

    M.A.Majeed

    ஒக்ரோபர் 18, 2011 at 1:24 பிப

  7. லங்கா முஸ்லிம் இணைய குழுமம் ஊடக நண்பர்கள் மேற்கொள்ளும் இச்செயற்பாடுகள் பூரண வெற்றியடைய எமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் அதேவேளை, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் முழுமையான ஆதரவையும் இதற்காக பெற்றுக்கொள்வதன் மூலம் இவ்விவகாரம் மேலும் கவனத்தைப்பெற உதவுமென்பதும் http://www.yarlmuslim.blogspot.com இன் விண்ணப்பமாகும்.

    jaffnamuslim

    ஒக்ரோபர் 18, 2011 at 2:19 பிப

  8. Mohammed Hiraz ……//இந்த இலட்சனத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கபட்டு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்விடங்களும் தமிழ் பிரதேசத்துடன் இணைகபட்டு பொலிஸ் காணி அதிகாரங்களும் வழங்கபட்டு வடகிழக்கின் ஆட்சியும் , நிர்வாகமும் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கபட்டால் அடுத்த நூற்றாண்டிட்கு முன் வடகிழக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்ததாக வரலாறு நூல் மூலம் தான் அறிய முடியுமாக இருக்கும்//

    siranth karuthu ithuthaan natanthathu inyum ithuthaan natakumo ??

    Asif Ali

    ஒக்ரோபர் 18, 2011 at 3:56 பிப

  9. well done ,Dear brothers keep it up and Deputy Minister Bazaar head off to you Sir , Thanks a lot

    Imran

    ஒக்ரோபர் 19, 2011 at 1:26 பிப

  10. VERY GOOD STEP TAKEN BY SLMC AND LANKAMUSLIM, I WISH ALL THE BEST

    Mohamed Siraj

    ஒக்ரோபர் 19, 2011 at 5:32 பிப

  11. Well done Sir go ahead. Ministers in Muslim Community should be with national vision and activities. Should not always hang on localism.

    KKboy

    ஒக்ரோபர் 21, 2011 at 8:45 பிப

  12. Lankamuslim you are on the line of duty , keep it up

    well doing Deputy Minister Bazaar head off to you.

    M.U.Aslam

    ஒக்ரோபர் 24, 2011 at 1:25 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: