Lankamuslim.org

One World One Ummah

ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன்: நீதியமைச்சர்

with 24 comments

‘அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன்.

ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்’ என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘அநுராதபுரத்தில் ஸியாரமொன்று உடைக்கப்பட்டது. காவியுடை தரித்தவர்கள் சிலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காக்கியுடை தரித்தவர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியானதொரு லட்சணத்தில் இந்த அரசாங்கத்தில் நான் ஓர் அமைச்சராக இருக்கின்றேன். இதைப் பார்த்துக் கொண்டு என்னால் கோபப்படாமல் இருக்க முடியாது. மு.காங்கிரசின் தலைவருக்கு இவற்றினைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும்.

அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவருடன் இன்று காலை கடுமையான வாக்குவாதமொன்றில் ஈடுபட்டேன். அப்போது அவரிடம் நான் கூறினேன்.

இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டமைக்கும், அநுராதபுரத்தில் ஸியாரம் உடைக்கப்பட்டமைக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசங்களையும் நான் காணவில்லை. பாபர் மஸ்ஜித்தினை உடைத்த காவியுடை தரித்த இந்துத் தீவிரவாதிகளும், இங்குள்ள காவியுடை தரித்தவர்களுக்கும் இடையில் எங்களால் வேறுபாடு காண முடியவில்லை.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டோர் அங்கு நீதிமன்றம் சென்றனர். ஓரளவு நியாயமும் வழங்கப்பட்டது. அதேபோன்று, அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன்.

ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் என்று அந்த உயர் மட்டத்தவரிடம் நான் கூறிய நிலையில்தான் – அரசாங்கத்தின் செலவில் அந்த ஸியாரத்தினை மீண்டும் கட்டித்தருவதாக அறிவித்தல் வந்திருக்கின்றது.

இதுபோல இன்னுமொரு விடயமும் உள்ளது. அரசாங்கத்திலுள்ள அந்த நபர் எனக்கும் கூட்டாளிதான். ஆனால், சிலவேளைகளில் காட்டு தர்பார் நடத்துவார். ஒரு தடவை சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டினார். பிறகு – தான் அவரைக் கட்டவில்லை என்றும் குறித்த உத்தியோகத்தர் தன்னைத் தானே கயிற்றால் கட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னரும் அந்த நபர் ஓர் அறிக்கை விடுகிறார். அதாவது, மாடுகளை அறுப்பவர்களைக் கண்டால் அவர்களின் கைகளை வெட்டுவேன் என்கிறார். இந்தக் காட்டுத் தர்பார் மிகவும் மோசமானதாகும். இதைக் கேட்டுக் கொண்டு என்னால் பேசாமல் இருக்க முடியாது. இவ்வாறான கூற்றுகளும் செயற்பாடுகளும் மிகப் பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும். இந்த நிலையில், இவ்விடயங்களை நாமும் மிகப் பக்குவமாக அணுக வேண்டியுமுள்ளது.

இன்னும் சில நாட்களில் ஹஜ் பெருநாள் வருகின்றது. அப்போது மாடுகளை அறுத்து உழ்ஹியா எனும் மார்க்கக் கடமையினை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம். அதேவேளை, முஸ்லிம்களாகிய நாமும் சற்று பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள பிரச்சினையை மேலும் ஊதி வளர்த்து விடும் வகையில் நடந்து கொள்ளாமல் உழ்ஹியாவை மேற்கொள்ளும் போது – சாதுரியமாகச் செயற்பட வேண்டும்.

எது எவ்வாறினும், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்கிற காட்டுத் தர்பார்களையெல்லாம் அனுமதிக்க முடியாது. மு.கா. தலைமைத்துவம் இதைப் பார்த்துக் கொண்டு இருக்கவும் மாட்டாது.

நமது சமூகத்துக்கு அபிவிருத்தி தேவைதான். ஆனால், முதுகெலும்புடன்தான் அதை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைவிடுத்து, அரசின் முன்னால் நாலாக – எட்டாக மடிந்து வளைந்து கொண்டு, தருவதைத் தாருங்கள் நாம் எதுவும் பேச மாட்டோம் எனக் கூறி, ஒரு மூலையில் மடங்கிக் கிடக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைமையால் முடியாது”. 

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 20, 2011 இல் 6:16 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

24 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. leader…if u can do like this we also with u insha allah…

  mohammed niyas

  செப்ரெம்பர் 20, 2011 at 9:28 பிப

 2. அட நம்ம தலைவருக்கு முஸ்லிம்கள்ள‌ என்ன அக்கறை, இவ்வளவு நாளும் வாய பொத்திட்டு இருந்திட்டு வாக்கு போட மக்கள திசை திருப்ப எப்படி எல்லாம் திட்டம், உங்களுகளுக்கு உன்மையான அக்கறை இருக்கும் என்டா கிறீஸ் பூதம்கள் நம்ம மக்கள அச்சுறுத்தும் போது வரதா அக்கறை, சியாரம் உடைக்கும் போது வராத அக்க்றை இப்போ வாக்கு வேட்டை என்று சொல்லி வரும் போது மட்டும் திடீர் என்டு வருது, உங்களை போல ஆக்கள நம்பி போட்டு வேடிக்கை பாக்குறத விட இத செய்ய சொல்லி தீன்டுரவனுக்கு போட்டு அனுபவிக்களாம், மானம் கெட்ட பொலப்பு சமூகத்தை வித்து வாழ்ற பொலப்பு

  Mohammed Maksooth Ramzan

  செப்ரெம்பர் 20, 2011 at 9:54 பிப

  • arasiyal pesinaalum kutram illattilum kutram ini enna thaan panna……

   sakeena a raheem.

   செப்ரெம்பர் 20, 2011 at 10:37 பிப

  • please let him correct his shortcomings.you might be right but not always correct.don’t look the people with an angle.

   DR MARZOOK

   செப்ரெம்பர் 21, 2011 at 9:00 முப

  • Excellent comment Br. Ramzan, you extacly know Mr. Rauf! U know, he is the No.1 real politician (play politics, even selling the his community just for chicken!) like Mr. Ranil,etc,etc.

   Niyas

   செப்ரெம்பர் 22, 2011 at 2:24 பிப

  • there ar most of u never support slmc anymore from the biggining.! that is ur rights voting to any begger or president! as a leader he doing his best! if u can do more than that then come front! u ppls ar beating on night and back! he was open his mouth on the same period but many no read it bcos they slept after drunk!
   at least he said something that enough now.slmc never want votes from such a ppls who spit of themself!

   aboobucker lebbe julkarany

   ஓகஸ்ட் 7, 2012 at 11:40 பிப

 3. ஹக்கீம் இத உங்க தலைவர்கிட்ட கேட்டுத்தான் பேசுறீங்களா இல்லாட்டி உங்க அமைச்சுக்கு ஆப்புத்தான், நீங்க எல்லாம் மக்கள்ள பிரச்சினைக்கா அமைச்சுக்கு போகல்லையே, இனியும் ஏமற பெரிச காங்கிரஸ் என்டு கத்துர சமூகம் இல்ல

  Mohammed Maksooth Ramzan

  செப்ரெம்பர் 20, 2011 at 10:05 பிப

 4. well said I hope you would do coz that has our historical background

  Imran Hussain

  செப்ரெம்பர் 20, 2011 at 10:05 பிப

 5. எங்கள் பிரச்சினைகளை முதலில் சர்வதேசம் விளங்கும் மொழியில் எப்படி உயர்த்தி சிறக்க சொல்லனுமோ அப்படி சொல்லி எங்கள் பிரச்சினைகளை சர்வதேசம் அக்கரையுடன் நோக்க வகை செய்யுங்கள் . அதட்கப்புரம் நீதி கேட்டு மன்று போகலாம் உலகம் இவ்வளவு பறந்திருந்தும் எங்கள் பிரச்சினை குறித்து அயல் நாட்டு தமிழக முஸ்லிம் சகோதரர்களுக்கே இன்னும் தெளிவு கிடைகாத ஒரு இருள் சூழ்ந்த தகவல் பரத்தாத உலகில் இலங்கை முஸ்லிம்கள் வாழ்வதுதான் வேதனை

  Mohammed Hiraz

  செப்ரெம்பர் 20, 2011 at 10:49 பிப

 6. Aha, ‘Our Leader’ is now speaking about backbone which he has lost long ago. The series of our brave leaders with backbone has ended with Marhoom M.H.M. Ashraff.

  Najumudeen

  செப்ரெம்பர் 21, 2011 at 12:15 பிப

 7. wait and see what would happen

  Kiyas

  செப்ரெம்பர் 21, 2011 at 1:28 பிப

 8. Mr. Hakeem I am waiting for the action. not only on Sharin but also in Ulhiya, Hijab. and on every rights , I Hope your action would fallow your words

  Hisam_ Nawas

  செப்ரெம்பர் 21, 2011 at 4:40 பிப

 9. Politicians’ word like drunkards’ word….They don’t know what they worded and what they promissed…Useless to wait their action…All are surrended for money and positions…Better to live a real muslim based on Quran and Sunnah and Insha Allah we’ll rewarded in the presence of Allah even we faced lost here…Be a true muslim….

  Mohammed Rizvi Uvais

  செப்ரெம்பர் 21, 2011 at 7:10 பிப

  • yeah! i toooooo agree with you Br. Uvais. we should not believe politician, particularly who is a Lawyer because mostly he is a lier!

   Niyas

   செப்ரெம்பர் 22, 2011 at 2:32 பிப

 10. Always can not blame politician for their inaction, have to blame on Muslim community leaders too whom do not guide politicians in the wanted path .

  ACM.Saleem

  செப்ரெம்பர் 21, 2011 at 8:30 பிப

 11. We do not want ”just like that words” we can your action. I could see few Muslim parliamentarian still with backbone let’s proof it

  K.C.kuwais

  செப்ரெம்பர் 22, 2011 at 8:31 முப

 12. NAALUKKU NAAL APPAWI MUSLIMGALIN IRATHTHATHTHEI URINJUKONDIRUKKUM RAUF HAKEEM N RISHAD BADIUDEEN KEWALAM KETTA PILAIPUDA NAAINGALA …………

  mohamed

  செப்ரெம்பர் 22, 2011 at 1:02 பிப

 13. செய்வேன் என்று சொல்லாது, இப்போதே செய்து கட்டுங்கள். அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என இப்போது சொல்வீர்கள் இலக்சன் முடின்ததும் நான் அப்படி பேசவில்லையே என்பீர்கள். இலக்சனுக்கு முன் வழக்குத் தொடருங்கள்.

  உழ்ஹியாவை மேற்கொள்ளும் போது – சற்று பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சாதுரியமாகச் செயற்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார், அது எப்படி என்பதை கேட்டுச் சொல்லுங்கள்.

  abul hasan

  செப்ரெம்பர் 22, 2011 at 4:23 பிப

 14. MR ABULHASAN. satru pakkuwam enbazu arasiyal dictionariyil. Azawazu maduhalai soft aaha arukka wendum. ena ninaykkinren. maraha muslimkalin problem kalil Alla.

  abdul jaleel

  செப்ரெம்பர் 22, 2011 at 8:28 பிப

 15. எவருமே சிறந்த அரசியல்வாதிகள் இல்லை சிறந்த அரசியல் வாதிகள் உருவாக்கப்படவேண்டும் ஆனால் தற்போது இருக்கும் அரசியல் வாதிகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் பரவா இல்லை.

  madawala bazaar

  செப்ரெம்பர் 23, 2011 at 10:08 முப

 16. ya allah muslim makkalai kappatru (anuradapura)sinhala ina vzikalin muzal padiya????????izai pasamal
  irundal talai nimurdu nadakka mdiyamal pohum muslim makkalukku

  majeed

  செப்ரெம்பர் 24, 2011 at 1:39 பிப

 17. Ahamed Jamsath‎
  அனுராதபுரம் தர்கா உடைப்பு சம்மந்தமாக முஸ்லிம்களின் நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும் ?

  என்னை பொருத்தவரை அந்த தர்கா முஸ்லிம்களின் சின்னமாகவும் சியாரமகவும் பத்திரிகைகளில் சொல்லப்படுவதும் அதற்கு நம் முஸ்லிம்கள் ஆதரவு குரல் கொடுப்பதும் மிகவும் வருத்தம் அளிக்கும் விடயமாக்கும்

  தனது ஊரை சேர்ந்த போலீஸ் காரண் கொல்லப்பட்ட பின்னும் யார்தான் பார்துகொண்டிருப்பார்கள் பொதுமக்கள் அதற்கு மறுப்பு கொடுப்பதற்கு அனுராத புறத்தில் போகும் வழியில் முஸ்லிம்களின் ஒரு இடத்தை இடித்துவிட்டு சென்றுவிட்டனர் அது ஒரு நீண்ட நாள் திட்டமிடல் என்று சொல்லமுடியாது அப்படி நாம் எடுத்தால் அவர்கள் புத்தள முஸ்லிம்களை அப்படி நினைக்க வாய்ப்புண்டு அதாவது சம்மந்தம் இல்லாத போலீஸ் அதிகாரியை முஸ்லிம்கள் கொலை செய்ததை அவர்கள் இனவாதமாக எடுக்கவில்லை என நினைக்கிறன் அப்படி எடுத்திருந்தால் அனுராத புரத்தில் மாத்திரம் அல்ல முழு இலங்கையிலும் பள்ளி வாயல்கள் உட்பட அனைத்து முஸ்லிம் சொத்துக்களும் தகர்க்க பட்டிருக்கும் ஆனால் இங்கு நடந்ததோ அனுராதபுர போலிஸ் அதிகாரியின் அனுதாபகர்கள் புத்தள முஸ்லிம்களுக்கு கொடுத்த ஒரு பழிவாங்கல் என்றுதான் சொல்ல முடியும்

  அப்படியான பழிவாங்கல் நடப்பது இயற்கை என்று சொல்கிறேன் அதேவேளை அந்த சம்பவம் தர்காவோடோ அல்லது ஒரு கட்டிடதோடோ முடிந்தது என்று நான் எனக்குள் ஆர்தல் அடைந்துகொல்கிறேன் ஏனென்றால் அவர்கள் பழிவாங்கும் நோக்கில் மனித தலைகளை உருட்டி இருந்தால் பெரும் இனக்கலவரம் வரும் வாய்ப்பு இருந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது

  இதே நிலைமை இந்தியாவில் நடந்திருந்தால் நிலைமையின் விபரீதமோ கொடுமையிலும் கொடுமையாக இருந்திருக்கும் ,அரசியல் தலைஈடுகள் சூடு பிடித்திருக்கும், இன்னுமொரு குஜராத் இன்னுமொரு பாம்பை கலவரம் இலங்கையிலும் வரகூடாது

  இதுபோன்ற பல காரணங்களை வைத்து நடந்து முடிந்த சம்பவத்தை ஹய்லைட் பண்ணி பாருங்கள் சரியாக புரிய முடியும் என்கிறேன்

  அதே நேரத்தில் தர்கா தமக்கு சொந்தமானது என்று சிங்களவர்கள் சொல்வார்கள் என்றால் அதை நாம் விட்டுகொடுக்க முடியாது ,அதே நேரம் தர்காவை இடித்தது சரி என்றும் அவர்கள் சொல்ல மாட்டார்கள் என்றும் நம்புகிறேன் ஆனால் பலிக்கு பலி வாங்கி உள்ளார்கள் என்றால் சற்று நிதானமாகத்தான் நாம் இருக்க வேண்டும் ,அது மனிதன் என்ற வகையில் எழுந்தமாக நடந்த ஒன்றுதான் தனது பிள்ளையை அடித்தால் நாம் சரி பிழை பார்க்க முன் நீ ஏன் அடித்தாய் என்று கேட்பதும் உள்ளதுதான் ,,,,

  அல்லாஹ் மிக அறிந்தவன்

  அஹமத் ஜம்சாத்

  ahamed jamsath

  செப்ரெம்பர் 24, 2011 at 10:09 பிப

  • .කූරගල බෞද්ධ පුද බිම “ඩෆ්ටාර් ජයිලානි” බවට පත්වෙයි…නීත්යානුකූලව හෝ උසාවි නියෝග තුලින් මෙය ඉවත් කිරීමට නොහැකි නම්, අදාල බළධාරීන්ටද මේ පිළිබදව කටයුතු කිරීමට උවමනාවක් නැත්නම් කවදත් ජාතියේ මුර දේවතාවන් වූ කහ සිවුරේ බළය පෙරදැරි කරගෙන සියළු ජාති මාමක, ශාසන මාමක බලවේග එකාවන්ව මේ මිලේඡ්ච කුමණ්ත්රනකාරී අන්තවාදයට එරෙහිව නැගීසිටිමින් අනුරාධපුර ඓතිහාසික පූජා භූමිය මුස්ලිම් අන්තවාදීන්ගෙන් මුදාගත්තා සේ ඓතිහාසික කූරගල පුදබිම ද මුදාගැනීමට කාළය එලඹ තිබේ.see.sinhalaravaya.

   True lankan

   செப்ரெம்பர் 24, 2011 at 10:50 பிப

 18. thampulla propletha shall panna court la case poda muyatha intha neethi amaicharukku waai waarthayaala muslimkalukku poochandi kaattantahan theriyum…………..
  .

  fareed

  ஓகஸ்ட் 11, 2012 at 11:11 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: