Lankamuslim.org

One World One Ummah

அமைதி நிலவ பிராத்தனையில் ஈடுபடுங்கள் – ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

with 6 comments

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டில் ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கை இங்கு முழுமையாக  பதிவு  செய்யபடுகின்றது:

ஊடக அறிக்கை: அண்மைக் காலமாக நாட்டின் அனேகமான பகுதிகளில் மர்ம மனித நடமாட்டம் பற்றி செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சில ஊர்களில் அவ்வாறு சந்தேகத்திற்கிடமான சிலர் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்டுள்ளனர் எனவும் மேலும் சிலர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் இச்செய்திகள் வதந்திகள் எனவும், சில பைத்தியக்காரர்களது செயலெனவும் அரசியல் இலாபம் கொண்டன எனவும் பேசப்படுகின்றன.

எது எவ்வாறாயினும் அமைதியை நிலைநாட்டும் கடமையை காவல்துறையினர் கையாளும் போது, பொதுமக்கள் சட்டத்தை தம்கையிலெடுக்கலாகாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் காவல்துறையோடு மோதலில் ஈடுபடுவதும் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள அரச, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதும் சாணக்கியமான செயலல்ல. இப்பீதி நிலைமையை இல்லாதொழிக்கும் விடயத்தில் காவல்துறையினரோடு ஒத்துழைக்கலாம், சந்தேகத்திற்கிடமானவர்களைப் பிடித்துக்கொடுக்கலாம். அதன்மூலம் பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

அதேநேரம் அரசும் காவல்துறையினரும் பீதியற்ற நிலைமையையும் சகஜ வாழ்வையும் ஏற்படுத்தும் விடயத்தில் கூடிய கரிசனை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறது. இந்நாட்டுப்பிரஜைகள் எவரும் நிம்மதியற்று வாழ்வதை எவரும் அங்கீகரிக்கமாட்டார்கள். எந்தச் சமூகத்தவரகளாயினும் நிம்மதியோடு வாழவே விரும்புவர்.

இந்நிலையில் அதற்கு குந்தகமான நிகழ்வுகள் மக்களை ஆக்குரோஷம் செய்யவே தூண்டிவிடும். எனவே இம்மர்ம மனிதர்களின் உண்மை நிலையை அறிந்து நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடப்பாடு அரசுக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் உரியதாகும் என்பதை அ.இ.ஜ.உ வலியுறுத்திக் கூறுகிறது.

அதேநேரம் நாங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடலாகாது. அல்லாஹ்வின் உதவியை நம்பி நிற்கும் நாம் துஆ ஓதும் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக நோன்பில் ஓதப்படும் குனூத்திலும் துஆக்கேட்குமாறு அ.இ.ஜ.உ முஸ்லிம்களைக் கேட்டுக்கொள்கிறது.

‘ஹிஸ்னுல் முஸ்லிம்” ‘அல் அத்கார்” போன்ற நூல்களில் உள்ள ‘துஆவுல் கர்ப்” போன்றவையும் ‘அல்லாஹும்மஸ்துர் அவ்ராதினா வஆமின் ரவ்ஆதினா” என்றுள்ள துஆவையும் அதிகமாக ஓதும்படி ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக்கொள்கிறது.
இவ்வண்ணம்

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 16, 2011 இல் 6:05 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

6 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. இந்த நிலைமையில் முஸ்லிம்கள் பிற சமூகங்களோடு கூட்டாகவும் தனித்தும் தமது பாது காப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும், வெறுமனே அரசியல் வாதிகளையோ, பிரபலங்கலையோ ,கொழும்பிலுள்ள அமைப்புகளையோ மாத்திரம் நம்பியிராது சிவில் சமூக கூட்டு நடவடிக்கைகளை சகல இயக்க கட்சி குழு வேறுபாடுகளுக்கப்பால் எடுக்க முன்வர வேண்டும்.

  தொழுகையில் குனுத் ஓதி எல்லாம் வல்ல இறைவனிடம் நமது பாது காப்பிற்காக கரமேந்துவதொடு, தீய சக்திகளை அழித்து ஒழித்து சகல சமூகங்களின் சமாதான சக வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  கூடிய விரைவில் ஒவ்வொரு மகால்லவிலும் சகல தரப்புகளையும் கொண்ட “மஜ்லிஸ் அல் ஷூரா” க்களை அமைத்துக் கொள்ளுவதன் மூலம் தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ,சமூக பொருளாதார வாழ்விற்கும் விடுக்கப் படுகின்ற எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும்.

  இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது…அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  Inamullah

  ஓகஸ்ட் 16, 2011 at 6:47 பிப

 2. பள்ளிக்குள் புகுந்து ஆயுத படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?

  Hakeem

  ஓகஸ்ட் 17, 2011 at 4:04 பிப

 3. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது அளப்பரிய சேவையை இந்த நாட்டில் செய்துகொண்டிருக்கின்றது …. அல்ஹம்துலில்லாஹ்

  ஆனால் மர்ம மனிதன் தொடர்பான இவமைப்பின் அறிக்கை எந்த பாதியலவிலேயே ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது ….உதரணமாக, உங்கள் வீடு தீப்பற்றி எறியும் போது, அல்லாஹ் என்னைக் காப்பாற்றுவான் என்று சொல்லி விட்டு , துஆ மட்டும் செய்துகொண்டு வீட்டுக்குள் முடங்கிக்கிடந்தால் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான??

  இஸ்லாம் உங்களை முயற்சியுடன் சேர்ந்த துஆவயே கேட்கச்சொல்லியிருக்கின்றது

  …எனது மனைவி, எனது மகள், எனது தாய் , எனது சகோதரிகள் என எல்லோரும் ஆபத்தில் இருக்கும் நிலையில் மர்ம மனிதன் அவர்களை தாக்கினால் நான் எதிர்கத்தயராக உள்ளேன் . நான் ஒரு ஆண் மகன் . அது காவல்துறையை எதிர்த்தாலும் சரியே , அரசாங்கத்தை எதிர்த்தாலும் சரியே…
  நீங்கள் வேண்டுமானால் முடங்கிக் கிடக்கலாம் !!!

  அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் அற்பமானது ஆனால் அவனோ இரண்டு விடயங்களை புனிதநிலையில் வைத்துள்ளான்
  இஸ்லாமிய மார்க்கம்
  மனிதன்
  (ஹதீஸ் )
  இது உங்களுக்கு நினைவில் இருக்கட்டும் !!!

  Truth

  ஓகஸ்ட் 17, 2011 at 9:19 பிப

 4. “அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா”………. இவர்களின் நடவடிக்கைகளை பார்த்து சிரிப்தா அழுவதா என்றே தெரியவில்லை

  தொளுகையாளிகளையும் , பெண்களையும் கொன்று குவிக்கும் சத்தியத்தை மறந்து விட்டு குனூத் மட்டும் ஓதினால் சரியாம் ….

  இது தான் இஸ்லாமா?? இப்படியா அல்லாஹ்வும் அவனின் தூதர்களும் உங்களுக்கு வழி காண்பிக்கின்றனர்?

  நீங்கள் எல்லோரும் உலமாக்கள் தான் , உங்கள் அளவிற்கு எனக்கு இஸ்லாமிய சட்டம் பற்றி தெரியாது .. ஆனால் இஸ்லாம் இப்படியும் முடங்கிப்போன மார்க்கம் அல்ல எனபது எனக்கு தெரியும்

  இஸ்லாத்திற்கு எதிரான ஜனநாயக கொள்கைகளுக்கு தலையாட்டும் பொம்மைகளாக முஸ்லிம்கள் ஏன் இன்னும் வாழ வேண்டும்?
  இந்த அரசியலிலும் , இந்த கொள்கைகளிலும் முடங்கிப்போன உள்ளங்களை அல்லாஹ் திறப்பானாக

  manithan

  ஓகஸ்ட் 17, 2011 at 9:32 பிப

 5. Is this ok for ACJU ? pl scome forward more and more , what happend in kiniya mosque ? your responisibility have been done on that ?

  Minhaj

  ஓகஸ்ட் 17, 2011 at 10:42 பிப

 6. very unfortunate situation prevail during this season.certain muslim areas masjidd closed by isha prayer due to this problem.people pass the nights with panic and tense situation.unable to perform ibadahs with freedom during this ramazan.but still majority is not accepting the truth.my dear brothers if the the enemy comes forward can do something.but they aren’t.insa allah the respondents will get punishment very soon.

  DR MARZOOK

  ஓகஸ்ட் 18, 2011 at 12:04 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: