வவுனியா பட்டானிசூர் காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது :அமைச்சர் ரிஷாத்
M.ரிஸ்னி முஹம்மட்: வவுனியா நகர சபைக்கு சொந்தமான குமரன்காட்டுப் பகுதியில் இந்துக் கோவிலுக்கு அருகில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நகர சபையின் அனுமதி இன்றி இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணித்து வருவதா வெளியான செய்திகளை வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறுத்தார்.
மேற்படி குற்றசாட்டு தொடர்பாக அவரை lankamuslim.org தொடர்பு கொண்டபோது அங்கு பள்ளி வாசல் கட்டப்படவில்லை ஒரு கலாச்சார மண்டபமும் ஒரு கடைத் தொகுதியும் நிர்மானிக்கப்படுகின்றது. அந்த காணி முஸ்லிம்களுக்கு சொந்தமானது. முன்னர் அந்த காணியின் ஒரு பகுதி முஸ்லிம்களால் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வழங்கப்பட்ட கணியில்தான் தற்போது கோவிலும் கடைத் தொகுதியும் கட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் கோவிலுக்கு காணி வழங்கியதற்காக அதற்கு நன்றி தெரிவித்து அன்றைய கோவில் நிர்வாகம் கடிதம் ஒன்ரை காணி உரிமையாளருக்கு வழங்கியுள்ளது. அந்த காணி தொடர்பான சகல ஆவணங்களும் சமந்தப்பட்டவர்களிடம் இருக்கிறது. அந்த காணி நகரசபைக்கோ , மையவாடிக்கோ சொந்தமானது அல்ல என்று தெரிவித்தார்.
எனினும் 21 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் மீள் குடியேறி வருவதால் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறது. பட்டானிசூர் காணியில் கட்டடம் கட்ட ஆரம்பத்தில் வவுனியா நகர சபையில் அனுமதி கோரப்பட்டதாகவும் தற்போது அது மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஹர்த்தாலை இராணுவத்தை கொண்டு குழப்பியதாக தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக தெரிவித்த அமைச்சர் நேற்று அங்கு முஸ்லிம் கடைகள் மற்றும் தமிழர்களுக்கு சொந்தமான பல கடைகள் திறக்கப்பட்டிருந்தது. கடைகளை திறக்குமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.
மீள் குடியேறும் முஸ்லிம்கள் தமிழருக்கு சொந்தமான காணிகளை அபகரிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டபோது. அது ‘பச்சை பொய்’ பல முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியில்தான் மாவீரர்களின் குடும்பங்கள் குடியேற்ற பட்டுள்ளது.
ஆனால் மீள் குடியேறும் முஸ்லிம்கள் தமது காணிகளை தமிழர்கள் கைப்பற்றியுள்ளார்கள் என்று முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்யவில்லை. 21 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் மீள் குடியேறி வருவதால் வடக்கில் அதிகமான காணிப் பிரச்சினைகள் இருக்கிறது. தமிழர்ளையும் , முஸ்லிம்களையும் கொண்ட குழுவொன்றை அமைத்து அதன் ஊடாக அந்த காணி பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க யோசித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
Well said Minister, if necessary should be shown to the media all the documents related to the said land which belongs to Muslims. Not only that there are many lands which belongs to Muslims in north, taken by others especially by ‘Maverar Kudumpam’ so should take all necessary measures to short them out .
Saleem
ஓகஸ்ட் 13, 2011 at 12:35 பிப