Lankamuslim.org

One World One Ummah

கிண்ணியாவில் சிங்கள மொழிப் பயிற்சி நிலையம்

leave a comment »

கியாஸ் ஷாபி: தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையுடன் கிண்ணியா மொழிப் பயிற்சி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கான சிங்கள மொழிப்பயிற்சி செயலமர்வின் அங்குரார்ப்பண வைபவம் இன்று காலை கிண்ணியா இஹ்ஸானியா வித்தியாலயத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக கிண்ணியா பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இச் சிங்கள பயிற்சி மொழி வகுப்பில் 500 மாணவர்கள் சோர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ் வைபவத்தில் பிரதம விருந்தினராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் கே.ஜேகே.ஜெகுபரும் அதிதிகளாக கிண்ணியா பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.நசூர்கான் பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸி.எம்.முஸ்யில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேவேளை எதிர்வரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பாரிட்சையில் கிண்ணியா பிரதேச மாணவரிகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்க வலயக்கல்வி அலுவலகத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக இப்பிரதேசத்தில் இருந்து பரிட்சைக்குத் தோற்றவுள்ள 500 மாணவா;களுக்கு இன்று ஐந்து நிலையங்களில் முன்னோடிப் பரிட்சைகள் நடாத்தப்பட்டன.

ஆசிரிய ஆலோசகர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிபாளா; எம்.எஸ்.அருஸ் மேற்பார்வை செய்கிறார்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 31, 2011 இல் 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: