Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 13th, 2011

ஜனாதிபதி13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யவேண்டும்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்க பலத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் முயற்சிக்கு அரசுடன் இணைந்துள்ள சில அமைச்சர்கள் துணைபோவதாகவும் அவ் ஒன்றியம் குற்றஞ்சாட்டியது.

கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயா கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இதனை தெரிவித்தது.  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 13, 2011 at 10:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற எந்த நடவடிக்கையும் இல்லை: அமைச்சர் றிசாட்

with 2 comments

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சரும் றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.

எனினும் இதற்காக வேண்டி நானும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் இணைந்து பாடுபடுவோம் என புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவரான அமைச்சர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டார். விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 13, 2011 at 7:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெளிநாட்டு அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயம்

leave a comment »

வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாகிஸ்தானுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவரின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி அஷீப் அலி சர்தாரியுடன் கலந்துரையாடவுள்ளார் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Written by lankamuslim

ஜூலை 13, 2011 at 2:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பேரணி , பிரகடனம் பிற்போடப்பட்டுள்ளது

leave a comment »

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ”நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” என்ற பேரணி மற்றும் பிரகடனம் ஏட்பாட்டாளர்களினால் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று இடம்பெறவிருந்தது. இது தொடர்பான விரிவான செய்தி பின்னர் வழங்கப்படும்.

Written by lankamuslim

ஜூலை 13, 2011 at 2:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வாசகர் ஆக்கம்: இஸ்லாத்திக்கு எதிரான சக்திகளின் நடவடிக்கை

with 5 comments

பேனா நன்பன்…..முஹம்மது பஹத்
இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு மதமல்ல. இறைவனால் வகுத்து தரப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். ஏன் என்றால் மற்ற மதங்களை போல் இஸ்லாம் வெறுமனே வெறும் வணக்கத்தை மட்டும் மக்களுக்கு போதிக்கவில்லை. இறைவணக்கம். குடும்பவாழ்க்கை பொருளீட்டல் அரசியல் சமூகவாழ்க்கை தனிமனித ஒழுக்கங்கள் என்று ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எவையெல்லாம் அவன் வாழ்க்கையில் சம்பந்தப்படுமோ அவை எல்லாவற்றையும் பற்றி இஸ்லாம் கற்று தந்துள்ளது.

உலக சனத்தொகையில் ஏறக்குறைய 150 கோடி மக்களாக அதாவது 23வீதம் ஆக வாழும் முஸ்லிம்கள் என்பவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவார்கள். உலக மொத்த முஸ்லிம் சனத்தொகை – ஏறக்குறைய 150 கோடியிலிருந்து 157 கோடி வரை முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 13, 2011 at 9:02 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

அறிவிப்பாளர் வபத்தானார்

with 2 comments

அறிவிப்பாளர் பரீன் வபாத்தானார் இலங்கை வானொலி , தொலைக்காட்சி பகுதி நேர அறிவிப்பாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர்   பரீன் அப்துல் காதர் நேற்று காலை   வபாத்தானார் இன்னாலி ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். சில நாட்கள் சுகவீனம் காரணமாக   தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று தனது 42 வது வயதில்  வபாத்தானார்.

மன்னார் காக்கையன் குளத்தை பிறப்பிடமாக கொண்ட  இவர் கொழும்பு பல்கலை கழக பட்டதாரியும்,  கொழும்பு குணசிங்கபுர அல் ஹிக்மா பாடசாலையின் ஆசிரியருமாவார். இவர் கடந்த  உள்ளூராட்சி தேர்தலில் மாந்தை தொகுதில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார்.விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 13, 2011 at 8:00 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது