Lankamuslim.org

One World One Ummah

ரமழான் மாத விடுமுறை தொடர்பான விடையத்தை பல கோணங்களில் பார்க்க வேண்டும் : அஷ்ஷெய்க். அகார்

with 24 comments

ரமழான் மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக கடந்த மாதம் தொடக்கம் முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் இழுபறிநிலை தோன்றியுள்ளது. இது தொடர்பாக சமூக, இஸ்லாமிய சிந்தனையாளரும், ஜாமியா நழீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உபதலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்தை தொடர்பு கொண்டு lankamuslim.org வினவியபோது அவர் ‘இந்த விடயம் ரமழான் மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகளை நடத்துவதா, இல்லையா  என்பதுடன் மாத்திரம் சமந்தப்பட்ட ஒரு விவகாரம் மட்டுமல்ல. இதை பல கண்ணோட்டங்களில் ,பல கோணங்களில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த விடயத்தில் அவசரப்படாமல் நிதானமாக நின்று மாணவர் மட்டம் , ஆசிரியர், அதிபர் மட்டம், உள்ளடங்களாக சமூக தலைமைகள், கல்வியாளர்கள், உலமாக்கள் மட்டம் ஆகிய மட்டங்களில் இதன் சாதக பாதகங்கள் பார்க்கப்படவேண்டும். பல சதாப்த காலமாக நாம் அனுபவித்து வந்த ஒரு உரிமை என்றவகையிலும் விரிவாக இந்த விடையம் பார்க்கப்படவேண்டும். இவ்வாறு பல  மட்டங்களிலும், பல கோணங்களில் ஆராயப்பட்டு இறுதியில் இதற்கு நல்ல நிலைப்பாடு ஒன்றை எடுப்பதுதான் பொருத்தமானதாகும். என்று அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி  இது தொடர்பாக கல்விமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் முஸ்லிம் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். விடுமுறையை ரத்து செய்வது தொடர்பான கருத்துகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துகளை முன்வைத்தபோதும் பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்கு தமது கடுமையான எதிர்ப்பை காட்டியதாள். இந்த தீர்மானம் கைவிடப்பட்டதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார். என்று தகவல்கள் வெளியாயின .

இந்த நிலையில் நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை ரத்துச்செய்யப்படும் தீர்மானம் இதுவரை கைவிடப்படவில்லையெனவும், அதுதொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இயங்க வேண்டுமா ? என்பதை அறிவதற்காக பாடசாலை மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடைபெறவுள்ளது. என்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்தில். எமது மாணவர்களுக்கு கூடுதலான விடுமுறைகள் கிடைப்பதனாலேயே கல்வித் துறையில் நாம் பின்னடைந்துள்ளோம் இதேவேளை அடுத்த சிறுபான்மையினரான தமிழ் சமூகம் கல்வியில் பெரும் அபிவிருத்தியைக் கண்டுள்ளமையை எமது அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பெற்றோர்கள் மத்தியில் நடாத்திய ஆய்வில் பெரும்பாலானோர் இத்திட்டத்திற்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளார்கள். என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுவர் நலன், மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துரைக்கையில் நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்யும் திட்டத்தின் நன்மை தீமைகள் ஆராயப்பட வேண்டும். இது விடயத்தில் அரசியல் கலப்பிருக்கக் கூடாது.

இத்திட்டம் தொடர்பான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முன்னெடுப்பதே சிறந்தது. இந்த உரிமை 1942 ஆம் ஆண்டிலிருந்து நாம் அனுபவித்து வரும் உரிமையாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசும்போதும் மாற்றங்களைச் செய்யவிளையும் போதும் அது பொதுவாக கலந்துரையாடப்பட வேண்டும். அவ்வாறு கலந்துரையாடப்பட்டாலே சுமுகமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்ய முயற்சிப்பது எமது தனித்துவ உரிமைகளில் கைவைக்கும் முயற்சியாகும். இது பெரும்பான்மை சமூகத்துக்கு துணை போகிறவர்களின் செயல் என தெரிவித்துள்ளார் .

Advertisements

Written by lankamuslim

ஜூலை 8, 2011 இல் 8:58 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

24 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. We need unity in the diversity , ACJU should lead politicians to unity

  Altaf hussain

  ஜூலை 8, 2011 at 10:48 பிப

 2. Ahamed Jamsath‎
  நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்ய முயற்சிப்பது எமது தனித்துவ உரிமைகளில் கைவைக்கும் முயற்சியாகும். இது பெரும்பான்மை சமூகத்துக்கு துணை போகிறவர்களின் செயல். நல்லதொரு கருத்து .
  பலகோணங்களில் பார்ககும் நேரத்துக்குள் மீதி இருக்கும் உரிமைகளும் பரிக்கப்பட்டு விடும்.தயவு செய்து நேராக சிந்திக்க இனியாவது தயாராகுங்கள்.

  Ahamed Jamsath‎

  ஜூலை 8, 2011 at 11:56 பிப

 3. நோன்பு காலவிடுமுறை பற்றிய கறுத்துப்பரிமாரல்கள் வரவேற்கத்தக்கதே .இதேவேளை பத்திரிகை நடத்தும் பொருப்பு வாய்ந்த வேளையை செய்யும் நாம் வெறும் கோணல்கள் மட்டுமே உள்ள அர்தமற்ற பேட்டிகளுக்கு உயிரோட்டம் கொடுக்க முனைவதை தயவு செய்து தவிர்கவும்.

  amjad

  ஜூலை 9, 2011 at 12:11 முப

  • உங்கள் பார்வையில் பெரிய கோளாறு இருப்பதாக நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகளை பார்க்கும்போது புரிகின்றது. தயவு செய்து மற்றவர்களின் கருத்துகளை மதிக்க பழகவேண்டும் என்று உங்களை பணிவாக கேட்டுகொன்கின்றேன். லங்கா முஸ்லிம் தெரிவு செய்து பொருத்தமான அறிஞர் ஒருவரைத்தான் பேட்டி கண்டுள்ளது. லங்கா முஸ்லிம் இதுபோன்ற தகுதியான நபர்களை பேட்டி காணவேண்டும் முடியுமானால் வீடியோ மூலம் அவர்களை நேர்காணல் செய்து அவர்களின் கருத்துகளை முன்வைக்கவேண்டும் இப்படியான உலமாக்கள்தான் பக்கசார்பு இன்றி முஸ்லிம் சமூகத்துக்காக குரல்கொடுப்பார்கள்.

   Fairoos_ Kalmuni

   ஜூலை 10, 2011 at 3:19 பிப

   • unkal sindanaiyil telivu ilai enru ninaikinren Fairoos brother,namadhu urimaihal parikka padumpothu verum peattihalum sevvihalum,media vukku muham koduppadum teervaai tandu vida maaattadhu.

    emadhu urimaihalai venredukka naam jananaaayaha urimayaai eppodhu kaiyyalaa veandum enru terindhu kolla veandum.idhuvarai nadantha urimai meeralhaalukku oru aarpaaattaam kooda nadatta paadaa villai idhu emaadu samudhaaya tahalaivarhalin arasiyaal telivinmayaai kaattuhirathu,samuthayaa talaivaarhal media vukku kadhirayil utkaaarnthu kondu peatti koduppadhu mattumthan teervu enru ennuhinranar.

    ithu tavaranaa sindanayyahum.avar sariyaana arigaar ivaar sariyaaanaa arigar enbadhu vidaayam alla,emadhu urimaihal enbadhai paritthu edukka vida mudiyaadhu athanai naamaaaha manam uvandhu kodutthaley anri,urimaihalai venredukka namaadhu samuthaya taalaaivarhal pira samudhayattidam irundhu katrukolla veendiya paadankal niriya irukkinrathu,indha vidayaatthi pakka saarfu enra taipukkum sammantham illai,thevayaana neratthil balaamaaaha solvadhu kooda nadu nilamaai enru arigar karlaaviye solli ullaar.

    naadu nilamaai enbadhu vittukoduttal maatiram enru sila nadu nilamayin siharaankaal ninaikinranaar,ivarhal samooham patriya puthiya vaasippukku varaveendiya kaattaayaattil ullanaar.

    ahamed jamsath

    ஜூலை 10, 2011 at 5:56 பிப

    • அஸ்ஸலாமு அலைக்கும்..சகோதரர்களே ….நீங்களும் தமிழில் எழுதலாம் …
     http://www.google.com/transliterate/……………………..இந்த இணையத்தினை பயன்படுத்தி பயன்பெருவீராக…

     அஜ்மல் ஹசன்

     ஓகஸ்ட் 11, 2011 at 2:24 முப

 4. இங்குதான் ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம்.
  முஸ்லிம் சமூகத்தின் கல்வி வீழ்ச்சிக்கு நோன்பு கால விடுமுறை மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். விடுமுறையை இரத்துச் செய்வது மட்டும் கல்வியில் எழுச்சி பெற்றுவிடமுடியும் என்ற கருத்து இருக்குமானால் அது முட்டாள் தனமான சிந்தனை. அதை விட்டுவிட்டு சமூகத்தின் புத்திஜீவிகள் குழு இது தொடா்பான கருத்தாடல்களை நடத்தி இது போன்ற விடய்ங்களில் தூர நோக்குடன் சிந்தித்து முஸ்லிம் சமூகத்தின் ஏக சமைய தலைமைத்துவமான ஜம்இய்யத்துல் உலமாவின் கீழ் செயற்படுவது சாலச் சிறந்ததாகும்.

  முஸ்லிம் சமூகத்தின் கல்வி வீழ்ச்சிக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றமையை கடந்த காலங்களில் சமூகத்தின் புத்திஜீவிகள், தலைவா்கள், ஜம்இய்யத்துல் உலமா, இஸ்லாமிய இயக்கங்கள் என பலவும் கருத்து வெளியிட்டு வரும் இவ்வேளையில் குறுகிய அரசியல் சிந்தனையை ஒருபுறம் வைத்துவிட்டு சமூகரீதியில் சிந்தித்து செயற்படும் போதே சமூகத்தலைவா்கள் சமூகத்துக்கு ஏதும் செய்ய முடியும். என்பதை எனது கருத்தாக பதிவு செய்ய விளைகிறேன்.

  abuumarah

  ஜூலை 9, 2011 at 9:15 முப

 5. I have been teaching in Maldives last 23 years. we have a short session during ramadhan from 9 to 12 our students or teachers did not find any difficulties.

  M.R.M Noufel

  ஜூலை 9, 2011 at 10:21 முப

 6. As I understood, In Arab countries there is no such formal holidays in Ramadan but they have time limitation (6 hours). Realy Ramadan is a best time to learn and my personnel opinion is schools can resumes and shall off at 12.00 noon.

  Mohammed Rizvi Uvais

  ஜூலை 9, 2011 at 1:05 பிப

 7. நோன்பு காலத்தில் சில நேர மாற்றங்களுடனோ அல்லது அதே நேர அடிப்படையிலோ பாடசாலை இயங்குவது சிறந்தது. ஆனாலும் இவ் அரசியல் சூல்நிலையில் அப்படியான ஒரு தீர்மானத்திக்கு அனுமதி கொடுப்பதோ அல்லது அதை கொண்டு வருவதோ சிறந்ததல்ல…

  Fasly Muhammad Sadakathullah

  ஜூலை 9, 2011 at 3:31 பிப

 8. Give little bit effert we’ll find the way…..transpotation is big problems in some areas and as I khow they are walking one or two km to school…practicaly its hard under sunny during Ramadan….It will be great ibadah to arrange transportation whom they are suffering.

  Mohammed Rizvi Uvais

  ஜூலை 9, 2011 at 4:48 பிப

 9. i think this is just complicated. i prpose school should be held on Ramazan days but star and en time should be changed…for an ex : start 10.00am – close 5.00 pm or any proposed good times.

  but in the schools there would be arrangment for Qaran recite & prayer…this is must and compulsary….

  i think if some negotiaitions come in this way will be very beneficial and more suitable….

  coz muslims have lot of holiday and as well as Sri lankans have lots of holodays….

  12 poya
  8 X 12 – saturday sunday
  fesivals – for all relgions each 5 X 4
  freedomday, etc

  so this should be reduced…..

  Insha Allah…Allah will smooth this problem……

  Baarakallah…..

  Zinan M Wazeel - Galle

  ஜூலை 9, 2011 at 4:53 பிப

 10. ACJU should take this issue into account and appoint a task force to deal with such issues.

  Hakeem

  ஜூலை 9, 2011 at 5:14 பிப

 11. Last Week 07.07.2011 Editorial of VIDIVELLI

  இலங்கை முஸ்லிம்களின் கலாசார உரிமைகளை
  பாதுகாத்தல் : ஆழமான பார்வை அவசியம்

  காலா காலமாக இலங்கைத் திருநாட்டில் தமக்கேயுரிய தனித்துவ மத, கலாசார விழுமியங்களுடனும் உரிமைகளுடனும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அண்மைக் காலமாக தமது உரிமைகள் மீதும் கலாசாரத்தின் மீதும் புற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக உணரத் தலைப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

  பள்ளிவாசல்களில் அதான் ஒலிப்பதற்குத் தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவு, பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி, அடையாள அட்டைக்காக தொப்பி அணிந்த புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டமை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்வதற்கான முயற்சிகள் என அண்மைக் காலமாக முஸ்லிம்களின் மத, கலாசார உரிமைகளுடன் தொடர்புடைய சில விடயங்கள் தொடர்பில் விமர்சனங்கள் மேலெழுந்துள்ளதை நாம் அறிவோம்.

  அதான் சொல்வதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பை இரண்டு பள்ளிவாசல்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடும் அதனால் தொடரப்பட்ட வழக்குமே ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை நாம் இந்த இடத்தில் மறந்துவிடுவதற்கில்லை.

  பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி விடயத்தில் முஸ்லிம் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இது தொடர்பில் சந்தேக உணர்வுகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் மாணவிகளின் கலாசாரத்திற்குப் பாதிப்பான விடயங்கள் இப் பயிற்சி நெறியில் உள்ளடங்கியுள்ளதாக மேலெழுந்தவாரியாக தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களே இந்த சந்தேகப் பார்வைக்கு வித்திட்டிருந்தன.

  ஈற்றில் உலமா சபையும் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகளும் உயர் கல்வியமைச்சரைச் சந்தித்த போது அவர் முஸ்லிம் மாணவ மாணவியரின் கலாசாரத்திற்கு பூரண உத்தரவாதம் வழங்கியிருந்தார். மாணவர்களை ஜும்ஆ தொழுகைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் பயிற்சி நடைபெறும் வளாகத்திலேயே அவர்களுக்கு ஜும்ஆ தொழுகையில் ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. இன்று முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் தாம் எந்தவித பிரச்சினைகளுமின்றி தலைமைத்துவ பயிற்சியில் பங்கேற்று வருவதாக தெரிவிக்கிறார்கள்.

  அதேபோன்றுதான் தற்போது அடையாள அட்டைக்கு தொப்பி அணிந்த புகைப்படங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபத்திற்கிணங்கவே தாம் தொப்பி அணிந்த புகைப்படங்களை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக திணைக்களம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பில் நீதியமைச்சரும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வேறு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  பாதுகாப்பு அமைச்சு இவ்வாறான சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கடமையாகும்.

  இலங்கையில் முஸ்லிம்கள் தொப்பி அணிவதற்கான உரிமையை `துருக்கித் தொப்பி’ அப்துல் காதர் அவர்கள் வெள்ளைக்காரர்களிடமிருந்து போராடிப் பெற்றுத் தந்த வரலாற்றை நாம் இந்த இடத்தில் மறந்துவிடுவதற்கில்லை. ஆனாலும் தற்போது முஸ்லிம்கள் தொப்பி அணிவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதையும் அடையாள அட்டைக்குரிய புகைப்படத்திற்கு தொப்பி அணிந்து புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றே பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளதையும் நாம் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.

  அதேபோன்றுதான் கடந்த வாரம் முதல் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கான நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்வது பற்றிய ஆலோசனையையும் நாம் நோக்க வேண்டியிருக்கிறது.

  இந்த யோசனை முதலில் முஸ்லிம் தரப்பினராலேயே முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதனையடுத்தே கல்வியமைச்சு இது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

  இருப்பினும் இது விடயத்தில் தொடர்ந்தும் கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பல தரப்பினதும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

  எப்படியிருப்பினும் இந்த விடயத்தில் ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

  அவசர அவசரமாக இவ்வாறான திட்டங்கள் முன்மொழியப்பட்டு அவை நடைமுறைப்படுத்த எத்தனிக்கப்படுமானால் அவை சமூகத்தின் மத்தியில் பாரிய அதிருப்தியையே தோற்றுவிக்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

  எது எப்படியிருப்பினும் மேற்குறிப்பிட்ட சில விடயங்களில் நமது உரிமைகள் பறிபோவதற்கு நாமே காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்கின்ற அதே நேரம் வேறு சில பிரச்சினைகளுக்கு சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் மூலம் சாதகமான தீர்வினைப் பெற்றிருக்கிறோம் என்பதையும் நாம் உணரத் தலைப்படுவது அவசியமாகும்.

  இவ்வாறான மத, கலாசார விழுமியங்களுடன் கூடிய பிரச்சினைகள் தோற்றம் பெறும்போது அவை தொடர்பில் நிதானமான போக்குகளையே முஸ்லிம்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்ச்சிவசப்படுகின்ற அல்லது சமூகத்தின் எதிர்காலம் பற்றிய தூர நோக்கான சிந்தனைகளற்ற தீர்மானங்கள் நமது சமூகத்திற்கே பாதிப்புக்களைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகிறோம்.

  sahabdeen

  ஜூலை 9, 2011 at 6:37 பிப

 12. இஸ்லாமிய நிறுவங்கள் இந்த விடயத்தில் ஆழமான பார்வை கொண்டவைதான் என்பதை இலகுவில் மறுக்க முடியாது. ஆனால் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றும்போது அவர்கள் பொருத்தமான பயனுள்ள முடிவை நோக்கி மக்களையும் , அரசியல் வாதிகளையும் வழிநடத்த முன்வர வேண்டும் , ஆளும்தரப்பு அல்லது எதிர்தரப்பு என்ற செல்வாக்கு நிலைக்கு உட்படாமல் முற்றிலும் நாட்டினதும் , முஸ்லிம் சமூத்தினதும் நலன் கருதி செயலாற்றவேண்டும், இஸ்லாமிய நிறுவங்கள் அரசியல் பக்க சார்பானவர்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு கருத்துகளை முன்வைக்க கூடிய நிலையில் இருக்கமுடியாது. விட்டுக்கொடுக்க கூடிய விடையத்தையும் அதற்குரிய பொருத்தமான தருணத்தில் மட்டும் விட்டுக்கொடுப்பதும், விட்டுக்கொடுக்க முடியாத விடயத்திற்காக எப்போதும் போராடுவதும் அவசியமானது.

  ரமழான் இபாதத்தின் மாதம் , ரமழான் பயிற்சியின் மாதம் , ரமழான் அல் குர்ஆனின் மாதம் என்று போதிக்கப்பட்டுள்ளது அதை நாம் விளங்கி வைத்துள்ளோம். இந்த இபாதத், இந்த பயிற்சி , இந்த அல் குர்ஆன் என்பன ரமழான் கால பாடசாலை விடுமுறையில் மாணவர்களுக்கு வழங்க எமது சமூகத்தில் போதுமான ஏற்பாடுகள் இருக்கின்றதா ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சில பிரதேசங்களில் அதற்கான ஏற்பாடுகள் இருகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை அந்த பிரதேசங்களின் முழு முஸ்லிம் மாணவர் சமூகத்தையும் உள்வாங்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை , இன்னும் பல பிரதேசங்களில் ரமழான் விடுமுறை பாழடிக்கப் படும் நிலையும் இருக்கிறது. உதாரணமாக கொழும்பு.

  ஆகவே ரமழான் விடுமுறை என்பதற்கு பதிலாக ரமழான் காலப்பகுதியில் முழு முஸ்லிம் பாடசாலைகளிலும் விசேட ரமழான் கால இஸ்லாமிய கொள்கை ,கோட்பாடுகள் தொடர்பான பாடம் ஒன்றை அறிமுகப் படுத்த முயற்சிப்பதும், அந்த திட்டத்திற்கு இஸ்லாமிய நிறுவங்களும் தமது மனித வளத்தை வழங்க முன்வருவதும் மாணவர் சமூகம் 30 நாட்களில் பெரிய அளவில் இஸ்லாமிய கோட்பாட்டை விளங்கி கொள்ள வாய்ப்பாக அமையும்.

  பல சதாப்த காலம் அனுபவித்து வரும் எமது உரிமையை விட்டுக்கொடுப்பதன் மூலம் முஸ்லிம் மாணவர் சமூகம் இஸ்லாமிய கோட்பாட்டை நோக்கி வரும் சந்தர்ப்பத்தை உருவாக்க தேவையான வாய்ப்பை பெறமுடியுமாக இருந்தால், இந்த உரிமையை பொருத்தமான சந்தர்பத்தில் விட்டுக்கொடுப்பது அனுகூலமாக அமையும்.

  இந்த கருத்து ரமழான் இபாதத்தின் மாதம் என்ற கோணத்தில் மட்டும் பார்த்ததில் கண்டுகொண்ட எனதுஅபிப்பிராயம் மட்டும்தான்.

  ரமழான் கால முஸ்லிம் பாடசாலை விடுமுறை என்பதை இன்னும் பல கோணங்களில் பார்க்க வேண்டும். அவைகள் பற்றி கண்டிப்பாக ஆராய்ந்த பிறகுதான் முடிவுகளுக்கு வரவேண்டும்.

  M.shamil mohamed

  ஜூலை 9, 2011 at 8:38 பிப

 13. இருந்தாலும் அசாத் சாலி மற்றும் அஸ்வர் அவர்கள் தன்னிச்சியாக நடந்துக்கொண்டுள்ளார்கள்.நாட்டில் உலமாக்கள்,முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் என்றெல்லாம் இருக்க தன்னிச்சியாக இதனை அவர்கள் கல்வி அமைச்சுக்கு கொண்டு சென்றது மிகப்பெரிய தவறு. கடந்த சில காலமாக முஸ்லிம்கள் அனுபாவித்து வந்த பல சலுகைகள் நம்மை விட்டு நீங்கி செல்கின்றன. அல்லது அவை கடும் சவாலாக இருக்கின்றன. இப்படியான நேரத்தில் இவ்வாறான விடயங்கள் அலசப்படுவது ஏனைய சலுகைகளுக்கும் அச்ச நிலையினை கொண்டுவரும். ஆகவே இதனை தற்போதைக்கு அமுலில் கொண்டு வராமல் இருப்பதே சிறந்தது…

  Fasly Muhammad Sadakathullah

  ஜூலை 10, 2011 at 12:01 முப

 14. we can have a forum here.comments coming in different angle.its worth.but need parents and students opinion too.deep careful study has important. .anyway the politician take the final decision.collective suggestion should reach to to these people.in that case we should strengthen the hands of acju by keeping the deferences a side.

  DR MARZOOK

  ஜூலை 10, 2011 at 9:12 முப

 15. எந்த கட்சி அரசியல் வாதிகளும் தமது மக்களுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்து பேசாமல் தாமாக தாம் சரியென்று கருதும் விடயத்தை செய்ய முற்படுவது கண்டிக்கத்தக்கது. முஸ்லிம் சமூகம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட முன்னர் அது பற்றி ஜம்இயதுகுள் உலமாவுடன் பேசவேண்டும். அவர்கள் சமூகத்தின் பல மட்டங்களுடன் பகிரங்க ஆலோசனை நடத்த வேண்டும். பின்னர் பொருத்தமான முடிவை எடுக்கவேண்டும். இந்த விடயத்தில் ஷாமில் தெரிவித்திருக்கும் கருத்துகளுடன் நான் உடன்படுகின்றேன். ஆனால் அது தொடர்பான ஆழமான பல மாதிரிகளில் சிந்திக்கவேண்டும் ஆலோசிக்க வேண்டும் . முஸ்லிம் சமூகத்தின் பலமிக்க சகத்தியாக ஜம்இயதுகுள் உலமாவை உருவாக்க டாக்டர் மர்சூக் கூறுவது போன்று அனைவரும் உதவவேண்டும்.

  Iqbal .A

  ஜூலை 10, 2011 at 3:08 பிப

 16. 18 வருடங்கள் மாணவியாக இருந்த பின்னர் கடந்த 2 வருடங்கள் ஆசிரியையாக பணியாற்றும் ஒரு பெண் என்ற வகையில் நேன்பு காலத்தில் இப்போது உள்ள அமைப்பில் பாடசாலைக்கு சென்று கற்பிப்பது என்பது என்னை பொறுத்த வரையில் மிகவும் கடினமாக இருக்கும்.

  நேன்பு காலத்தில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து. உணவு தயாரித்து, பரிமாறிய பின்னர். தொழுது, அல் குர்ஆன் ஓதி முடிய 5 1/2 மணியாகிவிடும், உடைகளை தயார் செய்து. 15 k.m பயணம் செய்து, பாடசாலையில் இரண்டு மணிவரையும் பொறுப்புடன் மாணவர்களுக்கு போதித்து. அவர்களுக்கு பாடத்தை விளங்க வைத்து. மிகவும் களைப்பு அடைந்து . மீண்டும் காத்திருந்து 15 k.m பயணம் செய்து வீடு வந்த பின்னர் எனது குடும்பத்தின் முழு உடைகளையும் கழுவி, பின்னர் எனது குழந்தைக்கு பாடங்களை போதித்து , அவசர அவசரமாக நேன்பு திறக்க தேவையான உணவை தயாரித்து , அதன் பின்னர் இரவு உணவு தயாரித்து , தராவியாஹ் சென்று வருவது என்ற தொடரான வேலைகளை 30 தினங்களுக்கு நோன்புடன் செய்வது என்பது மிகவும் கஷ்டமானது.

  இந்த விடையம் சமந்தமாக கண்டிப்பாக முஸ்லிம் பெண் ஆசிரியைகளின் கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்படவேண்டும்.

  A Teacher at al Azhar central college, Akurana

  ஜூலை 10, 2011 at 4:00 பிப

 17. இது குறித்து ஆராயத் தேவையில்லை இந்த உரிமையை நாம் விட்டு கொடுக்கவும் தேவையில்லை….மாறாக ரமழான் மாதத்தை நாமாது மாணவ மாணவியரின் ஆன்மீக எழுச்சிக்கு பயனுள்ள வகையில் ஊர் ஜமாஅத் , மஸ்ஜித்களை மையமாகக் கொண்டு ஆரவாரமற்ற ஒலிபெருக்கி போட்ட போட்டி கூச்சல் களுமற்ற நிகழ்ச்சி களை ஜம்மியத்துல் உலமா இயக்க வேறு பாடுகளுக்கப்பால் அறிமுகப் படுத்த வேண்டும்….குறிப்பாக இயக்கப் பிரச்சாரப் பீரங்கி களை தவிர்த்து உலமாக்களைக் கொண்டு குரான் ஹதீஸ் பிக்ஹு வரலாற்று வகுப்புகளை நடாத்தினால் நல்லது….இதற்கு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் அனுசரணை வழங்கலாம்….!

  காலை நிறங்களில் பகுதி நேர கர்கைகளுக்கு மாணவர்கள் செல்வதாயின்…லுஹர் தொழுகையின் பின்னர் நோன்பு திறக்கும் நேரம் வரையில் இவ்வாறான வழிகாட்டல் நிகழ்ச்சி களை நடாத்தலாம், பொதுவாக நமது இளம் சிறார்கள் ரமலான் மாதத்தை வீதி யோரங்களில் இரவு பகலாக கூச்சல் கும்மாளத்துடன் கழிப்பதுவும், பொழுது போக்காக இணைய மையங்களுக்குச் சென்று நேரத்தை கழிப்பதுவும் தற்போது அதிகரித்து வருகிறது….!

  அத்தோடு பகல் காலங்களிலும் இராக் காலங்களிலும் பள்ளி வாயல்களில் இரவையும் பகலையும் ஹயாத்தாக்குவதாக் கூறிக் கொண்டு ஒழி பெருக்கிகளை அவற்றின் உச்ச பிறப்பாக்க சக்தியில் ஓலமிட விட்டு சில பொது அருகருகாமையில் உள்ள பள்ளி வாயால் களில் போட்ட போட்டி பீரங்கிப் பிரச்சாரங்களை முழக்குவது…இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணாக ரமலான் காலத்தில் அதீத ஒலி பிறப் பாக்கத்தால் எல்லோருக்கும் பொதுவான சூழல் மாசடையச் செய்யப் படுகிறது….!

  Inamullah

  ஜூலை 11, 2011 at 9:14 முப

 18. எமது அரசியல் வாதிகள் சிலர் எமது உரிமைகளை வென்று தராவிட்டலும் பரவாயில்லை இருக்கும் உரிமைகளையும் தாரைவார்க்காமலாவது இருந்தால் போதும். ரமலான் என்பது இபாதத்செய்வதற்கான மாதம் எனவே பாடசாலைவிடுமுரை வலங்கப்படவிட்டால் ரமலானை முழுமையாகப்பயன்படுத்த முடியாமல் போகும் அதற்கான பொருப்பை இக்கோடரிக்காம்புகள் ஏற்க வேண்டும்.

  Shafraz Buhary

  ஜூலை 11, 2011 at 11:42 முப

 19. இன்று நேன்பு விடுமுறை தேவையில்லை. நாளை முஸ்லிம் பாடசாலைகளே தேவயில்லை , நாளை மறுதினம் சில நாடுகளில் உள்ளது போன்று. பாடசாலை மாணவர்களும் , ஆசிரியர்களும் நோன்பு பிடிக்கத் தேவையில்லை என்பார்கள். அதற்கும் அரசியல்வாதிகள் பலர் சரிதான் நோன்பு உண்மையில் மாணவர்களுக்கு கடினமானது. அதனால் சனி ஞாயிறு தினங்களில் நோற்கலாம். என்பார்கள் அதைதான் மேற்குலகின் பல முஸ்லிம் அரசியல் முஸ்லிம் தலைவர்கள் சொல்கின்றார்கள். அதனால் இதை விட்டுகொடுக்கும் தருணம் இதுவல்ல. இதை விட்டு கொடுத்தால் இதை போன்று பன்மடங்கு உரிமைகளையும் சலுகைகளையும் நாம் பெறவேண்டும் அப்படியானால் சற்று யோசிக்க முடியும்

  mohamed Ali

  ஜூலை 11, 2011 at 12:16 பிப

 20. ரமழான் விடுமுறையை முஸ்லிம் மாணாக்கர் மார்க்க அனுஷ்டானங்களுக்கு மட்டும் பயன்படுத்துவார்கள் என்றால் அதனை ரத்து செய்வதை நாம் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றுமில்லை. மாணவர்களின் இந்த விடுமுறை காலம் அனாவசியமான பல்வேறு வழிகளில் கழிகின்றது. நோன்பின் முக்கியமான ஒரு மகத்துவம் என்னவென்றால் நோன்பாளிகளின் எண்ணங்கள் சாதாரண நிலையை விட ஒருங்கிணைக்கப் பட்டு சீராக இருக்கும். இந்த நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதிகம் கிரகிக்கின்ற திறமை இருக்கும். மேலும் அனாவசியமான விஷயங்களில் அவர்களின் புனித நோன்பு பொழுது கழியாதிருக்கும். அது மட்டுமில்லாமல் அந்நிய இன மாணவர்களுடன் ஒரு சம நிலையை பேணக் கூடியதாகவும் இருக்கும். எடுத்ததுக்கெல்லாம் உரிமையை பற்றி பேசிக்கொண்டிருப்பது முட்டாள்தனம்.

  இப்ராஹீம் நிஹ்ரீர்

  ஜூலை 30, 2011 at 11:12 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: