Lankamuslim.org

Archive for ஜூன் 2011

காத்தான்குடி செய்திகளும் பிராந்திய அரசியலும்

with 16 comments

M.ஷாமில் முஹம்மட்
கடந்த வியாழகிழமை 23.06.2010  தொடக்கம் BBC தமிழ் ,ஆங்கிலம் மற்றும்  உள்நாட்டு ஆங்கில , தமிழ் , சிங்கள ஊடகங்களிலும் காத்தான்குடி தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன BBC தமிழ்  ‘காத்தான்குடி: பள்ளிப்பெண்கள் தடுத்துவைப்பு’ என்ற தலைப்பில் இது தொடர்பான அதன் முதல் செய்தியை வெளிட்டது இலங்கையின் கிழக்கு மாகாணம் தொடர்பில் தீவிரவாதத்துடனும், தெற்காசியாவின் பயங்கரவாத அமைப்புகள் என்று தெரிவிக்கப்பட்டும் அமைப்புகளுடனும் தொடர்பு படுத்தி பல செய்திகள் இதற்கு முன்னர் வெளிவந்துள்ளன.

அவைகள் உரிய முறையில் இலங்கையின் அரச தரப்பினால் மறுக்கப்பட்டும் உள்ளன இந்த நிலையில் கடந்த வியாழகிழமை தொடக்கம் மீண்டும் கிழக்கு மாகாண காத்தான்குடி பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்றுக்கு பெரிய அளவிலான ஊடக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. கடும்போக்கு இஸ்லாம் ,Radical Islam இஸ்லாமிய அடிப்படைவாதம் ,Islamic Fundamentalism என்ற வார்த்தை பிரயோகங்களுடன் மஸ்ஜித்  இஸ்லாமிய அலுவலகம் என்பன வற்றை இணைத்தும் தீவிரவாதம், கடும்போக்கு என்பனவற்றை இஸ்லாமிய வாலிபர்கள் என்பதுடன் இணைத்தும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூன் 30, 2011 at 8:43 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு கால விடுமுறை ரத்து ?

with 3 comments

முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் வழங்கப்படும் விடுமுறையை ரத்துச்செய்வது குறித்து கல்வியமைச்சு ஆராய்வதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு காலத்தில் விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே கல்வியமைச்சு முஸ்லிம் பாடசாலைகளுக்கான இந்த நோன்புகால விடுமுறையை ரத்துச் செய்வது குறித்து ஆராய்ந்துள்ளது.

கல்வியமைச்சில் நேற்று மாலை இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது கல்விமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2011 at 5:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது

leave a comment »

காத்தான்குடி தொடர்பான  உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகள் தொடர்பிலும் அதன் விளைவுகள் தொடர்பிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்ந்து அவதானித்து வருகின்றது .

சில ஊடகங்களில் காத்தான்குடியை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மாணவிகள் தனியார் இணைய மையம் ஒன்றில் கலாச்சாரத்துக்கு அபகீர்த்தியதாக கூறி, ஒரு பெண் மற்றும் இரு இளைஞர்கள் அவர்களை தடுத்து வைத்து தாக்கியதாகவும், பின்னர் அவர்களை காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2011 at 3:47 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரச காணிகளை சட்டவிரோதமாக விற்பனை: அமைச்சர் தென்னக்கோன்

leave a comment »

அரச காணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஒருசிலர் ஈடுபட்டுவருவதால் அது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார் என்று செய்திகள தெரிவிகின்றன.

புத்தளம், அநுராதபுரம், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அரசின் காணிகள் அதிகம் உள்ளதால் குறித்த மாவட்டங்களில் வணிக செயற்பாட்டுக்காகவோ, குடிமனை அமைப்பதற்காகவோ காணிகளை கொள்வனவு செய்யும் போது மிகுந்து அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Written by lankamuslim

ஜூன் 30, 2011 at 1:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வாசகர் ஆக்கம்: காத்தான்குடி மீது BBC ஊடகவியலாளருக்கு ஏன் இந்த காழ்ப்புணர்வு?

with 5 comments

றிசாத் இப்னு ஆதம்
காத்தான்குடி இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற குறைந்த நிலப்பரப்பில் அதிக சனத்தொகையை கொண்ட ஒரு சிறிய அழகிய நகரம். இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருப்பதாலும், இங்கு காலம் காலமாக இருந்து வருகின்ற சமூக, கலாச்சார, பாரம்பரிய மற்றும் மார்க்க ரீதியிலான தலைமைத்துவ வழிகாட்டலின் விளைவாலும் இந்த நகரம் ஏனைய நகரங்களை விடவும் ஒரு தனித்துவ நகராக மிளிர்ந்து காணப்படுகின்றது.

வர்த்தக ரீதியில் கிழக்கிலங்கையின் முக்கிய நகராகவும், தலை சிறந்த வர்த்தகர்களையும் சிறந்த சிந்தனையாளர்களையும் தன்னகத்தே கொண்டு அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றம் கண்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 30, 2011 at 8:40 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்வைக்கும் தீர்வே இறுதியானது

leave a comment »

ஜனாதிபதி அமைக்கப் போகும் பாராளுமன்றத் தெரிவுக்குழு, இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கிறதோ அதுவே இறுதியானதும் அறுதியானதுமான தீர்வாக இருக்கும் என்று ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்வைக்கும் தீர்வு எதுவாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த நான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார் .

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தீர்வு குறித்து அரசியல் கட்சிகள் பேசிவரும் போதே சமாந்தரமாகத் தமிழ்க் கட்சிகளுடன் தீர்வு குறித்து அரசு பேச்சு நடத்தும் என்றும் ஜனாதிபதி.தமிழ்க் கட்சிகளுடன் இப்போது நடத்தப்படும் பேச்சு சில விடயங்களில் இணக்கம் காண்பதற்கானது மட்டுமே தவிர அது இறுதியான தீர்வாக இருக்காது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 29, 2011 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசு தரப்பு 8 ஆம் சுற்றில்

leave a comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசு தரப்புக்கும் இடையான 8 ஆம் சுற்று பேச்சு வார்த்தை முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது போன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் அரசு சார்பில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான சச்சின் டி வாஸ் குணவர்த்தன, ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூன் 29, 2011 at 10:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது