Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 2011

கல்குடா பிரதேசத்தில் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம்.

leave a comment »

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் வகுலாவள – ஜப்பார்ர திடல் பிரதேசத்தில் இருந்து 1985ம் ஆண்டு பயங்கர வாதிகளால் விரட்டப்பட்ட குடும்பங்களில் அறுபது (60) குடும்பங்கள் இன்று (28.05.2011) இரண்டாம் கட்டமாக மீள் குடியமர்த்தப்பட்டனர்.

வகுலாவள – ஜப்பார்ர திடல் பகுதியில் வசித்து வந்த முஸ்லீம் மக்கள் 1985ம் ஆண்டு பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டதையடுத்து அவர்கள் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, காவத்தமுனை, தியாவட்டுவான் போன்ற பிரதேசங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 28, 2011 at 10:31 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று காஸா எகிப்து எல்லை நிரந்தரமாக திறக்கப்பட்டுள்ளது

with one comment

OurUmmah:எகிப்து, காஸா ரபாஹ் எல்லையை இன்று-28.05.2011- சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறந்துள்ளது தினமும் 8 மணித்தியாலங்கள் இந்த எல்லை திருந்து விடப்படும் என்றும் வெள்ளி மற்றும் விடுமுறை தினங்களில் மட்டும் மூடப்படும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.   இன்று எல்லை திறக்கப்பட்டவுடன் இரண்டு அம்புலன்சுகள் மற்றும் பல வாகனங்கள் எல்லையை கடந்து எகிப்தினுள் நுழைந்துள்ளது

இதன் ஊடாக 18 வயது தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் எகிப்தின் விசா பெற்று செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எகிப்து விரைவில் விசா அலுவலகம் ஒன்றை காஸாவில் திறக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது விரிவாக

Written by lankamuslim

மே 28, 2011 at 9:31 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்.முஸ்லிம்கள் தொடர்பாக யாழ். அரச அதிபர்

leave a comment »

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்த முஸ்லிம்கள் அங்கு அரசின் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களின் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படமாட்டாது.புத்தளத்தில் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளாத வர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியிருந்தால் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்ட உதவிகள் பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்படுவதாக உதயனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் தொடர்பாக யாழ். விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2011 at 8:34 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல பகுதிகளில் மழை ஏழு பேர் உயிர் இழப்பு

leave a comment »

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையால் ஏழு பேர் உயிரிழந்திருப்பதுடன் 3621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதுடன், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் பலியாகியுள்ளனர்.

ககாலை மாவட்டம் தம்பள பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சமீலா சமரசிங்க மற்றும் அவருடைய மகள் 17 வயதுடைய சந்திமா சமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்கள் கட்டிலில் படுத்திருந்தபோதே மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். கொழும்பு கம்பஹா கேகாலை காலி நுவரெலிய ஆகிய பிரதேசங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றது.

Written by lankamuslim

மே 28, 2011 at 3:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவர்கள் நேற்று இராணுவ முகாமில் ஜும்மாஹ் நடாத்தினர்

with 8 comments

வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்கலைக் கழகங்களுக்கு செல்லவுள்ள மாணவர்கள் நேற்று இராணுவ முகாமில் ஜும்மாஹ் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர் என்று அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் பொது செயலாளர் பொறியலாளர் நிஷாத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

இந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரத்தி 500 மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவானவர்களுக்கு இராணுவ முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது இந்த வேலையில் நேற்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆலிம் ஒருவரினால் இராணுவ முகாமில் குத்துபா மற்றும் ஜும்மாஹ் தொழுகை நடாத்தப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2011 at 2:12 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்கலைக்கழகங்களுக்கு 20,274 பேர் தெரிவு

leave a comment »

பல்கலைக்கழகங்களுக்கு 20,274 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா தெரிவித்துள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 2,33,609 பேர் தோற்றியிருந்தனர். இதில் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த புள்ளிகளை 1,42,516 பேர் பெற்ற நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக 54,124 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 20,274 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்துறைக்கு 1147 பேரும் பொறியியல் துறைக்கு 1247 பேரும் முகாமைத்துவத்துக்கு 3,287 பேரும் கலைத்துறைக்கு 3,806 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக 86 பாடநெறிகளுக்காக 20,274 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 28, 2011 at 10:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவியருக்கு பெற்றோர் வெள்ளை நிற ஹிஜாப் கருப்பு நிற அபாயா எடுத்து செல்லவும்

with 2 comments

வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவியருக்கு பெற்றோர் வெள்ளை நிற ஹிஜாப் கருப்பு நிற அபாயா எடுத்து செல்லுமாறு அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது

இஸ்லாமிய உடையை பொறுத்தவரை அதற்கு தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை அனால் முஸ்லிம் மாணவியர் தலைமைத்துவ பயிற்சி உடையை தமது பல்வேறுபட்ட வர்ண உடைகளுக்கு மேல் அணிவதால் பல வர்ணங்களில் ஒழுங்கு முறைக்கு மாற்றமாக தென்படுகின்றனர். இது தொடர்பாக இன்று அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ள செய்தியொன்றில் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2011 at 10:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது