Lankamuslim.org

ஐநா வும் இலங்கையும் ஒரு தொகுப்பு பார்வை

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்:தொகுப்பு: இலங்கையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தால், அவரது அலுவலகத்துடன் இனிவரும் காலங்களில் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது

போர்க் குற்றங்களை விசாரிக்க உள்நாட்டிலேயே முழுமையான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்றும் தேவை என்று நவிப்பிள்ளை நேற்றுத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நிபுணர் குழுவின் அறிக்கையை தனது பேச்சின் இடையே இழுத்திருப்பதன் மூலம் மனித உரிமைகள் சபையின் சட்டதிட்டங்களையும் நடைமுறையையும் நவிப்பிள்ளை மீறி இருக்கிறார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது விரிவாக

ஜெனிவாவில் திங்களன்று ஆரம்பமான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17வது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் மேலும் நவநீதம் பிள்ளை கருத்துரைக்கையில் ”இலங்கையின் உள்ளூர் புலன்விசாரணைகளை கண்காணிக்க ஒரு சர்வதேச கட்டமைப்பு தேவை மற்றும் தேவையான நடவடிக்கைகளை அந்த சர்வதேச கட்டமைப்பே மேற்கொள்ளலாம்” என்ற பரிந்துரையை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளாலும், இலங்கை அரசாங்கப் படைகளாலும் சர்வதேச சட்டங்கள் பரந்துபட்ட அளவில் கடுமையாக மீறப்பட்டதாக முடிவு செய்வதற்கு நம்பகத்தன்மையுடனான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தலைமைச் செயலரின் நிபுணர் குழு அறிக்கை கூறுவதை இங்கு குறிப்பிட நான் விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைப் போர்க்குற்றம் குறித்த முக்கிய ஆவணமாகக் சித்தரிக்கப்படும் சேனல் 4 வீடியோ ஆதாரங்கள் உண்மையானவை என்று தெரிவித்துள்ள ஐ நாவின் சிறப்புத் தூதர், இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இதை ஆராய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது

ஐநா நிபுணர் குழுவில் இலங்கை குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று அங்கு பேசிய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கையின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அங்கு உரையாற்றியுள்ளார் இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்குழு அறிக்கை கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது என்று ம் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை முற்றிலும் தேவையற்றது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இலங்கை அரசாங்கம் அங்கு தேசிய நல்லிணக்கத்துக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவை படிப்படியாக பலன் தந்துகொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் பக்கசார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும், ஒளிவுமறைவற்ற முறையிலும் செயற்படுவது மிகவும் அவசியம். இந்த அடிப்படைத் தத்துவங்களை அவர்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கே பெரும் கண்டனம் எழுவதற்கான வாய்ப்பும் உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை இலங்கை போர் குறித்த ஐநா செயலரின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிகபட்டுள்ளது இலங்கை விவகாரத்தை ஐநா மனித உரிமைக் கவுன்சில் மீண்டும் எடுத்திருப்பது ஐநாவின் இரட்டைப் போக்கைக் காண்பிப்பததாக கியூபாவின் பிரதிநிதியான றோடொல்ஃப் ரீயிஸ் றொட்ரிகஸ் தெரிவித்துள்ளார் . வளரும் நாடுகளை உலக சக்திமிக்க நாடுகள் அடக்கப் பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

சீனாவின் பிரதிநிதி இலங்கை அரசாங்கமும், இலங்கை மக்களும் தமது உள்ளூர் விடயங்களை தாமே கையாளும் வல்லமை உள்ளவர்கள் என்று கூறி அதற்கு ஐநா தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தூதுவர் சமீர் அக்ரம் தேசிய நகர்வுகள் மூலம் இலங்கையில் அமைதியை வென்றெடுப்பதற்கு அனைத்துலக சமூகமும் உதவ வேண்டும் என்று  கேட்டுக் கொண்டுள்ளதுடன் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இது இரண்டாம் தரப்பின் தகவல்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ஆரம்பநிலை அறிக்கை என்றும் பகுப்பாய்வு செய்யப்படாதது என்றும் கூறியுள்ளார்

ஆனால், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ”நிபுணர் குழுவின் அறிக்கையை” வரவேற்றதுடன், அதன் பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கருத்ரைதுள்ள எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் விரைவிலேயே சந்திக்கமுடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தியா சென்றுள்ள ரணில் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை தேவை என்ற கோரிக்கை குறித்துக் கேட்டபோது, இலங்கையர் எவரும் போர்க் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது என்பதில் இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றனர் என்றும் தவிரவும் போர்க்குற்றங்கள் விசாரிப்பது குறித்த உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால் இலங்கை நிகழ்வுகள் குறித்து விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் அன்மையில் இலங்கையின் சுயகெளரவத் தைப் பாதிக்கும் விதத்தில் தன்னாதிக்கமும், இறைமையும் மிக்க நாடொன்றின் மீது வெளிநாட்டுச் சக்திகள் சுட்டுவிரலைக் காட்டிக் குற்றஞ் சாட்டுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளமையும் குறிபிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பாக கடந்த மாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்திருந்த கருத்தில்  இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இலங்கை உலகில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் அரசியல் தீர்வொன்றை துரிதமாக ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவின் அறிக்கையை பார்க்க முடியம் என்று தெரிவித்திருந்தார்.

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை ஐநா வின் அறிக்கையை கண்டித்ததுடன்  ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் நாட்டினை கட்டியெழுப்புவதற்கும், இன மோதல்களை தடுப்பதற்கும் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தில் உறுதியாக இருப்பதாக தனது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தது

அதேவேளை இலங்கை தொடர்பான  நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்று ஆதரித்து அறிக்கை வெளியிட்டமையும் மேற்கு நாடுகளில் செயல்படும் தமிழீழ நாடுகடந்த அரசாங்கம் என்ற அமைப்பு இலங்கை அரசாங்கத்தை கூண்டில் ஏற்ற இதுதான் முதல்படி என்று தெரிவித்த மையும் குறிபிடத்தக்கது.


நேற்று வெளியாகியுள்ள செய்திகளின் பிரகாரம்  இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வடக்குக் கிழக்கு மக்களுக்கு உடனடியாகத் தீர்வை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றும் அதிகாரப் பகிர்வு மற்றும் வடமாகாண உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்துதல் போன்ற அழுத்தங்களும் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படுகின்றன என்றும் இலங்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்படாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக இலங்கைக்கான ஆதரவை இடைநிறுத்திக்கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிபிடத்தக்கது.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தாம் ரஷியா ,சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணும்   விடையத்தில் உதவிகளை அந்த நாடுக்கில் கோரவுள்ளதாக தெரிவித்த தகவல் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது

Advertisements

Written by lankamuslim

மே 31, 2011 இல் 9:44 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: