Lankamuslim.org

One World One Ummah

மனித உரிமைகள் சபையில் இலங்கை

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 17வது அமர்வு ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றவுள்ளார்.

இம்மாநாட்டில்  இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி செனல்4 வெளியிட்ட ஐந்து நிமிட  காட்சிகள்  உண்மையானவை என ஐநா விசாரணையாளரும் சட்டத்துறை பேராசிரியருமான கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ்-Christof Heyns-  தெரிவித்துள்ளமை மாநாட்டில் இலங்கை விடயத்தில் முக்கியமானதாக பார்கப்படுகின்றது விரிவாக

மனித உரிமைகள் கவுன்சிலின் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று முன்தினம் ஜெனீவா புறப்பட்டுச் சென்றுள்ளது. இலங்கையின் தற்போதைய புதிய நிலவரங்கள் தொடர்பில் ஐ. நா. பிரதிநிதிகள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வடக்குக் கிழக்கு மக்களுக்கு உடனடியாகத் தீர்வை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றும் அதிகாரப் பகிர்வு மற்றும் வடமாகாண உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்துதல் போன்ற அழுத்தங்களும் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படுகின்றன என்றும் இலங்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்படாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக இலங்கைக்கான ஆதரவை இடைநிறுத்திக்கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிபிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

மே 30, 2011 இல் 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: