Lankamuslim.org

Archive for மே 27th, 2011

மாணவியருக்கு பெற்றோர் வெள்ளை நிற ஹிஜாப் கருப்பு நிற அபாயா எடுத்து செல்லவும்

with 2 comments

வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவியருக்கு பெற்றோர் வெள்ளை நிற ஹிஜாப் கருப்பு நிற அபாயா எடுத்து செல்லுமாறு அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது

இஸ்லாமிய உடையை பொறுத்தவரை அதற்கு தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை அனால் முஸ்லிம் மாணவியர் தலைமைத்துவ பயிற்சி உடையை தமது பல்வேறுபட்ட வர்ண உடைகளுக்கு மேல் அணிவதால் பல வர்ணங்களில் ஒழுங்கு முறைக்கு மாற்றமாக தென்படுகின்றனர். இது தொடர்பாக இன்று அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ள செய்தியொன்றில் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 27, 2011 at 10:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் புதிய விசா நடைமுறை

leave a comment »

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியர்களுக்கான இலவச விசாவை இலங்கை இரத்துச்செய்துள்ளது. இலங்கைக்கு வரும் இந்தியர்கள் தற்போது விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்திலேயே அவர்களுக்கான விசா வழங்கப்பட்டு வந்தது.

அதேபோல பல நாட்டு பிரயாணிகளும் இவ்வாறே இலங்கை வந்துசென்றனர். ஆனால் இனி வரும் காலங்களில் அவர்கள், இலங்கை வருவதற்கு விண்ணப்பித்து விசா எடுத்தபின்னரே வரமுடியும் என இலங்கை இன்று அறிவித்துள்ளது. சுமார் 78 நாடுகளின் பட்டியல் அதில் அடங்குகிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2011 at 10:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியாகியுள்ளது

leave a comment »

2010ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியாகியுள்ளது. பார்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்

Written by lankamuslim

மே 27, 2011 at 4:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்தியா மீண்டும் ஒரு குழப்பநிலையை உருவாக்கும்: றொகான் குணரட்ண

leave a comment »

இந்தியாவின் பூகோள மூலோபாய விருப்பங்களுக்கு முரணாக இலங்கை செயற்படுமானால், இந்தியா மீண்டும் ஒரு குழப்பநிலையை உருவாக்கும். இலங்கையை மீண்டும் ஒருமுறை தண்டிக்கவும் அது தயங்காது என்று எச்சரித்துள்ளார் சிங்கப்பூர் நயங்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் றொகான் குணரட்ண. கொழும்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்

2009இல் முடிவடைந்த 30 ஆண்டுகாலப் போரின் தொடக் கத்தில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆதரவு கொடுத்தது. இது ஒரு தவறு. அது மீண்டும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. அப்படி இடம்பெற்றால் அதனால் நாம் மிகவும் பாதிக்கப்படுவோம்.   சீனாவுடன் அதிகப்படியான நெருக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவுடன் விரோதத்தை வளர்ப்பது இலங்கைக்கு ஆபத்தானது. விரிவாகVideo இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2011 at 11:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறை

leave a comment »

சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை அறிமுகப்படுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதனை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.

முஸ்லிம் பயனாளிகளின் நன்மை கருதி சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்து பார்த்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையினை அறிமுகப்படுத்த அனுமதியளித்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2011 at 10:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்பில் இன்று யுத்த வெற்றிவிழா

leave a comment »

யுத்த வெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2011 at 10:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொஸ்னிய போர்குற்றவாளி ராட்கே மிலடிச் கைது

with one comment

முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பான குற்றச்ச்சாட்டுக்களுக்குள்ளாகி 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் பொஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கே மிலடிச்-Ratko Mladic- கைது செய்யப்பட்டுள்ளார். லட்சக்கனக்கான பொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்துள்ளதாக ஆய்வாளர்களும் பொஸ்னிய முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் செப்ரநிட்சா என்ற இடத்தில் இவரின் தலைமையின் கீழ் செயல்பட்ட படையினர் 8500 முஸ்லீம்களை கொன்றனர் என்பதுதான் இவர் மீதான அடிப்படைக் குற்றச்சாட்டாக உள்ளது.

செர்பியாவின் வடக்கேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து வியாழக்கிழமை காலை அவர் கைதுசெய்யப்பட்டதாக செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் தெரிவித்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 27, 2011 at 9:39 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது