Lankamuslim.org

Archive for மே 26th, 2011

பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சி மேலும் அவதானம் தேவை

with 9 comments

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரத்தி 500   மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவானவர்களுக்கு நாட்டில் 28 பல்வேறு முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது முஸ்லிம்கள் தொகையாக பயிற்சி பெற்றுவரும் ரந்தனிகள இராணுவ முகாம் மற்றும் திருகோணமலை கடற்படை முகாம் ஆகியவற்றை பொறுத்தவரை அங்கு நிலைமை திருப்தி கரமாக இருப்பதாக எம்மால் அறியமுடிகின்றது.

தொழுகை , இஸ்லாமிய உடை, ஹலால் உணவு, ஆண் பெண் கலந்த உடலியல் பயிற்சி என்பனவற்றில் தொழுகையை பொறுத்தவரை முகாம்களின் தலைமைத்துவ பயிற்சி நேர ஒழுங்குகள் எதுவும் சுபஹ் தொடக்கம் இஷா வரை தொழுகை நேரங்களுடன் மோதவில்லை என்பதால் தொழுவதற்கு சிக்கல்கள் ஏற்படவில்லை என்பதுடன் தொழுவதற்கான ஒழுங்குகளை செய்வது சிரமமாக மாணவ மாணவியர் கருதவில்லை விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 26, 2011 at 11:12 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.

எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக

Written by lankamuslim

மே 26, 2011 at 8:31 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறுசீரமைப்பு

leave a comment »

இந்த வருடம் பல்கலைக்கழகம் நுழையவுள்ள மாணவர்களுக்கான அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மே மாதம் 27ஆம் திகதி வெள்ளிகிழமை வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22 ஆயிரத்து 500 மாணவர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2011 at 11:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்பு கொள்ளவும்

leave a comment »

அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் இராணுவ முகாம்களில் நடைபெறும் தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவ மணவியர் தொடர்பில் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் மாணவாகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தம்முடம் 0714812058, 0711117876/ 0776508220 ஆகிய கையடக்க தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரியுள்ளனர்.

பொதுவாக  ஐவேளைத் தொழுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஹலால் உணவு வழங்கப்படுவதாகவும்  குறிப்பா ரந்தனிகள இராணுவ முகாமில்  முஸ்லிம்களும் நிலை திருப்பிகரமாக இருப்பதாகவும் மாணவர்கள்  தகஜுத்   -நடுநிசி தொழுகை- கூட தொழுததாகவும் தெரிவித்துள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2011 at 9:47 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

டாக்டர் ஸாகிர் நாயிக் மீதான வழக்கு ஒத்திவைப்பு

with 2 comments

பிரபல இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் மீது தொடுக்கப்பட்ட வழக்குக்கான தீர்ப்பை அலஹபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவ்வழக்கில் ஸாகிர் நாயிக் அவர்களுக்குப் பிணை வழங்க ஜான்ஸியிலுள்ள நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தன் மீதான விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஸாகிர் நாயக் மீதான வழக்கு, ஜான்ஸியைச் சேர்ந்த மேலதிக நீதிபதியினால் அலஹபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.டீ.. காரே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மும்பாயில் உள்ள இஸ்லாமிய ஆய்வு நிறுவனத் தலைவர் ஸாகிர் நாயிக் அவர்களுக்கு ஜூன் மாதம் 1 ஆம் திகதிக்கு முன் நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு பிணை மறுப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 26, 2011 at 8:57 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது