Lankamuslim.org

Archive for மே 25th, 2011

நெதர்லாந்தில் புலிகளின் மற்றுமொரு தளபதி ராம சந்திரன் கைது

leave a comment »

நெதர்லாந்தில் செயற்பட்டு வந்த புலிகளின் தளபதி எஸ்.ராமச்சந்திரன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது புலிகளின் தற்போதைய தலைவராக செயற்பட்டு வரும் நெடியவன் எனப்படும் சிவரூபன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின் நெதர்லாந்தில் ராமச்சந்திரனின் கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராமச்சந்திரனின் வீட்டை சோதனையிட்ட பொலிசார் பென் டிரைவ்யில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 136 மில்லியன் பணம் தொடர்பான விபரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அப்பணம் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆயுதக் கொள்வனவுக்காக ஐரோப்பிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 25, 2011 at 9:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மக்களை கணக்கிலெடுக்காது அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது

with one comment

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் மக்களை கணக்கிலெடுக்காது அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின் போது முஸ்லிம் மாணவர்களின் கலாச்சாரம் குறித்து கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அதனால் முஸ்லிம் மாணவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துகின்ற போதும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்தவொரு முஸ்லிம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முயற்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 25, 2011 at 6:09 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குருடர்களாகவும் , ஊமைகளாகவும் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது கல் வீசவேண்டாம்

with 17 comments

இந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவான சுமார் 12 ஆயிரம் பேருக்கு நாட்டில் 28 முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது.

இந்த பயிற்சி நெறி 18 இராணுவ முகாம்களிலும் 2 கடற் படை முகாமிலும் 2 விமான படை முகாமிலும் 4 காலால் படை முகாமிலும் 2 போலீஸ் முகாமிலும் இடம்பெறுகின்றது ஒரு முகாமிற்கு சுமார் 430 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. மாணவர்களுக்கு கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பாக கருத்துரைத்துள்ள டாக்டர் அஷ்ஷேய்க் மசீஹுத்தீன் இனாமுல்லாஹ் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 25, 2011 at 12:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களை வெளியேற்றியதும் ராஜீவ் காந்தியை கொலை செய்தமையும் நியாயமானது

with one comment

உருத்திரகுமாரை தலைவராக கொண்ட புலிகளின் புலிகளின் அரசியல் மறுபிறப்பு என்று கருதப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று அழைக்கப்படும் அமைப்பின் கிழக்கு லண்டன் உறுப்பினர் எஸ் செல்வராஜா என்பவர் முஸ்லிம்கள் யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும் தகுந்த காரணங்கள் இருக்கலாம் என்று அவற்றை நியாயப்படுத்தியுள்ளார்.

அவர் ராஜீவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தியும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனத்துவேசமான கருத்துக்களையும் வெளியிட்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது கடந்த மே 19ல் லண்டனில் இடம்பெற்ற சர்வமத பிரார்த்தனையில் கலந்துகொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 25, 2011 at 10:34 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்புக்கும் புத்தளத்துக்கும் இடையிலான ரயில் சேவை துரிதமாகும்

leave a comment »

கொழும்புக்கும் புத்தளத்துக்கும் இடையிலான ரயில் சேவைகளில் ஏற்படும் வீண் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில்  கொழும்புக் கோட்டைக்கும் ஜாஎலைக்கும் இடையில் அமைக்கப்பட்டுவந்த  இரட்டை ரயில் பாதை நேற்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த இரட்டைப் பாதையை சீதுவை வரையில் விஸ்தரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜாஎலையில் இருந்து சீதுவை வரைக்கும் உள்ள 6 கிலோ மீற்றர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கவும் துடல்ல மற்றும் அலவதுபிட்டிய ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் தரிப்புக்காக புதிய மேடைகளை அமைக்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Written by lankamuslim

மே 25, 2011 at 9:46 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

25 கோடி ரூபா பெறுமதியான அரச மருந்துப் பொருட்கள் பதுக்கல் !!

leave a comment »

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 கோடி ரூபா பெறுமதியான அரச மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படாமல் மஹரகம புற்றுநோய் ஆஸ்பத்திரியின் களஞ்சிய சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக விரிவான விசா ரணைகளை நடத்துமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான மருந்துப் பொருட்கள் தொடர்பான மீளாய்வுக் குழுவுக்கு நேற்றுப் பணிப்புரை விடுத்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 25, 2011 at 9:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது