Lankamuslim.org

Archive for மே 24th, 2011

ரிஸானா நபீக் சிறையில் நாட்கள் 2,193

leave a comment »

ரிஸானா நபீக் கைது செய்யப்பட்டு 2,193 நாட்கள்   கடந்துள்ளது ஆனால் அந்த துயர் தொடர்கதையாக உள்ளது. 2005ஆம் ஆண்டு சவூதி அரேபியா நாட்டுக் கைக்குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் உளநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாகவும் நினைவுகளை மறந்தும் விடயங்களை விளங்கிக்கொள்ளாத தன்மையையும் கொண்டவராகக் காணப்படுவதாகவும் ஏசியன் ரிபியூன் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

குழந்தையொன்றை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ரிஸானா நபீக் சவூதி அரேபியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தவாத்மி மேல் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிஸானா நபீக்கு மரண தண்டனை விதித்திருந்தது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 24, 2011 at 9:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் நகர வீதிக்கு தந்தை செல்வநாயகம் பெயர்

with one comment

புத்தளம் நகரிலுள்ள பெயர்களற்ற அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் புதிய பெயர்களைச் சூட்டி அதற்கான பெயர்ப்பலகைகளை நாட்டிவைக்க புத்தளம், நகர பிதா கே. ஏ. பாயிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நகர சபைப் பேச்சாளரும், நகர பிதாவின் செயலாள ருமான எஸ். எச். எம். நியாஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில் கூறியதாவது: புத்தளம் நகரிலுள்ள பெரும்பாலான வீதிகளுக்கு நீண்டகாலமாக பெயர்கள் இல்லாததால் பலவித சிரமங்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். உரியவர்களுக்கு கடிதங்கள் வருவதில் கூட காலதாமதம் ஏற்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்ட நகரபிதா முடிவு செய்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2011 at 9:05 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி

with 2 comments

இன்று -24.05.2011-தினகரனில் வெளியான இந்த தகவல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது: முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு முஸ்லிம் மாணவிகள் கலாசாரப்படி உடை அணியவும் நடவடிக்கை– பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவர்கள் தங்களது நாளாந்த சமயக் கடமைகளை வேளா வேளைக்கு நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்ற முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படுகின்ற உணவு ஹலாலானவை என்பதை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இப்பயிற்சியில் பங்குபற்றியுள்ள முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி உடை அணிவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2011 at 8:41 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வாழைச்சேனை: அதிபர் இடமாற்றம் நிர்வாகத்தை சீர்குலைக்கும்

with one comment

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய அதிபரை இடமாற்றும் முயற்சியானது நிர்வாகத்தை சீர்குலைக்கும் செயலென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஓட்டமாவடிக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இவ்வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்துவிட்டு வேறு ஒரு அதிபரை நியமித்து பாடசாலை நிர்வாகத்தை சீர்குலைக்கச் செய்வது கடும் கண்டனத்திற்குரிய விடயமாகும். மட்டக்களப்பு மத்திய வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயம் 01.04.2009 இல் தரம் ஐஇ(சி) பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு எத்தகைய அரசியல் தலையீடுகளுக்கும் உட்படாதவாறு தற்போது அதிபராகக் கடமையாற்றும் ஜனாப் எம்.ரீ.எம்.பரீட் நியமனம் பெற்று பாடசாலையைப் பொறுப்பேற்றுக்கொண்டார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2011 at 8:21 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாய் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயற்சி செய்யும் காட்சிகள்

with one comment

இணைப்பு-2 லண்டன் நகரில் தாயொருவர் தனது சொந்த 4 மாதங்களே ஆன குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயற்சித்த சம்பவம் பாதுகாப்பு இரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது . குழந்தையின் தந்தை குழந்தை பற்றி அக்கரை கொள்ளாமையால் குழந்தையின் தாய் குழந்தையை பராமரிப்பதை சுமையாக கருதியதாலும் தனது சுதந்திரமான வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருந்தமையாலும் அந்த 17 வயது லண்டன் நகர நாகரீக பெண் தனது குழந்தையை கொலை செய்ய முயன்றுள்ளார் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு வறுமை காரணமல்ல என்பது குறிபிடத்தக்கது

வைத்தியசாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராவில் குறித்த பெண் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்த முயன்ற காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தடவைகள் குழந்தை சுவாசிப்பதை தடை செய்யும் முகமாக துணியாலும் , கையாளும் அதன் முகத்தை அழுத்தி மூச்சை நிறுத்துவதும் பதிவாகியுள்ளது விரிவாக Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 24, 2011 at 8:03 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது