Lankamuslim.org

Archive for மே 20th, 2011

கற்பிட்டி அரச காணிகள் பறிபோகின்றது: நியாஸ்

leave a comment »

அதிகமான மக்கள் செறிந்து வாழும் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள அரச காணிகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு வெளியே உள்ள பெரும் வர்த்தகர்களே என முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்துள்ளார் .

அரசாங்கத்தினால் கற்பிட்டி பிரதேசம் சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதனால் கற்பிட்டி பகுதியில் ஹோட்டல்களை அமைப்பதற்கு பல வர்த்தகர்கள் முண்டியடிக்கிறார்கள். அந்தந்தப்பகுதிகளிலுள்ள காணிகளை எவ்வளவு விலை கொடுத்தாவது பெறுவதற்கும் அவர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள இனங்காணப்பட்ட அரச காணிகள் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் புத்தளத்திற்கு வெளியே உள்ளவர்கள்  வர்த்தகர்களுக்கு விற்கப்படுகிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 20, 2011 at 10:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் சல்மான் ருஸ்தியின் நடுநிசி சிறுவர்கள் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்: சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை இலங்கையில் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டது. இதற்கு ஈரானின் தலையீடு இருந்ததாக இயக்குனர் தீபா மேத்தா தெரிவித்துள்ளார்.விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 20, 2011 at 9:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தலைமைத்துவ பயிற்சி குறித்த திகதியில் நடைபெறும்

leave a comment »

பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக நடைபெறவுள்ள தலைமைத்துவ பயிற்சி திட்டமிட்டபடி எதுவித தாமதமுமின்றி நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயக தெரிவித்துள்ளார். முன்னதாக அறிவிக்கபட்டதற்கிணங்க எதிர்வரும் 23 ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

முதன்முறையாக பலகலைக்கழக மாணவர்களுக்காக இராணுவ முகாம்களில் நடைபெறவுள்ள பயிற்சிகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமுள்ளன. இந்த பயிற்சிகளுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் 7 நாட்களுக்கு இந்த பயிற்சியை பிற்போடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 20, 2011 at 8:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை

with 3 comments

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு திட்டம் உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல் தொடர்பாக அரசமைப்பிலோ, பல்கலைக்கழக சட்டத்திலோ, சர்வதேச மனித உரிமை பட்டயத்திலோ எதுவும் இல்லை. இப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுத் தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற போது . இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 20, 2011 at 9:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இராணுவப்பயிற்சியல்ல ஆளுமைப் பயிற்சியே வழங்கப்படும்

leave a comment »

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அன்றி சிறந்த எதிர்காலத் தலைவர்க ளாக மாற்றுவதற்கான ஆளுமை பயிற்சியே வழங்கப்படுகிறது.ஆளுமை விருத்தி, திறன் விருத்தி, தலைமைத்துவம், வரலாறு, சமூக ரீதியான பழக்கவழக்கங்கள், பாலியல் ரீதியான வன்முறைகள், சட்டம் ஒழுங்கு, தேக ஆரோக்கியம் உட்பட 15 அம்சங்கள் தொடர்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.

இந்தப் பயிற்சியினூடாக ரியூசன் மற்றும் உயர்தர வகுப்பு மனநிலையில் இருந்து விலகி பல்கலைக்கழக கல்விக்கு ஏற்ற மனநிலை மாணவர்களுக்கு வழங்கப்படும். பகிடி வதையும் முற்றாக ஒழிக்கப்படு மெனவும் அமைச்சர் கூறினார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 20, 2011 at 9:18 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் !

leave a comment »

நல்லையா தயாபரன்
ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?

ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 20, 2011 at 8:57 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு

with one comment

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மூன்றாவது உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலேசியா உட்பட 12 நாடுகளிலிருந்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

மாநாட்டின் மலேசிய பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் மற்றும் பேருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மட் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ளனர். இதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சுமார் 160 இலங்கையர்கள் பங்குகொள்ளவுள்ளனர்

Written by lankamuslim

மே 20, 2011 at 8:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது