Lankamuslim.org

Archive for மே 19th, 2011

மே 18 இரு தேசங்களாக இலங்கை !!!

leave a comment »

புலிப் பயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே 18ஆம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை தமிழர் தரப்புகள் மே 18ஆம் திகதியை துக்கதினமாக பிரகடனப்படுத்தி இலங்கை உட்பட உலகின் பல பாகங்களிலும் அதனை அனுஷ்டித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் தலைவர் -பிரதமர் -விஸ்வநாதன் உருத்திரகுமாரன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள் .. விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 19, 2011 at 7:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேற்குலக (தமிழரின்) மே பதினெட்டும் மேன்மையிழந்த (தமிழ்) சிறார்களும்

with 2 comments

எஸ்.எம்.எம்.பஷீர்
“பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி வெள்ளைகளிவிடமன் வேட்கையான் – தெள்ளிப் புரைக்கப் பொருளுணர்வான் என்று இவரே நூலை உரைத்தற்குரிமையிலாதார். (முனைப்பாடியார்-அறநெறிச்சாரம்)

பயங்கரவாதத்துக் கெதிரான இலங்கை அரசின் யுத்தத்தில் வெற்றி பெற்ற நாளாக பிரபாகரனை கொன்ற மே பதினெட்டாம் திகதியை இலங்கை அரச படைகளின் வெற்றி நாளாக பிரகடனப்படுத்தினார்கள் , ஏனெனில் அன்றுதான் புலிப்பயங்கரவாததுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் அல்லது அதற்கு சற்று முன்பாகவும் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான அழைப்பையும் மீறி புலிகளுடன் இழுத்து செல்லப்பட்ட மக்கள் இறுதியில் பரிதாபகரமாக தங்களின் உயிர்களை அவயங்களை இழந்து போன துயரமான மாதமாக மே மாதம் திகழ்கிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2011 at 7:28 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் முஸ்லிம்களை மீள்குடியேற்ற அமைச்சர் கோரிக்கை !

with one comment

யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளினால் வெளியேற்றபட்ட முஸ்லிம்களை  மீள்குடியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் பிரதேச செயலக மட்டத்திலான அபிவிருத்தி கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இவ்வாறான பல் கோரிக்கைகள்  அமைச்சர்களால் பல தடவைகள் விடுக்கப்பட்டுள்ளது அந்த கோரிக்கைகள் இன்று வரையும் கோரிக்கைகளாக மட்டும்தான் உள்ளது என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 19, 2011 at 7:05 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மாணவர்கள் ஜும்மாஹ் செல்ல அனுமதிதிக்கப்படமாட்டார்களா ?

with one comment

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் இப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் . அங்கு பயிற்சி நெறியில் கலந்து கொள்வது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது

அதற்கு பதிலளித்து பேசிய பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் முஸ்லிம் மாணவர்கள் ஐந்து நேரமும் தொழுவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது

Written by lankamuslim

மே 19, 2011 at 11:16 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது