Lankamuslim.org

Archive for மே 18th, 2011

முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் குற்றச்சாட்டு

with 4 comments

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்துள்ள சகல மாணவர்களுக்கும் உயர்கல்வியமைச்சு கடிதங்களை விநியோகித்துள்ளது. தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பது பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான கட்டாயமான தகைமையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது lankamuslim.org யை தொடர்பு கொண்ட சில முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் முஸ்லிம் தலைமைகள் இந்த விடையத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதாக தெரியவில்லை என்று தமது கவலையை வெளிப்படுத்தியதுடன்

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உப தலைவரை தாம் தொடர்பு  கொண்டதாகவும் அதன்போது இந்த தலைமைத்துவப் பயிற்சி திட்டம் தொடர்பாக ஜம்மியதுல் உலமா சபை உப தலைவர் தாம் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளபோதும் அதன் விபரங்கள் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 18, 2011 at 5:53 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழில் ஏழு அரச கட்டிடங்கள்

with 2 comments

குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழப்பாணத்தில் சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஏழு அரச கட்டிடங்களை அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாளை திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசத்தில் குறித்த நிர்மாணங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று எமது lankamuslim.org யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.

அமைச்சர் ஜோன் செனவிரத்ன, 20 ஆம் திகதி இவற்றை திறந்து வைக்கவுள்ளார் என்று அறிய முடிகின்றது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச கட்டிடங்களில் உடுவில் பிரதேச செயலகம், பருத்தித்துறை பிரதேச செயலக விடுதி, யாழ்ப்பாணம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விடுமுறை விடுதியும் உள்ளடங்குவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

மே 18, 2011 at 9:07 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாணவ மாணவியர் லெப்டினன் கேணல் தர்மபாலவுடன் தொடர்புகொள்ளவும் !!

leave a comment »

எதிர்கால தலைவர்கள் (Future Leaders) என்ற தொனிப்பொருளில் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான தமிழ் மொழி மூல மாணவ, மாணவியருக்கான பயிற்சிகள் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியிலும், ரன்தெனிகல, ரன்தெம்பே இராணுவ பயிற்சி கல்லூரியிலும் வழங்கப்படும் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண தெரிவித்துள்ளார் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரை பயிற்சிகள் நடைபெறவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை பயிற்சி நிலையத்துக்கு தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்கள் 034-2222364 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு செல்லும் வழிபற்றி அறிந்து கொள்ளலாம். இதே போன்று ரன்தெம்பே பயிற்சி முகாமுக்குத் தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்கள் 055-2245780 என்ற இலக்கத்தில் லெப்டினன் கேணல் தர்மபாலவுடன் தொடர்புகொண்டு விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 18, 2011 at 8:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது