Lankamuslim.org

One World One Ummah

Archive for மே 13th, 2011

ஜெயலலிதாவின் வெற்றி இலங்கை அரசியலில் தாக்கம் பெறுமா ?

with 2 comments

தமிழ் நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களுக்கும் அதிகமாகப் பிடித்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 15ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது இலங்கை விடயத்திலும் இவரின் வெற்றி பெரிய தாகத்தை ஏற்படுத்தும் என்று நம்பபடுகின்றது.

போர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் ஜெயலலிதா சூளுரைத்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 13, 2011 at 9:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸின், வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளவேண்டும்

leave a comment »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிராகரிக்கப்பட்ட மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்ட அக்குரணை பிரதேசசபை, மினுவாங்கொட நகரசபை,மாவத்தகம பிரதேசசபை ஆகியவற்றுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுக்களையே ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அக்குரணை பிரதேசசபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவில் செயலாளரின் கையொப்பம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்ற காரணத்தாலும் ஏனைய இரு உள்ளூராட்சி அமைப்புகளுக்குமான கட்சியின் வேட்பு மனுக்களில் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 13, 2011 at 5:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் மீதான தடை நீக்கம்

leave a comment »

லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் மீதான இடைநிறுத்தல் உத்தரவை பூகொட நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை நீக்கியுள்ளதுடன், அந்த லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரியவும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 22 இல் லங்கா ஈநியூஸ் இணையத்தளத்தின் நடவடிக்கையை நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. கிரிந்திவெல பொலிஸாரினால் விஜயசூரிய கைதுசெய்யப்பட்டிருந்தார் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து ஊடகவியலாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்

Written by lankamuslim

மே 13, 2011 at 3:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது