Lankamuslim.org

Archive for மே 11th, 2011

கொடிய மிருக வதை !

with 5 comments

திருகோணமலை மாவட்டம் மொரவேவ பிரதேசத்தில் நாமல் வத்த  என்ற பகுதில் மனிதர்களினால் மிருகங்களை வேட்டையா வைக்கப்பட்டிருந்த பொறிவெடியில் சிக்கி மெதுவான மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் மிருகம்.

இது தொடர்பாக கருத்துரைத்துள்ள கால்நடை டாக்டர் ஒருவர் இதனை குணப்படுத்த  முடியவில்லை உணவு, தண்ணீர் இன்றி  மெதுவான மரணத்தை தழுவிக்கொண்டிருக்கின்றது    என்று தெரிவித்துள்ளார் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றது படம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 11, 2011 at 12:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜம்மியதுல் உலமா சபையின் நிகழ்சிகள்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்:  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையி னால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டதுடன் ஹலால் விபரக்கொத்தும் வெளியீடு செய்யப்பட்டது அந்த நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் எழுதிய காதியானிஸம் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் ரண்முத்து ஹோட்டலில் இடம்பெற்றது நிகழ்வில் நாடு முழுவதுமுள்ள அதன் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் இந்த நிகழ்வின் போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினால் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 11, 2011 at 11:19 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அவசரகால சட்டம் நீக்கப்படுமா ?

leave a comment »

சுமார் கடந்த 28 வருடங்களாக இலங்கையில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை நீக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது கடந்த வருடம் 2010  மே மாதம் அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டது புலிப்பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும்  அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை முழுமையாக அல்லது பெரும்பாலானவற்றை நீக்குவது குறித்து அரசின் கவனம் திரும்பியுள்ளது.

ஐ.நா செயலாளர் பான்கீ மூனின் தருஸ்மன் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 11, 2011 at 8:48 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம், கடைகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டதற்கு பின்னால் உள்ள மர்மம்

with one comment

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: இரண்டு வியாபார நிலையங்கள் கடந்த 08.05.2011ம் திகதி இரவு வேலையில் சில விசமிகளால் திட்டமிட்டு மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் இயங்கி வந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

மேற்படி விடயம் தொடர்பில் கடந்த 04.04.2011ம் திகதியன்று நாவற்குடா பிரதான வீதியில் சாராயக்கடை நடாத்தி வரும் கட்டிட உரிமையாளரான ராஜன் என்பவரிடம் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட கொந்தராத்து வேலைகளில் ஈடுபடும் அப்பகுதியில் இயங்கி வருகின்ற ஒரு கோயில் தலைவர் ஒருவரும் சென்று குறித்த கடைகளை முஸ்லிம்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது என்றும் அதனை மீறி கொடுத்தால் என்ன நடக்கும் என தெரியாது என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 11, 2011 at 8:17 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது