Lankamuslim.org

Archive for மே 10th, 2011

பிரபாகரன் முஸ்லிமாக இருந்திருந்தால் நேட்டோ படை தாக்கியிருக்கும் !

with 5 comments

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முஸ்லிமாக இருந்திருக்கும் பட்சத்தில் அவருக்கு மேற்கத்தேய உலகின் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என்று அமைச்சர் டளஸ் அலஹப்பெரும குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு இஸ்லாமியப் பின்னணியுடனோ அல்லது அதன் தலைவர் பிரபாகரன் முஸ்லிமாகவோ இருந்திருக்கும் பட்சத்தில் ஒசாமாவுக்குக் கொடுத்த அதே தண்டனையை மேற்குலகம் பிரபாகரனுக்கும் கொடுத்திருக்கும் என்று அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

சில நாட்களுக்கு முன் மாத்தறையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 10, 2011 at 1:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெளிநாட்டுச் சக்திகள் குற்றம் சுமத்துவதை அனுமதிக்க முடியாது: ரவூப் ஹக்கீம்

with one comment

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், சர்வதேசத்திற்கான கடப்பாடுகளையும் இலங்கை பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றி வருவதாக நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கையின் சுயகெளரவத் தைப் பாதிக்கும் விதத்தில் தன்னாதிக்கமும், இறைமையும் மிக்க நாடொன்றின் மீது வெளிநாட்டுச் சக்திகள் சுட்டுவிரலைக் காட்டிக் குற்றஞ் சாட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 10, 2011 at 12:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பகிரங்கத்தன்மை பேணப்படாத பேச்சு வார்த்தைகள் தோல்வி யடைந்துள்ளன: பஷீர்

with one comment

உலகம் எங்கும் நடைபெற்ற எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் பகிரங்கத்தன்மை பேணப்படாத பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்பதே வரலாறாகும். பிரச்சினைகளுள்ள இரு தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றபோது அது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

மக்களுக்கு தெரியப்படுத்தப்படாத பேச்சுவார்த்தைகள் சட்டபூர்வமான பேச்சுவார்த்தைகளும் அல்ல. பேச்சுவார்த்தையின் விபரங்கள் மக்களை சென்றடையாமல் தடுப்பது மக்களுக்குச் செய்யப்படுகின்ற துரோகமுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமாகிய பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 10, 2011 at 12:25 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வேண்டாம்

leave a comment »

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் அரசின் திட்டத்துக்கு நாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். அதேவேளை, பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யத்தின் தலைவர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்

மருதானையில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு இதனை அவர் தெரிவித்துள்ளார் மேலும் அவர் உரையாற்றியபோது பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கல் மற்றும் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பு வதற்காகவே அரசு இராணுவப் பயிற்சி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது எனக் கூறப்படுகிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 10, 2011 at 12:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது