Lankamuslim.org

Archive for மே 8th, 2011

அக்கரைப்பற்று மாநகரசபை மேயரின் முகத்தில் நேரம் பார்க்க முடியுமா?

with one comment

அக்கரைப்பற்று நகர் மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூடு அமைந்திருந்த பகுதியில் மணிக்கூட்டுக்க பதிலாக மாநகரசபை மேயரின் நிழல்படம் வைக்கப்பட்டுள்ளதால் நேரம் பார்க்க முடியாமல் உள்ளது என பொதுமக்கள் கடும்விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் மணிக்கூட்டு கோபுரம் பொதுமக்கள் நேரம் பார்க அமைக்கப்பட்ட பொதுக்கட்டடம் ஆகும். இருந்தபோதும் இவ் மணிக்கூட்டு கோபுரத்தை புனர்நிர்மானித்து மணிக்கூட்டை இயங்கவைத்து பொதுமக்ளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாவர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 8, 2011 at 8:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

leave a comment »

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபரை உடனடியாக வெளியேறுமாறு கோரி அந்த பாடசாலை மாணவர்கள் நேற்று காலையில் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்துள்ளனர் .

பாடசாலையில் ஒளிர் சஞ்சிகை வெளியீடு தொடர்பாக மாணவர்களுக்கும் அதிபருக்கும் எற்பட்ட முரண்பாடையடுத்து அதிபர் வெளிஅடியாட்களை கொண்டு மாணவர்களை தாக்கியதில் 6 மாணவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 8, 2011 at 4:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல்கலை கழக மானிய ஆணைக்குழுவுக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படவில்லை

leave a comment »

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் முகமாக பல்கலை கழக மானிய ஆணைக்குழு-The University Grants Commission- உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளன அவர்களின் இந்த முறை ஒரு முஸ்லிம் ஒருவரும் நியமிக்கப்படவில்லை என்று சுட்டிகாட்ட படுகின்றது ஜனாதிபதி மகிந்தவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட ஏழு நபர்களில் ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளபோதும் ஒரு முஸ்லிம் நபரும் நியமிக்கபடாமை முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது கடந்த காலங்களில் பேராசிரியர் எம் .ரி .எம் . ஜிப்ரி , பேராசிரியர் கரீம் உட்பட பல முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்தவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக பேராசிரியர் காமினி சமரநாயக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் உபதலைவராக பேராசரியர் ரன்ஜித் சேனரத்னவும் செயல்படவுள்ளனர் இந்த ஏழு பேர் கொண்ட குழுவில் பேராசிரியர் சுப்பிர மணியம் என்ற தமிழர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 8, 2011 at 1:56 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனபிரச்சினைக்குத் தீர்வு: முஸ்லிம் கட்சிகளுடன் பேச ஜனாதிபதி இணக்கம்

with one comment

இனபிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கம் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகின்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து தீர்ப்பு தொடர்பாக முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென விடுத்த வேண்டுகோளையடுத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துமாறு ஜனாதிபதி அரச பேச்சுவார்த்தை குழுவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்

முப்பது வருட கால யுத்தத்தினால் வடக்கு , கிழக்கு முஸ்லிம்கள் பெரும் துயரங்களையும் இழப்புகளையும் எதிர் நோக்கினர் அரசாங்கம் தமிழ் கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது முஸ்லிம்களின் கருத்தையும் அறிந்தே தீர்வு ஒன்று காணப்பட்ட வேண்றுமென்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதிக்கு எடுத்து கூறியுள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 8, 2011 at 1:09 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாபெரும் இலக்கியமும் மாவீரர் இலக்கணமும்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“என்னுடைய பெயர் என்னவென்று எனக்கு தெரியாது நான் யாரென்பதும் மறந்து விட்டது ஆனால் -ஒன்று மட்டும் எனக்கு நல்ல ஞாபகம் நான் மரணமாகவில்லை அகால மரணமானேன்” எஸ். சண்முகதாசன் (கல்லறை கீதங்கள் )

மாவீரர் தினம் இலங்கையில் புலிகளின் தலைவரின் அஸ்தமனம் வரை வட புலத்தில் இறுதியாக கொண்டாடப்பட்டது. புலம் பெயர் தேசங்களில் இன்றுவரை கொண்டாடப்படுகிறது ஆனால் மீண்டும் அண்மையில் மாவீரர் தினம் கிழக்கில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த மாவீரர் தினம் அதே புலிகளில் இருந்தவர்கள் , அதிலிருந்து பிரிந்து ஜனநாயக வழிக்கு திரும்ப , முனைந்தபோது வன்னியை தளமாக கொண்ட பிரபாகரனின் புலிகள் கிழக்கிலிருந்த தமது சகோதர “புலிகளை” வெருகல் ஆற்றில் சொர்ணம் தலைமையில் அன்று விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 8, 2011 at 11:53 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

பென்டகனின் உஸாமாவின் புதிய வீடியோக்கள்

leave a comment »

அமெரிக்காவின் படையினால் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்ட அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின் வீடியோ பதிவுகள் என்று தெரிவித்து 5 புதிய வீடியோ பதிவுகளை அமெரிக்க இராணுவத் தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள 5 வீடியோவும் உஸாமா இருந்த வீட்டில் பதிவானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்றில் நரைத்த தாடியுடன் இருக்கும் இயல்பான வீடியோவும், மற்றும் மிடியாகளுக்கு அனுப்ப பதிவு செய்யப்பட்ட வீடியோகளும் என்று தெரிவித்து பென்டகன் அந்த புதிய பதிவுகளை வெளியிட்டுள்ளது அந்த பதிவுகளில் ஆடியோ வடிவம் நீக்கப்பட்ட நிலையில் வீடியோ மட்டும் வெளியிடபட்டுள்ளது வீடியோ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 8, 2011 at 10:37 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது