Lankamuslim.org

Archive for மே 6th, 2011

அரபு மொழி தேசிய பேச்சுப்போட்டி தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்பாடு

leave a comment »

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்களிடத்தில் அரபுமொழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப்பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கையில் அரபுமொழி எனும் கருப்பொருளில் ஆண்,பெண் இருபாலாருக்கும் பிரத்தியேகமாக நடைபெறவுள்ளது.

இப்போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறும். உயர்கல்வி மற்றும் தேசிய கல்வி நிறுவன மாணவர்களுக்கிடையிலான போட்டி(இப்போட்டியில் பல்கலைக்கழக,தொழில்நுட்ப மற்றும் கல்விக்கல்லூரி மாணவர்கள் பங்குபற்றலாம்)அங்கீகரிக்கப்பட்ட அரபு கலாசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி(அரச,தனியார் பாடசாலைகள்) பங்குபற்ற முடியும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 6, 2011 at 3:29 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உஸாமா பின் லாதினுக்கு ஜனாஸா தொழுகை

leave a comment »

கடந்த இரண்டாம் திகதி அமெரிக்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட உஸாமா பின் லாதினுக்கு இன்று காத்தான்குடியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது. காத்தான்குடி நகர சபையின் தலைவர் விடுத்த வேண்டுகோளையடுத்து காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ மஸ்ஜிதில் இன்றைய ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டுள்ளது

தொழுகையினை மௌலவி மஸுத் காஸிமியினால் நடாத்தபட்டுள்ளது . இதன் போது துஆ பிராத்தனையும் இடம்பெற்றுள்ளது இந்த ஜனாஸா தொழுகையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் உள்ளிட்ட பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்துள்ளனர் அதேபோன்று நாட்டின் வேறு பகுதிகளிலும் இன்று அவருக்காக ஜனாஸா தொழுகை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் நடாத்தப்பட்டுள்ளது

Written by lankamuslim

மே 6, 2011 at 3:10 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசு, தமிழ் தரப்பு பேச்சு விபரங்கள் இரகசியமாக வைக்கப்படும் !

leave a comment »

அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுகள் தொடர்பான விவரங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு வெளியிடப்படமாட்டாது என்று அரசு நேற்று அறிவித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றியுள்ள அமைச்சர் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக அரசு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 6, 2011 at 8:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது