Lankamuslim.org

Archive for மே 5th, 2011

பிச்சைக்கார முதலாளிமார்

leave a comment »

இந்த செய்திக்கு தினகரனில் வந்த படம்

ஒரு சிலரின் வலது குறைந்த தன்மையை சாதகமாக பயன்படுத்தி அவர்கள் மூலம் நாளாந்தம் இலட்சக்கணக்கான ரூபாவை கொள்ளை லாபமாக பெறும் ஒரு பெரும் மோசடியை பொலிஸார் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு சிலரின் வறுமையையும் உடல் ஊனத்தையும் காட்டி பொதுமக்களின் கருணையுள்ளத்தை துஷ்பிரயோகம் செய்து, சில முதலாளிமார் இவர்களை பிச்சையெடுக்கச் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இந்த முதலாளிமார் நல்ல செல்வந்தர்கள். இவர்களிடம் 500க்கும் 1000க்கும் இடைப்பட்ட அளவிலான பிச்சைக்காரர்கள் நாளாந்தச் சம்பளத்திற்கு பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு பிச்சைக்காரருக்கும் எவ்வளவு பணத்தை நாளாந்தம் பிச்சையெடுத்துச் சம்பாதிக்க முடியும் என்பதற்கமையவே, அவர்களுக்கு கொடுக்கப்படும் நாளாந்த சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 5, 2011 at 1:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உஸாமா கைது செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்: அவரின் மகள் தகவல்

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah:அமெரிக்க நிர்வாகம் நிராயுத பாணியாக இருந்த அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதினை படுகொலை செய்த காட்சிகள் அடங்கிய படங்களை வெளியிட மறுத்துள்ளது அமெரிக்க தேசிய பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவிக்கின்றது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று புதன் கிழமை இந்த முடிவை அறிவித்துள்ளார் இந்த முடிவுக்கு CIA உளவு அமைப்பின் தலைவர் பனெட்டா தவிந்த பாதுகாப்பு செயலாளர் ரோபட் கேட்ஸ் உட்பட ஏனைய உயர் மட்ட அதிகாரிகள் ஒபாமாவின்  முடிவை ஆதரித்துள்ளனர்.

அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின் படுகொலை செய்யப்பட்டதை மீட்டும் உறுதி செய்த வெள்ளை மாளிகை அவரின் DNA பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின் இருந்ததாக அமெரிக்கா தெரிவித்த வீட்டில் அமெரிக்கா தனது படுகொலையை அரங்கேற்றும்போது கொல்லப்பட்ட மூவரின் படங்களை வெளியிட்டுள்ளது விரிவாக 

Written by lankamuslim

மே 5, 2011 at 11:57 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது