Lankamuslim.org

Archive for மே 4th, 2011

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அரசியல் மாற்றத்துக்கு அல்ல !

leave a comment »

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்றல்ல என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையுடனான நட்புறவை நீண்ட காலத்திற்கு பேண விரும்புவதாகவும் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 4, 2011 at 8:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலிய குழு இலங்கை வந்துள்ளது

leave a comment »

இஸ்ரேல் விவசாய அமைச்சர் ஒரிடி நோகிட்-Orit Noked- உள்ளிட்ட  குழுவினர்  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது ஒரிடி நோகிட் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் மே மாதம் 3 ஆம்  திகதி இலங்கை வந்து 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து உயர் மட்ட  பேச்சுகளில் ஈடுபடுவதுடன் பிரதமரையும் சந்தித்து பேசுவார்கள் இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து இடம்படும் என்று இஸ்ரேலிய செய்திகள் முன்னர் தெரிவித்திருந்தன.

கடந்த 2000 ஆம் ஆண்டில் இலங்கை இஸ்ரேலுடனான ராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்திய பின்னர் இரு நாடுகளுகிடையிலான உறவு வலுவடைந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைளிருந்து சுமார் 300 பேர் விவசாய தொழில் பயிற்சிக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பப்பட்டனர் என்பது குறிபிடத்தக்கது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 4, 2011 at 6:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீள்குடியேற்ற செயலகம் இயங்குகின்றது

leave a comment »

மீள்குடியேற்ற செயலகம் மூடப்பட்டுள்ளது வடக்கில் இருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை கவனிக்க உருவாக்கப்பட்ட வடக்கு முஸ்லிம் செயலகம் கடந்த மார்ச் மாதத்துடன் மூடப்படுகின்றது என்று மீள் குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்தது .

கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் படி முஸ்லிம்களை வடக்கில் மீள் குடியேற்ற எடுக்கபட்ட முயற்சிகள் பெருமளவில் பூர்த்தியாகி இருப்பதால் இச் செயலகம் மூடப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் எனினும் அந்த செயலகம் தற்போதும் செயல்பட்டு கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது ஆனாலும் அது எவ்வளவு காலத்துக்கு செயல்படும் என்று கூறமுடியாது என்று செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Written by lankamuslim

மே 4, 2011 at 5:09 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

உஸாமா பயங்கரவாதியா? இஸ்லாமியவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது

with 5 comments

 உஸாமா பின் லாதின் பயங்கரவாதியா? இஸ்லாமிய கொள்கை தீவிரவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெனலானா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் இஸ்லாமிய கொள்கையை பேணுவதற்கு சகலதையும் இழந்து போராடியவர் ஒசாமா : 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினியரும் பொருளியல் பட்டதாரியுமான உஸாமா பின் லாதின் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறு த்துக்கொள்ள முடியாத நிலை யில் 1979ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம்பித்தார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 4, 2011 at 1:38 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது