Lankamuslim.org

Archive for மே 3rd, 2011

ஒசாமா கொலை பாகிஸ்தான் இறைமைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகும்

with one comment

அமெரிக்கா பாகிஸ்தானிற்குள் தனது படையினரை அனுப்பி ஒசாமா பின்லேடனை கொலை செய்துள்ளதுள்ளதோடு ஒசாமாவின் சடலத்தினை எடுத்தும் சென்றுள்ளது. இது ஓர் மனித உரிமை மீறலாகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

‘அமெரிக்கா பாகிஸ்தானுள் நுழைந்து இவ்வாறான செயலை செய்தமை அந்த நாட்டின் இறைமைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகும். மே மாதம் 19 ஆம் திகதியும் அமெரிக்கா போலவே தாமும் செயற்பட்டதாகவும் ஆனால் அமெரிக்கா அதனை போர்க்குற்றம் என இலங்கை மீது குற்றம் சாட்டி வருகின்றது”. எனவும் அவர் தெரிவித்துள்ளார் கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழவொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

Advertisements

Written by lankamuslim

மே 3, 2011 at 7:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணத்தில் தப்லீக் ஜமாஅத் இஜ்திமா

leave a comment »

தகவல்: ஜான்சின் சரீப்
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் 1990இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு தற்போது அவர்கள் மீளக்குடியேறி வருவது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது தப்லீக் ஜமாஅத்தின் பிரதேச ரீதியான இஜ்திமா யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானிலுள்ள பெரியபள்ளியில் மே மாதம் முதலாம் திகதி இடம்பெற்றுத.

இதில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள மற்றும்; நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சோர்ந்த முஸ்லிம்கள் ஆயிரத்தி ஐநூறு பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் கொழும்பிலிருந்து பொறுப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் லெப்பை ஹாஜியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸல்மான் மௌலவி அஸருக்குப் பின்னும் றிஸ்வி முப்தி மஃரிபுக்குப்பிறகும் பிரசங்கம் செய்தனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 3, 2011 at 6:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது