Lankamuslim.org

Archive for மே 2nd, 2011

ஐநா முயற்சிகள் நாட்டினை கட்டியெழுப்புவதற்கு: உலமா சபை

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் நாட்டினை கட்டியெழுப்புவதற்கும், இன மோதல்களை தடுப்பதற்கும் மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தில் உறுதியாக இருப்பதாக அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை தெரிவிக்கின்றது.

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். யுத்த சூழலில் இருந்து விடுபட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஆட்சேபிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

மே 2, 2011 at 7:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வேதமோதும் சாத்தான்களும் வெந்துபோன சாமான்யர்களும்

with 2 comments

எஸ்.எம்.எம்.பஷீர்
“நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்து உன்னைமீட்டுக்கொண்ட உனது கடவுளாக இருக்கிறேன்.” ( வெளியேற்றம் 20) “I am the LORD thy God, which have brought thee out of the land of Egypt, out of the house of bondage” (Exodus: 20)

“தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்” என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் கூறுவது போல் அடிப்படை மனித தர்மத்தை இனத்தின் பெயரால் அழிக்க வந்த பயங்கரவாத புலிகள் அழிந்து போனபின் இலங்கை இரரணுவம் வென்றதா , அவர்கள் மனித உரிமை மீறல்கள் செய்தார்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பால் , இலங்கையில் தேசிய அமைதியையும் இன சவ்ஜன்யத்தையும் அபிவிருத்தியையும் உணர்ந்துகொண்ட மக்கள் இன்று நிமமதியாக சுவாசிக்க முடிகிறதா என்ற கேள்வி எழுந்தால் அதற்கு ஒரே வரியில் பதில் “ஆம்” என்பதுதான் , அதேவேளை , அதற்கடுத்தபடியாக சுவாசம் நிறுத்தி “ஆனால்” என்று சிலர் அடுத்த கதை சொல்ல வந்தாலும் , கீதை (கண்ணன்) வழி உபதேசத்தில் தர்மம் வெல்லுமேன்றால், அது எப்படியும் அதர்மத்தை அழிக்கலாம் என்று நோக்குகின்ற பொது இன்று அதர்மம் (புலிப் பயங்கரவாதம் ) அழிக்கப்பட்டிருக்கிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 2, 2011 at 6:46 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது