Lankamuslim.org

Archive for மே 2011

‘பயங்கரவாத ஒழிப்பு- இலங்கையின் அனுபவம்’

leave a comment »

‘பயங்கரவாத ஒழிப்பு- இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று கொழும்பில் நடைபெறுகின்றது

கலதாரி ஹோட்டலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத ஒழிப்பு- இலங்கை யின் அனுபவம் என்பன தொடர்பான விசேட உரை நிகழ்த்தவுள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மே 31, 2011 at 11:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐநா வும் இலங்கையும் ஒரு தொகுப்பு பார்வை

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்:தொகுப்பு: இலங்கையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தால், அவரது அலுவலகத்துடன் இனிவரும் காலங்களில் ஆக்கபூர்வமாகப் பணியாற்ற முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது

போர்க் குற்றங்களை விசாரிக்க உள்நாட்டிலேயே முழுமையான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறை ஒன்றும் தேவை என்று நவிப்பிள்ளை நேற்றுத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நிபுணர் குழுவின் அறிக்கையை தனது பேச்சின் இடையே இழுத்திருப்பதன் மூலம் மனித உரிமைகள் சபையின் சட்டதிட்டங்களையும் நடைமுறையையும் நவிப்பிள்ளை மீறி இருக்கிறார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2011 at 9:44 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தீர்வுப் பேச்சுக்களில் தனித்தரப்பாக இருக்கும் தகைமை முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்டு

leave a comment »

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தனித்தரப்பாகப் பேசுவதற்குரிய தகுதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே பெற்றிருப்பதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பேணுவதற்காக முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று தோற்றம் பெற்ற கட்சிகளெல்லாம் தங்களது கட்சிகளின் பெயர்களில் இருந்து “முஸ்லிம்’என்ற அடையாளத்தையே விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 31, 2011 at 9:01 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விபத்தில் கட்பிட்டியை சேர்ந்தவர் வபாத்

leave a comment »

கொழும்பு புத்தளம் பிரதான வீதி ஆராய்ச்சிகட்டு பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கற்பிட்டியைச் சேர்ந்த எம்.எம். முபாரிஸ் -வயது 45- ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளார். லொறியில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்காலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக் லேலாண்ட் பஸ்சும், கற்பிட்டியிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மீன் லொறியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்கள் சிலாபம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன், இது தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Written by lankamuslim

மே 31, 2011 at 8:05 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மனித உரிமைகள் சபையில் இலங்கை

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 17வது அமர்வு ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றவுள்ளார்.

இம்மாநாட்டில்  இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி செனல்4 வெளியிட்ட ஐந்து நிமிட  காட்சிகள்  உண்மையானவை என ஐநா விசாரணையாளரும் சட்டத்துறை பேராசிரியருமான கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ்-Christof Heyns-  தெரிவித்துள்ளமை மாநாட்டில் இலங்கை விடயத்தில் முக்கியமானதாக பார்கப்படுகின்றது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 30, 2011 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிராஜியா அரபுக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி வபாத்

with 2 comments

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச சிராஜியா அரபுக் கல்லூரி மாணவர்கள் மூவர் ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி வபாத்தகியுள்ளனர் என்று எமது lankamuslim.org  ஓட்டமாவடிசெய்தியாளர் தெரிவிக்கின்றார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த விபத்தில் கல்லூரி மாணவர்களான தாஸிம் முஹம்மட் ராபி, பாறூக் முஹம்மது றிபாஸ்தீன், ஆகிய மாணவர்களும் அவர்களுடன் முஹம்மட் அன்வர் என்ற மௌலவியான கல்லூரி விடுதிப் பொறுப்பாளரும் உயிர் இழந்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 29, 2011 at 1:58 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழுகிற உலகம் !!

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே”  (அதிவீரராம பாண்டியர்) இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படியிலே நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 29, 2011 at 8:16 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது