Lankamuslim.org

One World One Ummah

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

leave a comment »

ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் அவர் நியமித்த நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. “நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசாங்கத்தினாலும் புலிகளினாலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்பவை பாரியளவில் பாரதூரமான முறையில் மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் நம்பகத் தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவை போர்க் குற்றங்களின் தன்மையைக் கொண்டவையாகலாம். அத்துடன் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றச்செயல்களின் தன்மையையும் கொண்டவையாகும். உண்மையில் யுத்தம் இடம்பெற்ற விதமானது போர் மற்றும் சமாதானத்தின் போது தனிப்பட்ட கௌரவத்தை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் முழுப்பரிமாணத்தின் மீதும் இடம்பெற்ற தாக்குதலாக தென்படுகிறது’  விரிவாக   என நிபுணர் குழு கண்டறிந்துள்ளதை நாம் வரவேற்கிறறோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

“இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது எனவும் இலங்கை மக்கள் அனைவரும் உண்மையான ஜனநாயகம், சமத்துவம், நீதியின் நன்மையை பெறும் விளைவை ஏற்படுத்தக்கூடிய செயற்பாட்டில் ஆக்கபூர்வமாக பங்குபற்றும்படியும் இலங்கை அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்” என அவர் கூறியுள்ளார்.

“போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் இதற்கு பதிலளிப்பது எமது கடமை என நாம் கருதுகிறோம். முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் பூரண பதில் அளிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

—- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் விபரம் பின்வருமாறு:

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கான ஆலோசனைக் குழாம் சமர்ப்பித்த அறிக்கையின் நிறைவேற்றுச் சாராம்சமெனத் தெரிவிக்கப்பட்ட செய்தியை ஊடகங்களில் வாசித்தோம்.

சமீபத்தில் முடிவடைந்த யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிப்புற்ற வடக்கு-கிழக்கின் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான பதிலுரையை வழங்க வேண்டியது எமது கடமையென்று எண்ணுகின்றோம். அதே வேளையில், பூரணமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னர் அது குறித்து மேலும் பூரணமான வகையில் எமது பதிலுரையை வழங்குவதற்கான உரிமை எமக்கு உள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக நாட்டின் இனத்துவ-தேசியவாத முரண்பாட்டுக்கும், அர்த்தமுள்ள ஆட்சிமுறை அதிகாரங்களிலிருந்து தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டமைக்குமான மூலகாரணங்களுக்கு, ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான தீர்வொன்றை வழங்கவேண்டுமென்று நாம் நிலைமாற்றமின்றி வலியுறுத்தி வந்துள்ளோம். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசின் அரசாங்கங்கள், இத்தகைய அரசியல் தீர்வொன்றை வழங்கத் தவறியமையே முரண்பாடு தீவிரமடைவதற்கும், அதன் விளைவுகளுக்கும் முதனிலைக் காரணமாகும். பல வருடகாலமாக இலங்கை அரசு நிராயுதபாணிகளான தமிழ் சிவிலியன் மக்களை அடக்கி, அடிமைப்படுத்தியதோடு, எத்தகைய சட்டபூர்வமான அதிகாரப் பகிர்வும் அவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் வகையில், முறைமையாகவும், தொடர்ச்சியாகவும் அவர்களுக்கெதிரான வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது.

ஆயுதம் தரித்த போராளிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது நிராயுதபாணிகளான தமிழ் சிவிலியன் மக்கள் தீங்கிழைக்கப்படாதிருப்பதையும், பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்வது இலங்கை அரசாங்கத்தின் கடமையென்பதை நாம் நிலைமாற்றமின்றி வலியுறுத்தி வந்துள்ளோம்.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மூர்க்கத்தனமாகச் சிவிலியன் மக்கள் வாழும் பிரதேசங்கள் மீது குண்டுவீசியும், கனரக ஆட்டிலெறி மற்றும் பல்குழல் ரொக்கட் செலுத்திகளைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தியதோடு, ஆழமாக ஊடுருவும் அலகுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்களுக்கு மரணத்தையும், பாரதூரமான காயங்களையும் விளைவித்து, இலட்சக்கணக்கான இத் தமிழ் சிவிலியன்களை அவர்களின் வீடு வாசல்களிலிருந்து இடம்பெயர வைத்து, அவர்களின் வீடுகளையும், தொழில் உபகரணங்களையும், ஏனைய சொத்துக்களையும் நாசம் செய்து, அவர்களை நிர்க்கதி நிலைக்குத் தள்ளியது.

மேலும், இத்தகைய தமிழ் சிவிலியன் மக்களுக்கு உறைவிடம், உணவு, மருந்துகள், குடிதண்ணீர் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மறுக்கப்பட்டு, வைத்தியசாலைகள் மீதும், நிவாரண நிலையங்கள் மீதும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, யுத்தப் பிரதேசங்களில் வாழும் நிராயுதபாணிகளான தமிழ் சிவிலியன் மக்களின் பாதுகாப்புக்கோ, நலனுக்கோ, கௌரவத்துக்கோ எதுவித அக்கறையும் காண்பிக்கப்படாத வகையில் அவர்களின் இராணுவ நடவடிக்கைகளைச் செயற்படுத்தினர். நீதி முறைசாரா மரணதண்டணை நிறைவேற்றங்களும், வெள்ளை வான் மூலம் ஆட்களைக் கடத்தும் பயங்கரமும் குறைவின்றித் தொடர்ந்தன. இவையும், ஏனைய பயங்கரமான சம்பவங்கள் குறித்த அறிக்கைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, உடனுக்குடன் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டு, சம்பந்தமுற்ற சகலரினதும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

சமீபத்தில் முடிவடைந்த யுத்தத்தின்போது நிராயுதபாணிகளான தமிழ் சிவிலியன் மக்களுக்கு நேர்ந்த கதி சம்பந்தமாhன உண்மைகளை ஜ.நா செயலாளர் நாயகத்துக்கான ஆலோசனைக்;குழாம்; சமர்பித்த அறிக்கை உறுதிசெய்திருப்பதையும், இது, இச் சம்பவங்கள் நிகழ்ந்த வேளையில் நாம் நாடாளுமன்றத்தில் அறிக்கையிட்ட சம்பவங்களை மறுக்கமுடியாதவகையில் உறுதிப்படுத்தியிருப்பதையும் அவதானிக்கின்றோம். ‘நம்புதகவு மிக்க சார்த்துதல்கள், அவை நிரூபிக்கப்பட்டால், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினதும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினதும் பரந்த வீச்சிலான, மிகப்பாரதூரமான மீறல்கள் இலங்கை அரசாங்கத்தினாலும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினாலும் புரியப்பட்டுள்ளன என்பதையும், அவற்றுள் சில யுத்தக் குற்றங்களும், மனித குலத்துக்கெதிரான குற்றங்களும் ஆகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. உண்மையில், யுத்தம் செய்யப்பட்ட முறை யுத்த காலத்திலும், சமாதான காலத்திலும் தனிநபர் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள முழு அளவிலான சர்வதேசச் சட்டங்கள் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு பாரதூரமான தாக்குதலாகும்.’

விசேடமாக, இக்குழாம் யுத்தத்தின் இறுதிப்படி நிலைகளோடு இணைவுற்ற வகையிலான நம்புதகவுள்ள சார்த்துதல்களைக் கண்டறிந்துள்ளதோடு, இலங்கை இராணுவம் பாரிய மற்றும் பரந்த அளவிலான ஷெல் வீச்சுகளுடன் வன்னிக்குள் நடவடிக்கைகளை ஆரம்பித்தது பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன் மக்களின் மரணத்துக்குக் காரணமாக அமைந்ததையும் கண்டறிந்துள்ளது.

ஆலோசனைக் குழாம்;; இந்த நடவடிக்கை வன்னியின் ஜனத் தொகையாகிய சுமார் 330,000 சிவிலியன் மக்களைத் தொடர்தொல்லைகளுக்கு ஆளாக்குவதாக அமைந்ததென்று தெரிவிக்கின்றது. இக்காலத்தில் வன்னியின் ஜனத்தொகை சம்பந்தமான அரசாங்கத்தின் மதிப்பீடு 70,000 மாத்திரமேயாகும். நம்புதகவுடன் சார்த்துதல் செய்யப்படும் இந்த மீறல்கள் சம்பந்தமாகப் பாரதூரமான விசாரணைகளும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கெதிரான வழக்குத் தொடரல்களும் அவசியமென்று ஆலோசனைக் குழாம் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

‘வகைப்பொறுப்பு சம்பந்தமான அரசாங்கத்தின் எண்ணப்பாடு சர்வதேசத் தர நியமங்களுடன் இணக்கமானதாக அமையவில்லை’ என்றும் ஆலோசனைக் குழாம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு மிகவும் குறைவாக இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமெனில், அரசாங்கம் இரு தரப்புகளும் புரிந்த மீறல்களைக் குறித்த சார்த்துதல்களுக்கு உண்மையாகவே தீர்வு காணவேண்டுமென்றும், போரில் பலியானவர்களின் உரிமைகளையும், கௌரவத்தையும் தனது வகைப்பொறுப்புக் குறித்த அணுகுமுறையின் நடுநாயகமாக வைத்தமைக்க வேண்டுமென்றும் ஆலோசனைக்;குழாம் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றது. இச்சூழமைவில், குழாம் சில நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. இவை, முழுமையாக, செயலாளர் நாயகத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் வகைப்பொறுப்பு சம்பந்தமாக, தொடர்ச்சியான, ஆக்கபூர்வமான உரையாடலுக்கான ஒரு சட்டகத்தை வழங்குமென்று அது நம்புகின்றது. ஆலோசனைக் குழாம் செய்திருக்கும் விதந்துரைப்புகளை நாம் வரவேற்பதோடு, அவை நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுமென்றும் நம்புகின்றோம்.

மிகவும் முக்கியமான நீண்ட கால இனத்துவ, தேசியவாத முரண்பாட்டுக்கான மூலகாரணங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில், கடந்த காலத்தின் பரந்த பாங்குகளை நேர்மையாகத் தேடியறிவதை அனுமதிக்கும் வகைப்பொறுப்புக்கு உகந்த சூழலொன்று தற்போது இல்லையென்பதையும் ஆலோசனைக் குழாம் அவதானித்துள்ளது. மனித உரிமைகள் மதிக்கப்படும், வெற்றிவாதத்திலிருந்து அடிப்படையான முறையில் விலகி, இலங்கையின் இனத்துவ பன்மைத்தன்மை, தேசத்தின் எதிர்காலத்துக்காகத் தமிழ் மக்களை ஓர் அடித்தளமாக ஏற்றுக்கொள்வது உள்ளடங்கலாக, தன் சகல மக்களுக்கும், பூரணமான, உள்ளடக்கத்துடன்கூடிய குடியுரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் வகையிலான ஓர் அரசியல் தீர்வுக்கான ஓர் உண்மையான அர்ப்பணிப்புணர்வுடன்கூடிய ஒரு திறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவது நோக்கிய காத்திரமான படிகள் இதற்கு அவசியப்படும்.

தனது பங்குக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இலங்கையின் இனத்துவப்பன்மைத் தன்மையை அங்கீகரிக்கும், மற்றும் அதன் சகல மக்களினதும் பூரண, உள்ளடங்கலான குடியுரிமையை அங்கீகரிக்கும், தமிழ் மக்களை நாட்டில் நிரந்தரமான சமாதானம் மற்றும் ஸ்திரநிலைக்கான அடித்தளமாக ஏற்றுக்கொள்வதை உள்ளடக்கும் ஓர் உண்மையான அரசியல் தீர்வை ஈட்டிக்கொள்வதற்கு எப்பொழதுமே அர்ப்பணிப்புணர்வைக்கொண்டு வந்திருப்பதோடு, தொடர்ந்தும் அத்தகைய அர்ப்பணிப்புணர்வைக் காண்பிக்கின்றது. ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாமென்றும், இலங்கையின் சகல மக்களும் உண்மையான ஜனநாயகம், சமத்துவம் மற்றும் நீதியின் பயன்களை அனுபவிக்கக்கூடிய வகையில் ஓர் ஆக்கபூர்வமான செயல்முறையில் ஈடுபடுமாறும் இலங்கை அரசாங்கத்தை வேண்டிக்கொள்கின்றோம்.

ஆர். சம்பந்தன்,
நாடாளுமன்றக்குழுத் தலைவர்,
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.

தகவல் தமிழ் மிரர்

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 19, 2011 இல் 9:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: