புத்தளம் நகர சபை மேலதிக திட்டங்களுடன்
புத்தளம் நகர சபையினை புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள முன்னால் பிரதியமைச்சர் கே.அப்துல் பாயிஸ் தலைமையிலான நகரசபை, புத்தள நகர மக்களின் நலன் கருதி பல திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக புத்தளம் நகரசபை உறுப்பினர் முஜாஹிதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இவர் தெரிவித்துள்ள கருத்தில் புத்தளம் நகரசபை அதன் வழமையான செயல்பாடுகளுக்கு அப்பால் புத்தளம் நகர பகுதியில் வாழும் முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்களின் உரிமைகளை காக்கவும், புத்தளத்தில் பொது நிறுவனங்கள், அரசியல் நிறுவங்கள், இஸ்லாமிய நிறுவங்கள் ஆகியவற்றின் முறைகேடான செயல்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதுடன், நகரின் கல்வி, பொருளாதார அபிவிருத்தி , பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் நடவடிக்ளைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது புத்தளத்தின் பெயரை பயன்படுத்தி தமது நலன்களைகாக்க செயல்பட்டு வரும் அரசியல்வாதிகள் தொடர்பிலும் , புத்தளத்தின் கடத்தப்பட்டுள்ள ராசிக் தொடர்பிலும் நடவடிக்கைகளை எடுப்பதுடன் புத்தளம் நகர மக்களுக்கு சொந்தமான் ‘குவைத் ஹொஸ்பிடல்’ பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டு பல கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் முடக்கப்பட்டுள்ளது இந்த நகர மக்களின் சொத்து முறையாக பராமரிக்கப் படவில்லை இது ஆரம்பிக்கப்படும் போது பொது பிரமுகர்களின் ஆலோசனை பெறப்படவில்லை.
தற்போது இது மூடப்பட்டுள்ளது ….. இது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம் , மேலும் புத்தளத்தில் வெளிமாவட்ட IDP இடம்பெயர்ந்தோரினால் புத்தளம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் சரியான தரவுகள் இதுவரை இல்லை இது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும்
புத்தளம் மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஊடகங்களில் அரசியல் சக்திகளின் முயற்சியால் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக காட்டப்படுகின்றது நாம் எடுக்கபோகும் நடவடிக்கை தொடர்பாக இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கு தெளிவு படுத்தவுள்ளோம் அவர்களையும் இனைத்துகொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார் என்று எமது lankamuslim.org தேசிய செய்தியாளார் குழு தெரிவிக்கின்றது
புத்தளம் நகர சபையினை நலன் காக்கும் நல்லாட்சி மன்றமாக மாற்றுவதற்கு வேட்பாளர்களும்,வாக்காளர்களும் ஆற்ற பணிகளும்,பொருப்புக்களும் தொடர்பாக புத்தளம் ஜமாத்தே இஸ்லாமியின் சமூக விவகார பிரிவு புத்தளம் போல்ஸ் வீதி மைதானத்தில் விழிப்புணா்வு கூட்டமொன்றை நடத்தி இருந்தமை குறிபிடத்தக்கது
புத்தளம் அன்றிலிருந்து இன்று வரை வணிகத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் ஏனைய தொடர்பாடல்களுக்கான ஒரு முக்கிய கேந்திர ஸ்தானமாக இருந்தாலும், பொருத்தமற்ற தலைமைகளாலும், ஊழல்கள் நிறைந்த பல்வேறு சமூகப் பணி நிறுவனங்களாலும் மிகவும் பிற்போக்கடைந்து காணப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து ஏழைகள் அனாதைகளுக்காக வருகின்ற நிவாரணங்களை பொறுப்புதாரிகள் தங்கள் வயிறு வளர்ப்பதற்காக அபகரிக்கின்ற நிகழ்ச்சிகள் புத்தளம் மக்களுக்கு பழகிப் போன ஒன்றாகிவிட்டது. அனுபவம் நிறைந்த தலைவர் கே.ஏ.பாயிஸ் அவர்கள் நகர சபையின் சட்ட எல்லைகளுக்கும் அப்பால் சென்று முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்பது பலரினதும் நம்பிக்கையாகும்.
இப்ராஹீம் நிஹ்ரீர்
ஏப்ரல் 9, 2011 at 5:08 பிப
வெறுமனே கிரவல் ரோட்டுகளையும் தெரு விளக்குகளையும் வைத்து அரசியல் நடத்திய காலம் புத்தளத்தில் மலை ஏறி விட்டது. அதன் ஒரு குறியீடாக உறுப்பினர் முஜாஹிதுல்லா அவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. மாஷா அல்லாஹ்! புத்தளம் பிரதேசத்தில் வெளியாரின் பலப்பிரயோகம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது ஒன்றும் புதுமை அல்ல. அதற்கு காரணம் கண்மூடித் தனமாக யாரையும் எதையம் செய்வதற்கு அனுமதிக்கும் புத்தளம் மக்களுடைய மனோபாவம்தான்! மனோபாவ மாற்றத்தை இஸ்லாமிய வழியில் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பது தான் இஸ்லாமிய இயக்கங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை விடுத்து போக முடியாத ஊருக்கு வழி காட்டி ஊரை குழப்புவது அல்ல.
Mohamed Razmi
ஏப்ரல் 10, 2011 at 1:53 பிப
புத்தளம் கடந்த சில வருடங்களாக அபிவிருத்தி நோக்கி செல்கின்றது புதிதாக செய்கின்றோம் என்று சொல்லி புத்தளத்தை வன்முறையின் பக்கம் கொண்டு போகாம இருந்தா சந்தோசம்தான்
Mohamed
ஏப்ரல் 10, 2011 at 10:15 பிப
…. முஜாகித்.. media la போட்டோ வந்தா பெரிய ஆள்தான்!!!! செயிங்க பெரிய பள்ளிக்கு கட்டுப்பட்டு செய்ங்க பெரிய பள்ளியும், உலமாக்களும் இருகின்றாங்க அவங்கதான் புத்தளம் முஸ்லிம்களும் தலைவர்கள்
puthalathaan
ஏப்ரல் 10, 2011 at 10:50 பிப
அஸ்ஸலாமு அலைக்கும்
இணையதள பிரதான ஆசிரியரே!
புத்தளம் மக்களின் பிரதிநிதிகளில் (member of council )ஒருவர் மீது தரக்குறைவான வார்த்தைகளைபயன்படுத்துவது கண்டனத்துக்குரியது (அடே முஜாகித்தி) , அவ்வாறான வர்த்தைகளை அனுமதித்து இருப்பது http://lankamuslim.org எங்களை அவமானபடுத்துவதாக உள்ளது.
இவ்வாறான comment யை தவிர்துகொள்ள்ளும்படி தயவாக வேண்டுகிறோம்.
Rushdi
ஏப்ரல் 11, 2011 at 1:17 பிப
அநியாயத்துக்கு எதிரான எதுவாக இருந்தாலும் அது எமது 9 உறுப்பினர்களால் கேட்கப்படும் , அநியாயக்காரர்கள் யாராக இருந்தாலும் சரியே (அரசியல் வாதியாக இருந்தாலும் சரி கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி பெரிய பள்ளி நிர்வாகியாக இருந்தாலும் சரியே இஸ்லாமிய இயக்கவாதியாக இருந்தாலும் சரியே) நாம் இப்போது புதிய ஆரம்பத்தை புதிய பாதையிலே ஆரம்பித்துள்ளோம். இன்ஷா அல்லா மாற்றத்தை உணரக்கூடிய தருணம் இதுவாகவே இருக்கிறது. புத்தளத்தான் என்று பெயரி போட்டு விட்டு எமது மானத்தை வாங்காதீர்கள் – பெரிய பள்ளியாக இருந்தாலும் சரி மாரியம்மன் கோவிலாக இருந்தாலும் சரி சேர்ச் ஆக இருந்தாலும் சரி எல்ல மார்க்க ஸ்தலங்களும் நகர சபையின் கீழ் தான் இருக்க வேண்டும். மாறாக பெரிய பள்ளிக்கு கீழ் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால் அது வன்முறையை துண்டி விடும். ஆனால் நாம் பெரிய பள்ளியை அழகாக நிர்வாகித்து அதனை மேன்மை படுத்தி வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். அது ஊரின் தலைமையாக மாற வேண்டுமானால் அரசியல் அதிகாரங்கள் அங்கு அமைக்கப்பட வேண்டும். இன்ஷா அல்லா புதிய விடயங்கள் சில மிக விரைவில் உங்களை அடையும். சகோதரர் முஜஹிதுள்ள உடைய இளம் அரசியல் ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள்.
இஸ்லாமிய வழியில் உங்கள் பனி தொட என்றும் எமது துவாக்கள் உங்களுக்காக இருக்கும்
isham mark
ஏப்ரல் 11, 2011 at 9:03 முப
ஹிஸாம் மரைக்கார் உங்கள் comment எல்லாவற்றுக்கும் பொருந்த வேண்டும் , Bar துறக்க அனுமதித்தால் அதையும் அநியாயமாக பார்க்கவேண்டும் நீங்கள் comment அடித்துள்ளது போல் நடக்கவேண்டும் – அநியாயத்துக்கு எதிரான எதுவாக இருந்தாலும் அது எமது 9 உறுப்பினர்களால் கேட்கப்படும்-என்று கூறியுள்ளது போன்று செய்யவேண்டும் விபச்சாரம் விடுதி புத்தளத்தில் இருப்பதற்கு அனுமதிக்க கூடாது , மது கடைகள் துறக்க அனுமதிக்க கூடாது ,
புத்தளம் முஸ்லிம் நகரம் அது தொடர்ந்து பாதுகாக்க படவேண்டும் சம உரிமை பாதுகாப்பு என்று கூறி மது கடைகளையும் , விபச்சார விடுதியையும் முஸ்லிம் நகரில் இயங்க அனுமதிக்க கூடாது , புத்தளம் முஸ்லிம்களின் நகரம் அது பறிபோகாது பாதுகாக் படவேண்டும் உங்களின் ஆட்கள் மேலதிகமாக செய்கின்றோம் என்று கூறி உங்கள் நகர நிர்வாகத்தில் முஸ்லிம்கள் இருப்பதையும் இழந்து விடக்கூடாது
பெரிய பள்ளி ஒரு பொது நகர நிர்வாகக்கு கீழ் வராது , KUWIT HOSPITAL லும் நகர நிர்வாகக்கு கீழ் வராது பெரிய பள்ளி முஸ்லிம்களின் சொத்து , KUWIT HOSPITAL அரச சார்பற்ற நிறுவனத்தின் சொத்து , பெரிய பள்ளி Department of Muslim Religious and Cultural Affairs கீழ் தான் வரும் , புத்தளத்தில் இஸ்லாமிய வாதிகள் நீதியானவர்கள் என்று அனைவரும் அறிந்த விடையம் – புதிய நகர நிர்வாகம் குழப்பங்களை அபிவிருத்தி செய்யாமல் நகரை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்
AKR
ஏப்ரல் 11, 2011 at 10:20 முப
“புத்தளத்தில் இஸ்லாமிய வாதிகள் நீதியானவர்கள் என்று அனைவரும் அறிந்த விடையம்”
இதைப் போன்ற எந்த அடிப்படையும் இல்லாத கருத்துக்கள் தான் ஊழல் செய்பவர்களின், சமூகத்தை ஏய்த்து பிழைக்க நினைப்பவர்களின் மூலதனம். “புத்தளத்து இஸ்லாமிய வாதிகள்” என்பதன் வரைவிலக்கணம் என்ன? அப்படி இருக்கின்றனர் என்று தான் ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டாலும் அவர்கள் என்ன நாலாம் வானத்திலிருந்து வந்தவர்களா? அவர்களும் எல்லாரையும் போன்ற மனிதர்கள் தாம். வேறுபாடு இன்றி எந்த இயக்கம் ஆனாலும் அதன் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், சமூகப் பொறுப்புடனும் அமைய வேண்டும். அமானிதம் பேணுவது என்ற அம்சம் “ஊருக்கு தான் உபதேசம் உனக்கல்ல” என்று ஆகிவிடக் கூடாது. இது தான் புத்தளம் மக்களின் எதிர்பார்ப்பு!
Mohamed Razmi
ஏப்ரல் 14, 2011 at 5:06 பிப
புத்தளத்தில் இஸ்லாமிய வாதிகள் நேர்மையற்றவர்கள் என்று படித்த சிந்திக்க தெரிந்த எவரும் கூற முன்வரமாட்டார்கள் ஆனால் அரசியல் வாதிகள் பற்றி நான் சொல்லவேவேண்டாம் அது எல்லோருக்கும் தெரிந்த கதைதான் .. இஸ்லாமிய நிறுவனங்களை நடத்துபவர்கள் தமது வாழ்கையை சமூக சேவைக்காகவும் இஸ்லாமிய கடமைகளை செய்வதற்கும் தம்மை அர்பணித்தவர்கள் அவர்களை பற்றி யார் யாரோ எல்லாம் பேசுவது ………. போன்றது அவர்கள்இதுவரை செய்யதுள்ள அனைத்து விடயத்துக்கும் உண்மையான கணக்கு அவர்களிடம் உண்டு யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் .. அல்லாஹ் அனைவரையும் பார்த்துகொண்டிருக்கின்றான்
AKR
ஏப்ரல் 15, 2011 at 11:40 முப
வாசகர்களே உங்களின் கருத்துகளை பதிவு செய்ய அனுப்பும்போது கருத்துரிமை என்ற வரம்பிற்கு உட்பட்டதாக அனுப்பவும் கருத்து தெரிவிக்கும் முறைகளுக்கு அமைவாக தரமான கருத்துகள் மட்டும் அனுமதிக்கப்படும் இதுவரை இந்த செய்தி தொடர்பாக தெரிவிக்கப்பட்ட நான்கு கருத்துகள் பதிவு செய்ய பொறுத்த மற்ற நிலையில் இருந்தமையால் எம்மால் நிராகரிக்கப் பட்டுள்ளது –
lankamuslim
ஏப்ரல் 11, 2011 at 4:16 பிப
அன்பின் சகோதரர்களே!
கருத்துக்களை முன்வைக்கும் போது தீர்க்கமான ஆதாரங்களுடன் வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் செயல்களும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது அல்குர்ஆனிய கட்டளை…
(சூரா அல்-ஹ_ஜூராத்: 06வது வசனம்)
“காதால் செவிமடுப்பதையெல்லாம் சொல்லுபவன் பொய்யன்” என்பது நபி மொழியும் கூட…
நாம் நினைக்கின்ற எண்ணங்கள், வெளிப்படுத்தும் சொற்கள், வார்த்தைகள் மற்றும் செய்கின்ற நடத்தைகள் தெளிவான அறிவு, ஆதாரங்களுடன் அமைய வேண்டும்…..அவ்வாறு அமையுமெனில் அவற்றுக்கு நன்மைகளை பெற்றுக் கொள்வோம்…அவ்வாறில்லாமல் எது விதமான அறிவு, ஆதாரமும் இன்றி அல்லது அரைகுறை விளக்கங்களுடன் அல்லது சந்தேகங்களுடன் வெளிப்படுத்தப்படும் வார்த்தைகள், நடத்தைகள் எங்கு தப்பினாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து நாளை மறுமையில் அணுவளவு கூட தப்ப முடியாது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்….ஏனெனில் அவ்வேளை எவறும் எமக்கு தோள்கொடுக்க முன்வரமாட்டார்கள்….வேண்டுமெனில் எங்களையும் நரகத்திற்குள் தள்ளிவிட்டு, தாம் மட்டும் தப்பித்துக் கொள்ள எங்களோடு இருந்து, எங்களுக்கு சாமரம் வீசும் மனிதர்கள் வழிதேடுவார்களே தவிர வேறொன்றுமில்லை….
நாம் சமூகத்தின் மத்தியில் வெளிப்படுத்தும் கருத்துக்களால், செயற்பாடுகளால் எம்மை அறிவும் பண்பும் உள்ளவர்களாக அடையாளப்படுத்த வேண்டுமே தவிர அடிக்கடி நாமே எம்மை அறிவீனர்களாகவும் பண்பாடற்றவர்களாகவும் அடையாளப்படுத்துவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல சகோதரர்களே!
புத்தளம் வாழ் மனிதர்கள் அறிவும் பண்பாடும் ஆற்றலும் தைரியமும் உள்ள சமூகத்தவர்கள், தங்களது அறிவையும் ஆற்றலையும் தைரியத்தையும் இயலுமையையும் செயற்திறனையும் நல்வழிக்காக நன்மையான வழிமுறையின் ஊடாகத்தான் பயன்படுத்துவார்கள் என்றுதான் அடையாளப்படுத்தப்பட வேண்டும்…அதுதான் எம் புத்தளம் வாழ் மக்களின் மானத்துக்கு மரியாதையைப் பெற்றுத் தரும்..அதை விடுத்து, (எமது நோக்கம் எவ்வளவுதான் சரியானதாக இருந்தாலும்) எமது அறிவும் பண்பாடும் ஆற்றலும் செயற்திறனும் மோசமான வழிமுறைகளின் ஊடாக பயன்படுத்தப்படும் எனில் இவ்வுலகிலும் அசிங்கங்களையே எம்மீது பூசிக் கொள்வோம் அதே வேளை மிகப்பயங்கரமான நிலைமையை நாளை மறுமையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்……..ஏனெனில் நிச்சயமாக எம்மை கப்றில் புதைத்த உடன் எம்முடன் இருந்த எவரும் நிற்க மாட்டார்கள், விலகிச் சென்று விடுவார்கள்…அப்போது அப்போது அக்கப்றில் எமது நன்மையும் தீமையும் மட்டும்தான் எம்மை கவனித்துக் கொள்ளும் சகோதரர்களே!…இது எனக்கும் உங்களுக்கும் ஒரு ஞாபகமூட்டல்…
Shan
ஏப்ரல் 12, 2011 at 8:03 முப
Jazaka……. சகோதரரே ஞாபகமூட்டவேண்டியது
அரசியல் தலைமைகளின் பொறுப்புக்கள், கடமைகள்.
இஸ்லாமிய தலைமைகளின் பொறுப்புக்கள், கடமைகள்.
உங்களினதும் எங்களினதும் பொறுப்புக்கள், கடமைகள்.
செய்த, செய்கின்ற தவறுகளுக்கும், அமானித துஷ்பிரயோகத்துக்கும். அரசியல் விதிகளில் நியாயம் கூறினாலும் சரி, ஆன்மீக வழியில் நியாயம் கூறினாலும் சரி. மிகப்பயங்கரமான நிலைமையை நாளை மறுமையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்…..
Ahmed Nafeel
ஏப்ரல் 13, 2011 at 10:23 முப
@ AKR- puththalam muslimkalukku mattum uriyathalla…
isham
ஏப்ரல் 12, 2011 at 6:20 பிப
புத்தளம் அனைத்து மக்களுக்கும் சொந்தம் என்பதையும் புத்தளம் முஸ்லிம் நகரம் என்பதையும் போட்டு குழப்பவேண்டாம் புத்தளம் ‘முஸ்லிம் நகரம்’ என்றால் அதற்கு ஒரு அரசியல் அர்த்தம் உண்டு என்பதை கூட விளங்காமல் நீங்கள் எல்லாம் அரசியல் பேசுவது வேதனையாக உள்ளது
AKR
ஏப்ரல் 12, 2011 at 8:22 பிப
புத்தள நகர பகுதி முஸ்லிம்கள் புத்தளம் நகரம் என்று மட்டும் சிந்திக்க கூடாது புத்தள நகர முஸ்லிம்கள் புத்தளத்தின் ஏனைய கிராம பகுதி முஸ்லிம்களையும் இனைத்து செயல்படவேண்டும் கட்பிட்டி சகோதர்கள் எம்மிடம் வாக்கு கேட்டு வந்தால் அவர்கள் புத்தளம் இல்லையே என்று சொல்லி எமது வாக்கால பெருமக்கள் வாக்குகளை வழங்குவதில்லை கட்பிட்டி நகரை புத்தளத்தின் பிரதான நகராக மாற்றும் திட்டம் செயல் படுத்த படும் என்று எமது அரசியல் வாதிகள் கூறிவருகின்றனர் நாளை அல்லாஹ்வின் நாட்டப்படி எல்லாம் தலை கீழாக மாறிவிடும் அல்லாஹ்வை பயந்து கொள்வோம் , கடந்த சில காலமாக நாம் வெளி மாவட்டத்தில் இருந்த வந்தவர்கள் காணிகளை வாங்குகின்றார்கள் எமது தோட்டம் விவசாயம் படிபடியாக அவர்கள் வாங்கி வருகின்றார்கள் என்று பேசினோம் ஆனால் இன்று கட்பிட்டி பகுதியில் காணிகள் முழுமையாக பறிபோகின்றது மிக மிக வேகமாக பறிபோகின்றது அதை பற்றி நாம் எவரும் பேசுவதில்லை ஏன் ? விடை எமக்கு தெரியும் !!! முதில் அல்லாஹ்வை பயந்து கொள்வோம் முஸ்லிம் சகோதரத்துவம் என்பது மிகவும் முக்கியமானது அல்லாஹ்வும் அவனின் தூதரும் போதித்த அடிப்படிகளை மறந்து பேசவும் கூடாது செய்யவும் கூடாது அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்
Rizwan
ஏப்ரல் 13, 2011 at 11:22 முப