Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 31st, 2011

உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் 5ஆம் திகதி பாராளுமன்றம் வருகின்றது

leave a comment »

உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்

மக்களுக்கு மேலும்பல நன்மைகளை செய்துகொடுக்கும் வகையிலும், ஏற்கனவே காணப்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர் வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் இந்தத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படும்.ஏற்கனவே இருந்த விருப்பு வாக்கு முறைமை சீர்ப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக தொகுதி முறைமை கொண்டு வரப்படவுள்ளது. இதன் ஊடாக விருப்பு வாக்குகளினால் ஏற்படுகின்ற மோதல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 31, 2011 at 10:38 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

22 உள்ளூராட்சி சபைகளின் காலம் ஆறு மாதத்தால் நீடிப்பு

leave a comment »

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது.

2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2011 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது