Lankamuslim.org

One World One Ummah

மேற்குலகின் லிபியா மீதான தாக்குதல் தொடர்பில் இலங்கையில் எதிரொலி

with one comment

லிபியா மீதான மேற்கு நாடுகளின் மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை யொன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப் படவுள்ளது என்று செய்திகள் தெரிவிகின்றன பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்படி பிரேரணையை கொண்டுவரவுள்ளார் இதற்கான அங்கீகாரத்தை ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்றக் குழு வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.

அதேவேளை நேற்று இலங்கை வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் லிபியாவின் மக்களின் பாதுகாப்பு இலங்கை அக்கரை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமாதன வழிமுறைகளின் ஊடாக லிபியா பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவது முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது விரிவாக

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ள செய்தி ஒன்றில் சில மேற்கு நாடுகள் ஒன்றிணைந்து லிபியா மீது மிலேச்சத்தனமாக குண்டுகள் பொழிவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்  லிபியா மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தையே விரும்பினரே தவிர யுத்தத்தை விரும்பவில்லை. ஜ.நா.சபை தான் இந்த யுத்தத்தை முடிவெடுத்தாலும் கூட இன்னும் பல அங்கத்துவ நாடுகள் அதனை விரும்பவில்லை  இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் யுத்தமொன்றை மேற்கொண்டிருப்பது மனித உரிமைகள் மீறிய செயலாகும் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

ஆனாலும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அறிக்கை என்று தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக முழுமையான தகவலை பெற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாயின் செயலாளர் தாசிம் மௌலவியை lankamuslim.orgதொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரின் பதில் எமக்கு கிடைக்கவில்லை.

லிபியா மீது மேற்குலக வல்லரசுகள் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு விரோதமாக ‘ஜும்ஆ’ப் பிரசங்கங்களில் வலியுறுத்தி அந்த அப்பாவி மக்களுக்காகப் பிரார்த்திக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகின் சகல நீதி நியாயங்களுக்கும் மாறாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் லிபியா மீது மேற்கொள்ளும் குண்டுத் தாக்குதல்கள் லிபிய அப்பாவி மக்களைப் பலிகொண்டுள்ளன. ஸியோனிச, யூத வாதிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயல்களுக்கு முழு இஸ்லாமிய உலகும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாச் சபை உட்பட சகல முஸ்லிம் இயக்கங்களும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் இந்தக் கொடிய தாக்குதல்களுக்கு முழுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும். லிபிய மக்களின் பாதுகாப்புக்காக அல்லாஹ்விடம் ‘துஆ’ இறைஞ்சுதல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

இடது சாரி சோஷலிச சிந்தனை கொண்ட முஹம்மர் கடாபி அவரின் பெண் பாதுகாவளர்களுடன்

Advertisements

Written by lankamuslim

மார்ச் 23, 2011 இல் 11:53 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் இந்த உலகத்தினை மீண்டும் மறுபங்கீடு செய்யும் புதிய அணுகுமுறையாகவே லிபியா மீது தாக்குதல் தொடங்கியிருக்கிறார்கள் . ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும்.

    Nalliah Thayabharan

    ஏப்ரல் 12, 2011 at 10:35 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: