Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 22nd, 2011

சீனாவில் நடைபெறவிருக்கும் குன்மிங் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் இலங்கை பங்கேற்பு

leave a comment »

இன்று (22) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்த சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான சீனக் கழகத்தின் உப தலைவர் ஹூஆங்ஷி சீனாவில் யூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் குனமிங் குன்மிங் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் இலங்கையையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்ததுடன் இலங்கைக்கு பொருட்காட்சி மைதானத்தில் கட்டணமேதுமின்றி 100 காட்சி கூடங்களையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன் இலங்கையிலிருந்து குன்மிங் சர்வதேசவர்த்தகப் பொருட்காட்சிக்கு கொண்டுவரப்படும் பொருட்களை சுங்கத்திலிருந்து அகற்றுவதற்கு விசேட நடைமுறைகள் பின்பற்றப்படுமெனவும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு விசேட வசதிகள் வழங்கப்படும் எனவும் எடுத்துரைத்தார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 22, 2011 at 8:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வட்டி அற்ற ஈட்டு முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த அமைச்சர் ஹகீம் முயற்சி !

with 7 comments

இலங்கையில் இஸ்லாமிய பொருளாதார மாதிரிகள் சில இலங்கையில் தனியார் வங்கி துறை மற்றும் அரச வங்கி துறை ஆகியவற்றில்   பின்பற்ற பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் அடகு வைத்தல் என்பது முற்றிலும் வட்டியை அடித்தளமாக கொண்டுள்ள பொருளாதார முறை தான் இலங்கை முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டு  இருக்கிறது.

இந்த வட்டியை கொண்டுள்ள அடகு முறைக்கு வறுமை காரணமாகவும் இன்னும் பல காரணங்களினாலும் முஸ்லிம்களும் சிக்குண்டுள்ளனர் இதை தவிர்க்கும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹகீம் வட்டி இல்லாத இஸ்லாமிய அடகு முறையை இலங்கையில் அறிமுகபடுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 22, 2011 at 5:27 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது