Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 20th, 2011

110 ஏவுகணைகள் 20 இலக்குகள் நோக்கி ஏவப்பட்டுள்ளது !

with one comment

OurUmmah: லிபியாவில் கடாபி படைகளுக்கு எதிரான விமான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன பிரான்ஸ் விமானபடை கடாபியின் பல இராணுவ டாங்கிகளை தாக்கி அழித்துள்ளதாகவும், கூட்டு விமான படை 110 ஏவுகணைகளை –  Tomahawk cruise missiles- எவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது  ஐநா பாதுகாப்பு சபை நேற்று லிபியாவின் மக்களை பாதுகாக்க தேவையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது இந்த சட்ட அனுமதி மூலம் லிபியாவின் விமானப்டை மற்றும் ஏனைய படைகள் மீதும் மற்ற நாடுகள் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று காலை தொடக்கம் மேற்கு நாடுகளின் தலைவர்கள் கூடி கடாபி படை மீதான தாக்குதல் முறை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர் இதில் மேற்கு நாடுகளின் அதிபர்கள் முக்கிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சவூதி, தூபாய் ஆகிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள்  விரிவாக

Advertisements

Written by lankamuslim

மார்ச் 20, 2011 at 1:33 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“மூலோபாயத்தின் மையத்திட்டம் இஸ்ரேல பிராந்திய மேலாதிக்க சக்தியாக நிலைபெற மத்திய கிழக்கின் வரைபடத்தினை மீள் வரைவதும் அராபிய தேசங்களை உடைவுறச் செய்வதுமாகும் “ ( உலக சியோனிஸ அமைப்பின் வெளியீடான கேவிநிம் (Kivunim ) எனும் இதழில் 1982 ல் ஓடேட் யிநோன் (Oded Yinon) எனும் யூதரால் சியோனிஷ்டுகளின் மத்திய கிழக்குக்கான திட்டம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்ட கொள்கை திட்டத்திலிருந்து ).

பான் ஆம் (Pan –Am Flight 103) விமானம் ஸ்காட்லாந்தின் லோச்கேர்பீ மீது குண்டு வெடிப்பில் வீழ்ந்தாலும் (21/12/1988) லிபியாமீது புலனாய்வு தகவல்கள் குற்றம் சாட்டிய போது கடாபி அதனை மறுத்ததுடன் அதில் சந்தக நபர்கள் இருவரையும் விசாரணைக்காக கையளிக்கவும் மறுத்தார். எனினும். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை லிபியா மீது பிரயோகித்தும் கடாபி நீண்ட காலம் தனது மறுப்பிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் உறுதியாகவிருந்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 20, 2011 at 12:05 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் பிரதேச தேர்தல் வெற்றி தொடர்பான மூன்று அவதானங்கள் !!

with 10 comments

M.ஷாமில் முஹம்மட்

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் மூன்று வகையான வெற்றி நிலைகள் அவதானிக்கப் படக் கூடியதாகவுள்ளது சில சபைகளில் வெற்றி பெற்றுள்ள கட்சிகள் அதி கூடிய பெரும்பான்மையை பெற்றுகொண்டு வெற்றி பெற்றுள்ளன அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சி எதிர் கட்சிகளுக்கு பெரிதாக வாக்குகளை விட்டு வைக்காமல் தட்டி சென்றுள்ளன.

இன்னும் சில சபைகளில் வெற்றி பெற்ற கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளை விடவும் எதிர் தரப்பு கட்சிகளின் வாக்குகளை கூட்டினால் எதிர் கட்சிகளின் மொத்த வாக்குகள் வெற்றி பெற்ற கட்சியின் மொத்த வாக்குகளை விடவும் அதிகமாக உள்ளதை காணமுடியும் இங்கு பெரும் பான்மை வாக்காளர்கள் ஒரு புறம் இருக்க வேறு ஒரு கட்சி கூடிய வாக்குகளை பெற்று கொண்டுள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 20, 2011 at 12:42 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது