Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம்கள் அரபு மொழியை தமது பிரதான மொழியாக எடுத்துக் கொள்ளவேண்டும்

with 10 comments

கடந்த நான்காம் திகதி ஆங்கிய பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை ஒன்றை எழுதியுள்ள முஸ்லிம் எழுத்தாளரும், மனிதவுரிகளுக்கான  மற்றும் முஸ்லிம் சமூக செயல்பாட்டாளருமான   எம்.ஐ.எம்.மொஹிதீன் இலங்கை முஸ்லிம்கள் அரபி மொழியை கற்றுகொண்டு தமது பிரதான மொழியாகவும் வீடுகளிலும் பேசும் மொழியாக மாற்றிக்கொள்ளவேண்டும்  என்று தெரிவித்துள்ளார் இவரின் இந்த கட்டுரை ஊடங்களின் கவனத்தை பெற்றுள்ளது இவர் எழுதிய ஆங்கில கட்டுரை எமது ஆங்கில இணையதளமான lankamuslim.com இல் கடந்த 4 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது

அந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விடயங்களை இங்கு தருகின்றோம் – அரபு மொழியினுடனான தொடர்பு எதிர்கால முஸ்லிம்களின் நலனுக்கு இன்றியமையாதது பெரும்பாலும் முஸ்லிம் தமிழ் மொழியை உபயோகித்து வருகின்றனர் இன்று ஆங்கிலத்தையும், சிங்களத்தை, தமிழையும் தமது வீடுகளில் பேசும் மொழியாக கொண்டவர்கள் உருவாகியுள்ளனர்   விரிவாக  இன்னும் மலேயர் தமது வீடுகளில் மலே மொழியையும் பொராஸ் குஜராத்டி மொழியையும் , மேமன் பிரிவினர் கொச்சி அல்லது உருது மொழியை பேசுகின்றனர்.

இவைகளை உடனடியான தாகத்தை தராவிட்டாலும் இன்னும் 25 வருடங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் , சிங்களம் பேசும் முஸ்லிம்கள் , ஆங்கிலம் பேசும் முஸ்லிம்கள் என்று முஸ்லிம் சமுகத்தை பிரித்து நிற்கும் இது மொழி என்ற அடிப்டையில் மட்டும் நில்லாது கலாச்சாரம் என்று மேலும் சென்று கலாச்சார பிரிவாகவும் உருபெறும் முஸ்லிம்கள் மத்தியில் மொழிகள் அதன் காலாச்சார தாகங்களை வெளிப்படுத்தி நிற்கும் அனைவரும் அறிந்தது போன்று மொழி என்பது கலாச்சார தத்துவங்களை சுமக்கும் வாகனம் சிங்கள மொழி பெளத்த கலாச்சாரத்தையும், தமிழ் மொழி ஹிந்து கலாச்சாரத்தையும், ஆங்கிலம் கிருஸ்தவ கலாச்சாரத்தையும் அதேபோன்று அரபு இஸ்லாமிய கலாச்சாரத்தையும் சுமந்துள்ளது எதிர்காலத்தில் முஸ்லிம்கள் மூன்று பிரிவாக பிளவு படுவதை தடுக்க குர்ஆனிய கலாச்சார மொழியான அரபு மொழியை எடுத்து கொள்ளவேண்டும் அவ்வாறு நான் கூறுவதை குறும்பார்வை கொண்டவர்கள் சிலர் கடினமானதாக கருதலாம் ஆனால் அறிவியல் ஆய்வுகளின் ஊடாக அது கடினமானது இல்லை என்பதை காணமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இலங்கையில் அரபு மொழி 10 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு முஸ்லிம் சமூகத்தினுள் ஆழ ஊடுருவி பல மட்டங்களிலும் தாக்கம் செலுத்தி வருகின்றது என்பதுடன் அல் குர்ஆனை வாசித்து விளங்கிக்கொள்ளும் கணிசமான தொகை முஸ்லிம்கள் ஏற்கனவே உருவாகியுள்ளனர் என்பதும் சுட்டிகாட்டதக்கது

ஆங்கில கட்டுரையை முழுமையாக பார்க்க

Advertisements

Written by lankamuslim

மார்ச் 8, 2011 இல் 3:36 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

10 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. thats very nice article inshaallah i will dray speak arabic .

  mohamed azath

  மார்ச் 8, 2011 at 10:36 பிப

 2. Its not sence….Language not a problem for Muslim/Islam….But learning Arabic is important to Muslims because Quran and Other Basic Books are in Arabic.

  But no need to address “We are arabic speaking Muslim” in such country Sri Lanka. It will be an another partician.

  Arabic speaking Arabs has different cultures, by speaking Arabic, I couldn’t say we are one culture.

  Wassalam
  Mohammed Rizvi Uvais

  Mohammed Rizvi Uvais

  மார்ச் 9, 2011 at 11:07 முப

 3. EXCELLENT,I EXPECTED THIS TOPIC SHOULD BE SPEAK BY A SUITABLE PERSON.ITS FULL FILLED BY MR,MOHIDEEN.I READ THIS ARTICLE IN SOME OTHER SITES.THIS” ARABIC LANGUAGE “ISSUE FIRE UP VERY SOONER BY COMMUNAL PERSONS OF THIS COUNTRY.BEFORE THAT MR MOHIDEEN EXPLAINED THE REALITY.BUT ITS UNFORTUNATE TO READ COMMENTS OF SOME USELESS MUSLIMS IN ANOTHER SITE MADE ME SAD.- the comment from Lankamuslim.com

  DR.MARZOOK

  மார்ச் 9, 2011 at 12:03 பிப

 4. Whatever said and done Arabic language already put its roots in deep in Sri lanka years a go InshaAllah it would give a positive impact on Muslim oneness – and their iz a long work to adapting Arabic as home one but can not say it is impossible, if Muslim community more and institutionalized on Islamic principle it would be a natural birth , if log into Facebook there are many sri lankan who chat in Arabic it is not wonder world, it participial in future InshaAllah

  Hakeem

  மார்ச் 9, 2011 at 12:19 பிப

 5. இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. வெவ்வேறு கலாச்சாரங்களில், மொழிகளில் இறைவனே நம்மைப் படைத்தான் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தாய் மொழி, தனிப்பட்ட கலாச்சாரம் என்று உண்டு.

  நாம் இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றோம்.இது, இஸ்லாம் மொழ…ி சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த ஒரு மதம் அல்ல என்பதற்கு நல்ல சான்று.

  ——————————————————————————
  திருக் – குர்ஆன் [30 :22]

  ۝ “வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன”

  ——————————————————————————
  திருக் – குர்ஆன் [14 :4]

  ۝ “எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்”

  ——————————————————————————

  உலகுக்கு வழி காட்ட வந்த இறைவனின் உத்தம தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் இறுதிப் பெரும் பிரசங்கத்தின் ஒரு பகுதி.

  ——————————————————————————

  “மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே”

  ——————————————————————————

  எந்த ஒரு மொழியால் ஒற்றுமை என்றோ, வேற்றுமை என்றோ இல்லை. அரபு மொழி பேசும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பிரிவினை உள்ளது, இன்னும் இரு வேறு மொழி பேசும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஒரே கொள்கையில் உள்ள நிலையும் உண்டு. From FB

  Shafie Salam

  மார்ச் 9, 2011 at 12:44 பிப

 6. சகோதரரே, நீங்கள் திரு. முஹியதீன் அவர்களது கருத்தை கொஞ்சம் விரிந்த கண்ணோட்டத்துடன் பார்த்திருப்பீர்கள் என்றால் அவர் கூறவரும் விடயத்திலுள்ள நியாயங்களை உணரக்கூடியதாக இருக்கும்.
  நிச்சயமாக இஸ்லாம் ஒரு மொழிக்கோ ஒரு காலாச்சாரத்துக்கோ மாத்திரம் மட்ட…ுப்படுத்தப்பட்டதல்ல என்பது சர்வதேச உண்மை.

  இங்கு அவர் அந்தக் கருத்திற்கு மாற்றுக்கருத்து கூறவில்லை. மாறாக இலங்கையின் மாறிவரும் கல்வி, பொருளாதார, சமூக சூழல் காரணமாக முஸ்லிம்களில் கணிசமான பகுதியினர் சிங்கள மொழிமூல கல்வியை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி படிப்பதற்கான புத்தகங்களோ, சிங்கள மொழியில் மார்க்க விடயங்களைக் கற்கக்கூடிய நிறுவன ஒழுங்குகளோ மிக அறிதாகவே காணப்படுகின்றது. மேலும் சிங்கள மொழியில் கற்கும் பல முஸ்லிம்கள் போதிய இஸ்லாம் பாட ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பௌத்த சமயத்தைத் தமது பாடமாக எடுத்து பரீட்சைக்குத் தோற்றுகின்ற அவலநிலை காணப்படுகிறது.

  இவ்வாறு சிங்களமொழியில் கற்கும் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரேயொரு நாள் மாத்திரம்தான் மார்க்கத்தைப் பற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அது ஜும்ஆவில் ஆகும். அங்கும் பெரும்பாலும் இலக்கியத் தமிழிலிலேயே குத்பாக்கள் செய்யப்படுகின்றன. அவை தமிழ் தெரிந்தவர்களாலேயே விளங்கிக்கொள்வது சற்று கடினமாக இருக்க, அந்த சிங்கள மொழி மூலம் கற்றவர்களுக்கோ 20% வீதமான கருத்தையே விளங்கக்கூடியதாக இருக்கும்.

  மார்க்க விடயங்களையே அறைகுறையாக விளங்குவார்களானால் எமது சமூகப் பிரச்சனைகள், கருத்தாடல்களைப் புரிந்துகொள்ள நிச்சயம் அவர்களுக்கு முடியாமல் போகும். இது அவர்களுக்கும் தமிழ்பேசும் எமக்குமிடையில் சரியான புரிதலை ஏற்படுத்துவதில் சிக்கலைத் தோற்றுவிக்கும். சிலவேளை இக் க்ருத்தியல் இடைவெளி கூர்மைப்படக்கூடிய ஒரு சூழ்நிலையும் தோற்றுவிக்கப்படலாம்.

  இந்நிலை இப்படியே நீடித்தால் காலப்போக்கில் ஒரே நாட்டிற்குள் ஒரு சிறுபான்மை இனமாக வாழும் நாம் இன்னும் சிறு குழுக்களாக மொழிரீதியில் தூரமாகும் ஒரு நிலை ஏற்படலாம். ஏனெனில் மக்களை இணைக்கும் பாலமாக இருப்பது மொழியாகும்.

  இதற்குச் சிறந்த உதாரணம் இந்திய முஸ்லிம்கள்.

  17 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால் அவர்களது மொழி வித்தியாசம் காரணமாக அவர்களது அரசியல் சமூக பிரச்சனைகளை மாநில எல்லைகளைக் கடந்து வெளியே எடுத்துச்செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு பொது மொழியிருந்தால் அதன்மூலம் மக்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்துவது இலகுவாக இருக்கும். from FB

  Imran Hussain

  மார்ச் 9, 2011 at 12:45 பிப

 7. உங்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் இலங்கை முஸ்லிம்களது அரசியல் சமூகவியல் பிரச்சனைகள் பற்றியும் எந்தவித அறிவும் இல்லையென்பது உங்களது நுனிப்புல் கருத்துக்களில் இருந்தே விளங்குகிறது.
  மொஹிதீன் அவர்கள் உங்களைப் போன்ற ஒருவரல்ல சிறுபிள்ளைத்தன…மான கருத்துக்களைக் கூறுவதற்கு…

  அவர் இலங்கை முஸ்லிம்களது விவகாரங்கள் பற்றி ஆழமான அறிவுடைய ஒருவர். புலிகளுடனான 2002 – 2004 ஆண்டு பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்கள் தரப்பில் ஆலோசகராகக் கலந்துகொண்டவர்.

  இலங்கை முஸ்லிம்களது இந்த மொழிப்பிரச்சனை பற்றி ஆய்வாளர் ரவூப் ஸெய்ன் அவர்களால் எழுதப்பட்டுள்ள “இலங்கை முஸ்லிம் கல்வி” என்ற புத்தகத்தை வாசித்தால் உங்களுக்கு ஓரளவுக்காவது பிரச்சனை என்னவென்பது புரியும்.from FB

  Gazan Newsline

  மார்ச் 9, 2011 at 12:46 பிப

 8. Nothing is impossible. Yes, we should show our own identity to the rest of the communities in SL by this. Further,since arabic is the language of holy quran, this will help enhance the islamic knowledge among us as we will be able to understand quran better.This will prevent the non islamic cultures mixing with islamic cultures which mix is mainly due to the language,we speak as language is a medium of communication.May his dream come true insha allah and let’s be positive and work towards this. May Allah help us.

  Musthaq

  மார்ச் 9, 2011 at 6:08 பிப

 9. நண்பர்களே,சகோதர சகோதரிகளே…மொழியை மொழியாக மட்டும் பாருங்கள்…இஸ்லாத்தினை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ளுங்கள். மொழி என்பது அந்த அந்த நாட்டின் சூழ்நிலை பழக்க வழக்கம் , பண்பாட்டினை சார்ந்து உருவானது..அணைத்து மொழியும் இறைவனால் உருவாக…்கப்பட்டதே! நீங்கள் எந்த மொழியை குறை சொன்னாலும் இறைவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். நான் சொல்ல வில்லை புகாரி ஹதீசில் இருக்கிறது. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு சிறப்பினை கொண்டிருக்கிறது அவ்வளவுதான்..முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹ்வசல்லாம் தமிழ் நாட்டில் அல்லாஹ்வினால் தேர்ந்தேடுக்கப்பட்டிருந்தால் அல்குரான் தமிழில் இருந்து இருக்கும் அவ்வளவுதான். ஆங்கிலத்தில் உள்ள குரானை வாசித்து பாருங்கள், அரபியில் நீங்கள் விளங்கமுடியா வார்த்தைகளுக்கு தெளிவாக ஆங்கிலத்தில் இருக்கிறது…அதற்காக அரபியை விட ஆங்கிலம் சிறந்தது என்று அர்த்தமில்லை. பல மொழிகளில் கடன் வாங்கி தொகுதுக்கொண்ட மொழி ஆங்கிலம் எனவே, கூடுதல் விளக்கங்கள் அவ்வளவுதான்….உலகின் எந்த மொழியும், சிறந்ததில்லை, எந்த மொழியும் தாழ்ந்ததில்லை…புரிந்து கொள்ளும் தன்மையில்தான் இருக்கிறது மொழியின் சிறப்பு. சிலபேருக்கு, எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும், புரிந்து கொள்ளதெரியாது..சிலருக்கு,கோடு போட்டால் கூட ரோடு போடுவார்கள்..ஆக அவரது அறிவில் மூளையில் இருக்கிறது புரியும் தன்மை..மொழியில் இல்லை. அரபி மொழியை தாய் மொழியாகக் கொண்ட சவுதியில், இன்னும் நிறைய பேருக்கு குரான் சரியாக ஓத தெரியாது…என்பதுதான் நிதர்சனமான உண்மை…நன்றி எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே!from FB

  Raja Mohamed

  மார்ச் 9, 2011 at 9:48 பிப

 10. அரபு மொழியை தனது தாய் மொழியாக கொண்டவர்களால் அரபு மொழியில் இருக்கும் ஆழ அகலங்களை புரிந்து கொள்ளவது எம்மை போன்ற அரபு அல்லாத மொழியை பேசுபவர்கள் விடவும் பன்மடங்கு அதிகமாகவும் தெளிவாகவும் இலகுவாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள Phd முடிக்க தேவையில்லை.

  இங்கு அரபு மொழியை எமது மொழியாக ஆக்கிகொள்வது பர்ளு என்று யாரும் சொல்லவில்லை..

  அரபு மொழியை எமது மொழியாக கொள்வதால் பல பிளவுகளில் இருந்து முஸ்லிம் சமுகத்தை பாதுகாக்க முடியும் என்பதுதான் இங்கு கருப்பொருள்…

  மொழியால் எந்த பாதிப்பும் ஏற்படாது நாம் அனைத்து மொழியில் உள்ளவர்களையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றோம் என்று சொல்லும் சில தமிழ் நாடு முஸ்லிம் புத்திமான்களுக்கு கஷ்மீரில் நடப்பது பற்றி கேட்டால் எதுவும் தெரியாது என்பதுடன் அவை பற்றி அக்கறை எதுவம் இன்றி இருகின்றனர் அதேமாதிரி மனிதர்கள் சிலர் கஷ்மீரை விட்டுவிட்டு இலங்கை தமிழர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் ஏன் என்று கேட்டல் ஒரு மொழியாம் நாம் தமிழர்களாம் ஆனால் அவர்களுக்கு இலங்கையில் முஸ்லிம்களுக்கு புலி தமிழர்கள் செய்பவை பற்றி கவலையில்லை அது பற்றி அறிவுவும் இல்லை .

  புலி களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் ஒருகாலும் கஷ்மீர் முஸ்லிம்களுக்காக , இலங்கையின் வடகுகிழக்கு முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தியது கிடையாது இது எதை காட்டுகின்றது நடைமுறையில் மொழி இந்த இஸ்லாமிய புத்திமாகளுக்கு பெரிதாக தெரிகின்றது அதை அவர்களாலேயே புரியமுடியாதும் உள்ளது

  ஆக மொழியின் தாக்கம் அவர்கள் கூறும் உண்மை இஸ்லாமிய நடைமுறைகளை முரியடிகின்றது மொழி என்பது அதன் காலாசாரங்களியும் சுமந்து வருகின்றது என்பதுதான் உண்மை -அரபு கற்பது அதை எமது மொழியாக கொள்ளவது எமக்கு கண்டிப்பாக பலன் தரும்

  Mohamed Ali

  மார்ச் 9, 2011 at 9:49 பிப

 11. Excellent Mr Mohideen ,i was read your pregnencyfull and vissionable article.the language is connecting bridge for hearts and feelings.if we have one language can reach,easily get it one community grade.the Islamic social wiew is strictly instruct the international community.the srilankan muslim have some fears in future..i agree with you..so if we have to geather with world muslim community……..

  muhammath Ranoos

  ஜனவரி 31, 2012 at 1:58 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: