Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 2011

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

leave a comment »

கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.

தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2011 at 9:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நேற்று 9 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர்

leave a comment »

லிபியாவில் பணியாயாற்றும் இலங்கையர்களை அழைத்துவர அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது நேற்று ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 9 பேர் அந்த ஹோட்டலின் உதவியுடனும் இலங்கையை வந்தடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது மேலும் திரிபோலியிலுள்ள 58 இலங்கையர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட் டிருப்பதாகத் தெரிவிக்கபடுகின்றது.

அதேநேரம், திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அண்மித்த பகுதியில் 350ற்கும் அதிகமான இலங்கை யர்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கபடுகின்றது

Written by lankamuslim

பிப்ரவரி 28, 2011 at 9:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நஜுமுதீன் அர்பகான் வபாத்தானார்

leave a comment »

OurUmmah: துருக்கியின் இஸ்லாமிய அரசியல் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் நஜுமுதீன் அர்பகான் வபாத்தாகியுள்ளார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று தனது 85 வயதில் வபாத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவர் ரபாஹ் என்ற இஸ்லாமிய அரசியல் இயக்கம் தோன்ற முக்கிய பங்காற்றியதுடன் துருக்கியின் முதல் இஸ்லமிய சிந்தனை கொண்ட பிரதமராகவும்  பதவி வகித்துள்ளார் விரிவாக

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2011 at 8:23 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வியூகம் வகுக்காத அநுராதபுர முஸ்லிம் அரசியல் !!

leave a comment »

அநுராதபுர முஸ்லிம்களின் அவலநிலை நூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களையும் மஸ்ஜிதுக்களையும் பாடசாலைகளையும் கொண்டுள்ள அனுராத புர மாவட்டத்தில் 42000 வாக்காளர்களும் உள்ளபோதும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியோ அல்லது போதுமான மாகான சபை பிரதிநிதிகளோ இல்லாமை சுட்டிகாட்டப் படுகின்றது.

இங்கு வாழும் முஸ்லிம்கள் போதுமான விழிப்பூட்டல் இன்றி இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது இங்கு முஸ்லிம்கள் மிக குறைந்த அளவில் அரச அதிகாரிகளாக , ஆசிரியர்களாக இருப்பதுடன் பிரதான பதவிகளில் எவரும் இல்லாத நிலையம் கானப்படுவதாகும் சில கிராமங்களில் மத்ரஸாக்கள் இயங்குகின்றபோதும் அங்கு போதுமான ஆசிரியர்கள் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது  இது தொடர்பாக எமது lankamuslim.org அனுராதபுர செய்தியாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2011 at 10:25 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடாபியின் பச்சை நூலும் சிவப்பு எச்சரிக்கையும் !!

leave a comment »

எஸ்.எம்.எம் பஷீர்
“உலகே அண்ணாந்து பார் , உற்றுக்கேள் ,எதிரியின் படை வருகிறது ,எங்களை அழிக்க விழைகிறது,உண்மையுடனும் எனது துப்பாக்கியுடனும் நான் அவனை புறமுதுகிடச் செய்வேன், நான் கொல்லப்படுவேனேயானால், என்னோடு அவனையும் கொல்வேன்:”  (லிபியாவின் தேசிய கீதத்தின் ஒரு பகுதி)

ஒரு உணர்ச்சி கொப்பளிக்கும் போர்க்கால கவிதை வரிகள் போல் தோன்றும் லிபியாவின் தேசிய கீதத்தின் ஒரு பகுதி இது, அடக்குமுறையிலும் இத்தாலிய பாசிச ஆட்சியின் கீழும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ ஆட்சியின் பொருளாதார சுரண்டலுக்கும் ஆளாகிப்போன லிபியாவின் இந்த தேசிய கீதத்தின் வரிகள் உண்மையில் லிபியாவின் சுதந்திர தேசிய கீதமல்ல , மாறாக 1956 ஆம் ஆண்டு சுயெஸ் யுத்தத்தில் எகிப்திய யுத்த படையணியினரின் படை அணிவகுப்பு பாடல்  விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2011 at 9:24 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

அரபு முஸ்லிம் பிராந்திய இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒரு ஆய்வுப் பார்வை !!

leave a comment »

OurUmmah: அரசியல் மற்றும் இஸ்லாமிய துறைகளில் தகமைகளை கொண்ட ஆய்வு துறையில் அனுபவம் கொண்ட அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் யிடம் அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டங்கள் தொடர்பாக எமது இணையதளத்தின் மற்றுமொரு கட்டுரையாளர் M.ரிஸ்னி முஹம்மட் அவர்கள் ஒரு நேர்காணலை செய்துள்ளார் இந்த நேர்காணலில் எமது கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்களுக்கு அவர் பதில்களை வழங்கியுள்ளார் அவை இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது அதில் லிபியாவில் செயல்படும் இஸ்லாமிய இயக்கம் , எகிப்து, துனீசியா, லிபியா ஆகிய நாடுகளின் இஸ்லாத்தின் எதிர்காலம் நவீன இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியவற்றின் பங்களிப்புகள் போன்ற விடையங்களை கொண்டுள்ளது அந்த நேர்காணல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது எமது கேள்விகளுக்கு அவர் வழங்கியுள்ள பதிகள் நேற்று வரையும் இடம்பெற்றுள்ள அரசியல் கள நகர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது குறிபிடத்தக்கது விரிவாக

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2011 at 9:20 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் முதலை !

leave a comment »

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் முதலைகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எமது lankamuslim.org கிழக்கு செய்தியாளர் தெரிவிக்கின்றார் நேற்று நிந்தவூர் வயல் பகுதி ஒன்றிலும் இரண்டு முதலைகள ஒன்றை ஒன்று மோதிய நிலையில் காணப்பட்டுள்ளது இது தொடர்பாக மக்கள் உசார் ஆவதற்குள் வயல் நீர்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது.

அதேபோன்று அக்கரை பற்று பிரதேச வாவி பகுதியில் முதலைகளின் நடமாட்டம் இருப்பதாகவும் பொத்துவில் பகுதியிலும் இது அதிகமாக கானப்படுவதாகவும் நேற்று முன்தினம் இரவு வேலையில்குடிமனை பகுதிக்குள் நுழைந்த பெரிய முதலை ஒன்று ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு விலங்குகள் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 26, 2011 at 11:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது