Lankamuslim.org

Archive for திசெம்பர் 2010

யாழ் மாநகரசபையின் துணை மேயர் பதவி இன்னும் கிடைக்கவில்லை !

leave a comment »

யாழ் மாநகரசபையின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும், ஒளிவிழாவும் கடந்த திங்கட்கிழமை-27-12-2010-பிற்பகல் நடைபெற்றுள்ளது .

மாநகர சபை மேயர் யோ.பற்குணராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெயனரல் ஜி.ஏ.சந்திரசிறி, முஸ்லிம் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் சர்வமத தலைவர்கள், மாநகர ஆணையாளர் சரவணபவ, மாநகரசபை எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸ் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்துள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2010 at 3:48 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மழையால் வடக்கு நோக்கிய பயணம் தடைப்பட்டது

leave a comment »

புலிபயங்கரவாதிகளினால் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் வாழந்து வந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, தண்ணீர் போன்ற பிரதேசங்களை சேந்த முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் தமது பிரதேசங்களுக்கு சென்று மீள் குடியேற்றதுகான ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள தயாரான நிலையில் தற்போது நாட்டின் பெய்துவரும் கடும் மழை காரணமாக அந்த முயற்சி பிட்போடப்பட்டுள்ளது.

என்று எமது lankamuslim.org புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார் இவர்கள் புத்தளத்தின் பல பகுதிகளில் இருந்து நேற்றும் , இன்றும்  பஸ்களில் புறப்பட்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் மழை காரணமாக அந்த திட்டம் பிட்போடப்பட்டுள்ளது இதற்கான பயண ஏற்பாடுகளை மீள் குடியேற்ற அமைச்சு செய்துள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 1:57 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது நிறுவனங்களின் பெயர் மாற்றம் பெறுகின்றது

leave a comment »

தனியார் நிறுவனங்களில் பெயர் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில்  ‘சிலோன்’ என்று இதுவரை வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த சொல் இனிவரும் காலங்களில் ‘ஸ்ரீ லங்கா’ என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் பிரகாரம் நீண்டகாலம் ‘சிலோன்’ என்ற பெயருடன் இயங்கிவந்த பொது நிறுவனங்கள் ‘சிலோன்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘ஸ்ரீ லங்கா’ என்ற பெயருக்கு மாற்றம் காணவுள்ளது. பான்க் ஒப் சிலோன், சிலோன் பெற்றோலியம் கோப்பரேஷன், சிலோன் இலக்ட்ரிசிட்டி போர்ட் போன்றவைகளும் பெயர் திருத்தத்துக்கு உட்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை மேற்குலகின் ஆக்கிரமிப்பில் இருந்த போது ஆங்கிலேயர்களினால்  ‘சிலோன்’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 1:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டக்களப்பில் 60 ஆயிரம் ஏக்கர் பயிர் நாசம்

leave a comment »

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வேளான்மைச் செய்கை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நெற் பயிர்கள் குடலைப் பருவத்தில் அறக்கொட்டியான் நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ள. இவ்வேளையில் மழை வெள்ளம் காரணமாக அதற்கான கிருமிநாசினியைக் கூட விசிற முடியாத நிலையில் விவசாயிகள் பலரும் தற்போது கவலை கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 12:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் முஸ்லிம்கள் 8 வீதம்: சிறையில் 21 வீதம்

leave a comment »

பஷீர் அலி
இன்று கல்வி முஸ்லிம் சமூகத்தில் காணாமல் போன சொத்தாகப் போயுள்ளது. அதனைத் தேடியெடுத்து சமூகமயப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த கல்வி முன்னேற்றத்திலேயே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் தங்கியுள்ளது என பபுவாநியுகினி இஸ்லாமிய அமைப்பின் தலைவரும் சர்வதேச இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதியுமான தொழிலதிபர் ஏ.எம் பஸ்லுல் ஜிப்ரி தெரிவித்தார். இன்று மாலை கொழும்பில் (2010.12.29) இஸ்லாமிய ஆய்வு அமைப்பு (IRO) ஏற்பாடு செய்திருந்த விஷேட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இஸ்லாமிய ஆய்வு அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபத்தில் தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 at 10:57 முப

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மேலும் இரண்டு பிரதியமைச்சுகள் ?

with 3 comments

எதிர்வரும் ஜனவரி மாதம் மேலும் 8 பேர் பிரதியமைச்சர்கள் பதவியேற்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன இவர்களில் இரண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாகப் பதவியேற்பர் என்று தெரியவருகின்றது அந்த முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு பேர் யார் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கபடுகின்றது

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி இந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொள்வர் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2010 at 3:53 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கை பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகரிக்கும் ?

with one comment

இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களிடம் முஸ்லிம்கள் இழந்துள்ளன நிலம்

இலங்கை இஸ்ரேலையும் அங்கீகரிக்குமான ?: சுதந்திர பலஸ்தீனை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இன்றுவரை  அரசாங்கம் பாலஸ்தீனை கொள்கையளவிலேயே ஏற்றுக் கொண்டிருந்தது. இப்போது முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

பாலஸ்தீனுக்கான  இலங்கைத்தூதுவர் கலாநிதி திஸ்ஸ ஜயசிங்க இது தொடர்பாக கருத்துத்துரைகையில்  உலகின் பல நாடுகள் சுதந்திர பாலஸ்தீனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமையில் மிக நீண்ட காலமாக பாலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் இலங்கையும் சுதந்திர பாலஸ்தீனை அங்கீகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 29, 2010 at 8:56 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது