Lankamuslim.org

One World One Ummah

மட்டக்களப்பு கல்லடிப்பால வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள்

with 4 comments

மட்டக்களப்பு கல்லடிப்பால வாவியில்  பெருந்தொகையான பாம்புகள் நீந்திச் சென்ருகொண்டிருகின்றன. இதை பார்ப்பதற்காக  பல இடங்களிலிருந்தும் பெருமளவிளான மக்கள் கல்லடிப்பாலத்திற்கு விரைந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

வெள்ளை நிறமான இப்பாம்புகள் 3 மற்றும் 4 அடிகள் நீளமானவையாக  இருக்கலாம் என்று பொதுமக்கள் கருத்துதெரிவிக்கின்றனர். இன்று மாலை 8 மணியளவில் இவை முதலில் அவதானிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது   விரிவாக பார்க்க

2006ம்ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்தத்திற்கு முதல் வாரம் இவ்வாறான பெருந்தொகையான பாம்புகள் கல்லடிப்பாலத்தில் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.-

….

அதேபோன்று Nov 1 2004 – ஆண்டும் இவ்வாறான பெருந்தொகையான பாம்புகள் கல்லடிப்பாலத்தில் காணப்பட்டமையும் குறிபிடத்தக்கது – Nov 1 2004 –வெளியான செய்தி

மட்டக்களப்பு வாவியில் திடீரெனப் பிர வேசித்த ஆயிரக்கணக்கான பாம்புகளால் சுமார் 3 மணி நேரம் அப்பிரதேசம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது. நேற்றும், நேற்றுமுன்தினமும் இரவு 7 மணி யளவில் மட்டக்களப்பு, கல்லடிப்பாலத்தின் ஒருமுனையில் வாவியின் மேல் ஆயிரக்கணக் கான தண்ணீர்ப்பாம்புகள் நெளிய ஆரம்பித் தன. தண்ணீரே தெரியாத அளவுக்கு மிகப்பெரு மளவில் பாம்புகள் நீரின் மேல் புரண்டன.

பொலீஸாரின் தகவலையடுத்து அந்த இடத் திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட தலை மையக பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹரிச்சந்திர பண்டார ஊடகவியலாளர்களை அழைத்துப் பாம்புகளைக் காண்பித்தார்.

இரவு 10 மணியாகியும் அப்பாம்புகள் நீரின் மேல் நெளிந்த வண்ணமே இருந்தன. பெரு மளவிலான பொதுமக்கள் பெரும் ஆச்சரியத் துடன் இப்பாம்புகளைப் பார்வையிட்டனர்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 30, 2010 இல் 11:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Pls change the date to 2004

    2004ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதி

    Regards,
    Kattankudi.info

    kattankudi

    திசெம்பர் 1, 2010 at 1:19 முப

  2. திகதி சரியானது குறித்த Nov .2004 என்ற திகதியிலும் இதேபோன்று சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

    lankamuslim

    திசெம்பர் 1, 2010 at 6:02 முப

  3. Are we expecting another Tsunami after one week. Be ware of Tsunami and Make Dua to Allah for safety and to prevent disaster.

    Thowfeek

    திசெம்பர் 1, 2010 at 11:32 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: