Lankamuslim.org

Archive for நவம்பர் 2010

மட்டக்களப்பு கல்லடிப்பால வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள்

with 4 comments

மட்டக்களப்பு கல்லடிப்பால வாவியில்  பெருந்தொகையான பாம்புகள் நீந்திச் சென்ருகொண்டிருகின்றன. இதை பார்ப்பதற்காக  பல இடங்களிலிருந்தும் பெருமளவிளான மக்கள் கல்லடிப்பாலத்திற்கு விரைந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

வெள்ளை நிறமான இப்பாம்புகள் 3 மற்றும் 4 அடிகள் நீளமானவையாக  இருக்கலாம் என்று பொதுமக்கள் கருத்துதெரிவிக்கின்றனர். இன்று மாலை 8 மணியளவில் இவை முதலில் அவதானிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது   விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 30, 2010 at 11:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வக்பு சபையை திறம்பட செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஹக்கீம்

leave a comment »

ரவூப் ஹக்கீம் நீதியமைச்சில் நேற்று திங்கட்கிழமை காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில். முஸ்லிம் பொது சொத்துக்களை நிர்வாகம் செய்யும் வக்பு சபையை திறம்பட செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வக்பு சபை தனது முதல் மாகாண கிளையை கடந்த 8 ஆம் திகதி காத்தான்குடியில் திறந்து வைத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது இக்காரியாலயத்தின் ஊடாக மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகள் என்பவற்றினை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் கொழும்புக்கு சென்று தமது தேவைகளை நிறைவேற்றும் சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 30, 2010 at 4:21 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘ஈரானை தாக்குமாறு அமெரிக்காவை அரபு நாடுகள் கோரியது’ சோடிக்கப்பட்டவை

leave a comment »

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்தியதாக வெளியான தகவலை மறுத்த நஜாத் நஜாத், இது ஈரானை மனோ ரீதியாக தாக்கும் அமெரிக்காவின் போர் தந்திரமே என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 29, 2010 at 9:13 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதன் கிழமை ராசிக் தொடர்பான பெறுபேறுகளை எதிர்பார்கின்றோம்: புத்தளம் பெரிய பள்ளி

leave a comment »

கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி பொலன்னறுவையில் வைத்து கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளரும் முன்னால் கிராம அதிகாரியுமான பட்டானி ராசிக் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் புத்தளம் பெரிய மஸ்ஜித்தில் இரவு 8.30 மணியளவில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் சகோதரர் றியாஜுடன்  புத்தளம் ஜம்இய்யதுல் உலமா, புத்தளம் பெரிய மஸ்ஜித் நிர்வாகம் ஆகியவை கலந்து பேசியுள்ளனர் இதன்போது ராசிக் விடையம் தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் வழங்கிய உறுதி மொழிக்கமைய கடந்த இரண்டு வாரங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பேசும்போது அமைச்சர் பதவியேற்பு மற்றும் பலவேலைப்  பளுக்கள்  காரணமாக முறையான நடவடிக்கைகள் எடுக்கமுடிவவில்லை என்றும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 29, 2010 at 7:02 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன சர்வதேச தினத்தை யொட்டி ஜனாதிபதி செய்தி மற்றும் கண்காட்சி

with one comment

‘நான் பிரதமராக பதவி ஏற்கும் வரையில் இலங்கை – பலஸ்தீன நட்புறவு சங்கத்தின்  தலைவராக இருந்தமையின் மூலம்  எனக்கு பெருமை கிடைத்துள்ளது நான் பலஸ்தீன மக்களுக்கும் அவர்களின் விடையத்திலும் எனது முயற்சிகள் தொடர்வேன்’

– “I was honoured to be founder President of the Sri Lanka Committee for solidarity with Palestine until I took office as prime Minister, and I would continue my efforts to assist the Palestinian people and their cause.” என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த பலஸ்தீன தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார் இன்று  சர்வதேச பலஸ்தீன தினமாகும்.

கொழும்பில் பலஸ்தீன சர்வதேச தினதை யொட்டி  கண்காட்சி ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும்  பயங்கரவாத்தை  எடுத்துக்காட்டும் வகையில் இந்த புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 29, 2010 at 5:41 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிண்ணியாவில் விரைவில் நவீன தொழில்நுட்பக் கல்லூரி

leave a comment »

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் பணிப்புரைக்கமைய கிண்ணியாவில் நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பக் கல்லூரியொன்றை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில்நுட்பக் கல்லூரி நிர்மாணம் தொடர்பான வள ஆய்வுக்காக இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கிண்ணியாவுக்கு விஜயம் செய்திருந்தனர். கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்த இக்குழுவினர் முதலில் பிரதேச செயலாளர் எம்.முபாரக் உடன் கலந்துரையாடல்களை நடத்தினர். தொழில்நுட்பக் கல்லூரி அமையவுள்ள நடு ஊற்றுக் கிராமத்துக்கு விஜயம் செய்த இக்குழுவினர் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட்டுள்ளனர் என்று அறிய முடிகின்றது

Written by lankamuslim

நவம்பர் 29, 2010 at 5:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மற்றுமொரு முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவர் சாட்சியமளிப்பார்

leave a comment »

2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கபட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்    எதிர்வரும் டிசெம்பர் 27ஆம் திகதி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் சாட்சியமளிக்கவுள்ளார்

என்று தெரிய வருகின்றது இதேவேளை ஆணைக் குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாட்சியமளிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது

Written by lankamuslim

நவம்பர் 29, 2010 at 5:40 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது