Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 29th, 2010

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பெயர் மாற்றுகின்றதாம் !

leave a comment »

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பெயர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என மாற்றப்படவுள்ளதாம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள சகல இன மக்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என பெயர் மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்துள்ளார் .

இதன் பிரதான தளமாக வன்னியே உள்ளது எனினும் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியில் இந்த கட்சி தங்கியுள்ள நிலையில் இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் களில் பெரும் பாலானவர்கள் புத்தளத்தை தமது நிரந்தரமான வாழ்விடமாக பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள படும் இந்த வேளையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பலப்படுத்தும் நோக்குடன் இந்த பெயர் மாற்றத்தை செய்யவுள்ளது என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2010 at 10:27 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி மஹிந்த சீனா பயணம்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஷங்காயில் நடைபெறவுள்ள 2010 ஆம் ஆண்டுக்கான எக்ஸ்போ கண்காட்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். ஆயிரம் பார்வையாளர்கள் பங்குபற்றும் இக் கண்காட்சியில் உலக நாடுகளின் இருபது தலைவர்கள் இதில் பங்கு கொள்ளவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சீனத் தலைவரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2010 at 9:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கவே நீதிமன்றத்தை நாடினோம்

leave a comment »

விகிதாசார பிரதிநிதித்துவ அரசியல் முறையில் கைவைக்கும் உத்தேச உள்ளூராட்சி திருத்த சட்ட மூலமானது இரு பெரும் கட்சிகள் மாத்திரம் தங்களுக்கிடையில் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்ளவே வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது அதனைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே நீதிமன்றத்தை நாட வேண்டி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உத்தேச உள்ளுராட்சி திருத்த சட்ட மூலத்தை எதிர்த்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2010 at 9:43 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது